என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
- மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மானாமதுரை
மானாமதுரை வைகையாற்றங்கரையில் உள்ள ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு 16 வகையான மூலிகை பொருள்கள் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜை செய்து கோவில் பிரகாரம் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆனந்தவல்லி சோமநாதரை தரிசனம் செய்தனர்.
இதேபோல் மேலெநெட்டூரில் கும்பாபிஷேகம் செய்யபட்டு புதுபிக்கப்பட்ட சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வேம்பத்தூர் கைலாசநாதர் ஆவுடையம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் இங்கு உள்ள சிம்ம வாகனத்தில் காட்சி தரும் புதன் பகவானையும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மானாமதுரை பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.