என் மலர்
சிவகங்கை
- ெதாகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
- மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சி முத்துக்கருப்பன்-விசாலாட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கழிப்பறை கட்டுவதற்கு ரூ.10 லட்சமும், கலையரங்கம் அமைப்பதற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் அதனை சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ராம்குமார், மனோ கரன், ராதா பாண்டியராஜன், அஞ்சலிதேவி, ரத்தினம், அமுதா, காங்கிரஸ் நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி அருகே தலையில் கல்லைபோட்டு காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்டார்.
- போலீசார் முருகேசனை கைது செய்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 45). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், முருகே சன் (22) என்ற மகனும் உள்ளனர். சூரக்குடி பகுதி யில் அடைக்கலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் தான் பார்த்து வந்த வியாபாரத்தை விட்டு விட்டு சில ஆண்டு களுக்கு முன்பு அடைக்கலம் வேலைக்காக திருப்பூருக்கு சென்றார். அங்கு ஒரு கம்பெனியில் வேலை பார்த்தபோது அடைக்கலத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடைக்கலம் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெரியகோட்டைக்கு அடைக்கலம் அந்த பெண்ணை அழைத்து வந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த செயல் மகன் முருகேசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தந்தை-மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இரவும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த முருகேசன் தந்தை அடைக்கலம் தலையில் கல்லை போட்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் முருகேசனை கைது செய்த னர்.
வேறொரு பெண்ணை திருமணம் செய்து ெகாண்டு குடும்பம் நடத்தியதால் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இரண்டாம் ஆண்டு தொடக்க விழாயையொட்டி நேஷனல் ஷாப்பிங் மால் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
நெற்குப்பை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அஞ்சப்பர் டவரில் நேஷனல் ஷாப்பிங் மாலின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வாஷிங் மெஷின், பிட்ஜ், 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி., டேபிள் டாப் கிரைண்டர், மிக்ஸி, 100 வாடிக்கையாளர்களுக்கு தோசை தவா உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இவ்விழாவில் நேஷனல் ஷாப்பிங் மால் உரிமையாளர் எம்.முகமது நசுருதீன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
வின்னர்ஸ் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முதல் பரிசு வாஷிங் மெஷின் பெறுபவர் புகழேந்தி ராங்கியம், இரண்டாவது பரிசு பிரிட்ஜ் பெறுபவர் மகாலட்சுமி வளையப்பட்டி, மூன்றாவது பரிசு 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. பெறுபவர் கண்ணன் பொன்னமராவதி, நான்காவது பரிசு டேபிள் டாப் கிரைண்டர் பெறுபவர் தஸ்வின் பொன்னமராவதி, ஐந்தாவது பரிசு மிக்ஸி பெறுபவர் கதிர்வேல் நெற்குப்பை மற்றும் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒன்று வீதம் 100 தோசை தவா வழங்கப்பட்டது.
- தி.மு.க. முன்னாள் எம்.பி. தா.கிருஷ்ணனின் 20-ம் ஆண்டு நினைவு நாள் நாளை நடக்கிறது.
- தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கொம்புக்காரனேந்தலை சேர்ந்தவர் மறைந்த தா.கிருஷ் ணன். முன்னாள் எம்.பி.யான இவர் ஒருங்கிணைந்த ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாள ராகவும், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி னார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி மரணமடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தலில் தா.கிருஷ்ணனின் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் மாவட்ட தி.மு.க. சார்பில் அவரது நினைவை போற்றும் வகையில் கொம்புக்கார னேந்தலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
நாளை (20-ந்தேதி) சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கொம்புக்கார னேந்தலில் உள்ள தா.கிருஷ்ணன் நினைவிடத்தில் சிவகங்கை மாவட்ட செயலா ளரும், அமைச்சருமான கே ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் மலர் அஞ்சலி செலுத்து கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தா.கிருஷ்ணன் குடும்பத்தினர், சிவகங்கை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். நினைவுநாள் நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.க. நிர்வாகி கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேருர் செயலா ளர்கள், சார்பு அணி நிர்வாகி கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்-அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- டாஸ்மாக் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வரும் மதுபான பெட்டிகள் சுமை இறக்கும் தொழிலாளருக்கு கூலி உயர்வு கேட்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுபான பெட்டிகளை கடைகளுக்கு கொண்டு செல்லும் தனியார் ஒப்பந்ததாரர் கடந்த பல ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமலும், அதனை கொடுக்க மறுத்தும் தொழிலாளர் வைப்பு நிதிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது சம்பந்தமாக கலெக்டர், மண்டல மேலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. மதுபான பெட்டிகள் சுமை இருக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சிவகங்ைக மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து மதுபானங்களை ஏற்றாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருந்து அன்னவாசல் கிராமத்துக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அன்னவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
இந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 143 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் தகுதியுடைய 83 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அந்த மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறய தினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்ப டுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு 6.8 கிலோ மீட்டர் தொலைவில் புதிய சாலை அமைப்பதற்கென பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ4.08கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அரசாணை பெறப்பட்டு, பணிகள் ெதாடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ.38லட்சத்து 30ஆயிரத்து 910 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முககையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மாரிமுத்து, அன்னவாசல் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயலட்சுமி, வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை அருகே பெருங்கற்கால இரும்பு ஆலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
- உருக்கு கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வலசை கிராமம் காட்டுப்பகுதியில் தென்னக வரலாற்று மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தருனேஷ்வரன் வரலாற்றுத் துறை பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது இந்தப்பகுதியில் பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்தப்பகுதியில் ஏராள மான பெருங்கற்கால இரும்பு உருக்கு கழிவுகளும், சுமார் 4 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட துண்டு குழாய்களும் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டன. இவை இரும்பு உலைகளை எரியூட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வையாகும்.
ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பு, உருக்கு கழிவுகள் ஆகியவையும் அதிகம் காணப்படுகின்றன. பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பு பொருள்களை தயாரிக்கும் தொழிற்கூடத்தை அமைத்திருக்க வேண்டும்.
சுமார் 2,500 ஆண்டுக ளுக்கு முன்பு இங்கு இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதிமனி தர்கள் வசித்திருக்கலாம். அவர்கள் இரும்பை உலையில் வைத்து தனியாக பிரித்து, அதன் மூலம் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், போன்ற பல பொருள்களை தயாரித்துள்ளதை அறிய முடிகிறது. இந்தப்பகுதியில் இரும்பு உருக்கு கழிவுகள் குவியலாக காணப்படுகிறது, பல துண்டு குழாய்களும் மேற்பரப்பில் கண்டறி யப்பட்டது.
இந்தப்பகுதிகளில் பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளதை பார்க்கும்போது இங்கு காணப்படும் அதிகப் படியான செம்பூரான் கற்களே இதற்கு காரணம் எனலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இளையான்குடி கல்லூரி பேராசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.
- பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர் வாழ்த்தினர்.
மானாமதுரை
தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் கல்வி ரத்னா விருது வழங்கும் விழா நடந்தது. நவாஸ் கனி எம்.பி. கலந்து கொண்டு கற்பித்தல், மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு, ஊக்கம் அளித்தல் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பணியாற்றும் வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் நாசருக்கு கல்வி ரத்னா விருது வழங்கினார். விருதுபெற்ற பேராசிரியரை கல்லூரி ஆட்சிக்குழு, முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர் வாழ்த்தினர்.
- மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மானாமதுரை
மானாமதுரை வைகையாற்றங்கரையில் உள்ள ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு 16 வகையான மூலிகை பொருள்கள் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் பிரகாரம் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆனந்தவல்லி சோமநாதரை தரிசனம் செய்தனர்.
இதேபோல் மேலெநெட்டூரில் கும்பாபிஷேகம் செய்யபட்டு புதுபிக்கப்பட்ட சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வேம்பத்தூர் கைலாசநாதர் ஆவுடையம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் இங்கு உள்ள சிம்ம வாகனத்தில் காட்சி தரும் புதன் பகவானையும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மானாமதுரை பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திற னாளிக ளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாற்றுத்தி றனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் மனு வழங்கினர்.
இந்த கூட்டத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ், அவர்களை பயன்பெறச் செய்து, உரிய பலன்களும் அவர்களுக்கு வழங்கும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது. இதுதவிர, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடனும், பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிடவும், மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு, மாற்றுத்தி றனாளி களுக்கான பல்வேறு வகையான உதவி உபகர ணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தேசிய அடையாள அட்டை வேண்டுதல், ருனுஐனு பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு செய்தல், மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளுதல், பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள், உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவிகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 71 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நேர்முக உதவியாளர் ரத்தினவேல், தனித்துணை கலெக்டர் சாந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
- வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள பூலாவூரணியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் சிவகாசியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் மகேந்திரன்(வயது34), தந்தைக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்து வந்தார். நேற்று வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மகேந்திரன் கடைக்கு வந்து கொண்டிருந்தார். சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் தெய்வக்கனி(வயது45). பட்டாசு தொழிலாளியான இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அப்போது திடீரென தெய்வக்கனி மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தெய்வக்கனி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவிடையார்பட்டியில் கிராம மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருவிடையார்பட்டி பள்ளி அருகே சுகாதாரத்துறை சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் நல்ல தண்ணீர், மழை நீர் எங்கு எங்கு தேங்குகிறதோ அதில் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகி அதன்மூலம் மக்களுக்கு டெங்கு பரவுகிறது. பொது மக்கள் வீட்டில் உடைந்த குடங்கள், டயர்கள், மண்பானைகள், தேங்காய் கொட்டாச்சி ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கினால் அதில் கொசுக்கள் உற்பத்தி யாகும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
டெங்கு காய்ச்சல் வந்தால் மூட்டுவலி, கை கால் வலி தலைபாரம் போன்றவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.






