என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில்  திருச்சி வந்தவர் கைது
    X

    மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்தவர் கைது

    • மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கியது.
    • இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    திருச்சி

    மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கியது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்பொழுது ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரி வாங்கி சோதனை செய்தபோது அதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அக்ரமிசியை சேர்ந்த பாலுசாமி மகன் முருகன் (வயது 43) என்று இருந்தது.இதை அடுத்து அந்த நபரிடம் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவருடைய உண்மையான பெயர் ஜெகன் (வயது 40) என்றும் ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் கிராமத்தை சேர்ந்த நாகசாமி என்பவரின் மகன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் அதிகாரிமுகேஷ் ராம் கவுதம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.

    Next Story
    ×