என் மலர்
சிவகங்கை
- இந்திய மருத்துவ கழக மண்டல மாநாடு நடந்தது.
- காரைக்குடி கிளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.
காரைக்குடி
இந்திய மருத்துவக் கழகத்தின் மருத்துவ மனைகள் பிரிவின் மண்டல மாநாடு மற்றும் கருத்தரங்கு காரைக்குடியில் நடந்தது. ஐ.எம்.ஏ. காரைக்குடி கே.எம்.சி. கிளை தலைவர் சந்திரமோகன் வரவேற்றார். மாநில தலைவர் செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார்.அவர் பேசியதாவது:-
இந்த கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகளில் இருந்து மருத்து வர்கள் கலந்து கொண்டு உள்ளனர். காப்பீடு வசதி, மருத்துவக் கழிவு மேலாண்மை, சிறந்த மருத்துவ சேவை வழங்குவது உள்பட பல்வேறு தலைப்பு களில் வல்லுநர்கள் பேசி னர். சிறு மருத்துவமனை களின் நலன் மற்றும் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் விதமாக அரசிற்கு சில கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் நிறை வேற்றியுள்ளோம். அவசர சிகிச்சை அறையில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.
தனியார் மருத்துவ மனைகளுக்கு ஒற்றை சாளர முறையில் தீ லைசென்ஸ், பில்டிங் லைசென்ஸ், சுற்றுச்சூழல் அனுமதி உள்பட அனைத்து அனுமதி களையும் ஆன்லைன் மூலம் மருத்துவமனை அனுமதி யின்போதே வழங்க வேண்டும். மேலும் அவை களை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.மருத்து வர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் மெடிக்கல் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ அறிவுரை வழங்கு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2010-ம் வருடம் முன் கட்டப்பட்ட மருத்துவமனைகளுக்கு இப்போதுள்ள கட்டிட விதிமுறைகளை கோரும் சில உள்ளாட்சி அமைப்பு களின் மீது அரசு கவனம் செலுத்தி புதிய வழிகாட்டு தலை பிறப்பிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவர் காமாட்சி சந்திரன் விருந்தினர்களை கவுரவித்தார். ஐ.எம்.ஏ. காரைக்குடி கிளை செய லாளர் குமரேசன் நன்றி கூறினார்.
- மானாமதுரை அரசு பள்ளி மாணவியை அமைச்சர் பாராட்டினார்.
- முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி இலக்கியாவுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கினார். ஆட்டோ தொழிலாளியான விஜயகுமாரின் மகள் இலக்கியா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 493 மதிப்பெண்கள் பெற்று, சிவகங்கை மாவட்டத்தல் அரசு பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பிடித்தார்.
இந்த நிலையில் மானாமதுரை வந்த அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மாணவி இலக்கியா வீட்டுக்கு சென்று அவருக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 25 ஆயிரம் பரிசாக வழங்கினார்.அப்போது மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் துரை.ராஜாமணி, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- உலர் கழிவு சேகரிப்பு மையம் தொடக்கப்பட்டுள்ளது.
- துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் உலர் கழிவு சேகரிப்பு மையத்தை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மானாமதுரை நகராட்சி பொதுமக்கள் தங்கள் பயன்படுத்திய மற்றவருக்கு உபயோகமான துணிகள், செருப்புகள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை உலர் கழிவு சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்கலாம். மானாமதுரை நகரை குப்பை இல்லாத நக ராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுகுறித்த பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், நகர் மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச் செல்வம், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்ட புதிய கலெக்டராக ஆஷாஅஜித் பொறுப்பேற்றார்.
- அதிகாரிகள் புதிய கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.
சிவகங்கை
தமிழக அரசு அண்மையில் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்தது. அதன்படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டனர்.
சிவகங்கை கலெக்டராக இருந்த மதுசூதன்ரெட்டி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆஷாஅஜித் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் புதிய கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக அறையில் சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஆஷாஅஜித் பொறுப்பேற்று கொண்டார்.
- ரூ.30.50 கோடியில் கூடுதல் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்படுகிறது.
- ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கூடுதல் ஒருங்கி ணைந்த அவசர கால தாய்-சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு கூடுதல் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் 50 படுக்கை கள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 2 தளங்களுடன் ஒருங்கிணைந்த அவசரகால தாய்-சேய் சிகிச்சை மையத்திற்கான கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் 2 கூடுதல் பிரிவு கட்டிடங்க ளுக்கான கட்டுமான பணிகள் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அத்திய வசியமாக விளங்கி வரும் மருத்துவத்தை எளிதாக கிடைக்கப்பெறச் செய்து அவர்களின் உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்து வத்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் அந்த திட்டங்களின் மூலம் பயன்பெற்று உடல்நலதை சிறந்த முறையில் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள கூடுதல் பிரிவு கட்டிடங்களை தரமான முறையில் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சத்தியபாமா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சிவகங்கை யூனியன் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆன்ந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வடவன்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மயில்ராயன்கோட்டை நாடு வடவன்பட்டி கிராமத்தில் முனிநாதர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
முன்னதாக இப்பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் முனி நாதர் பொட்டலிலும், கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.
விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு ஓடிய காளைகளை வீரத்தோடு அடக்க முற்பட்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.
- திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐந்து அடி நீளபாம்பு பிடிபட்டது.
- அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வீட்டில் இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- வியாபாரியை வெட்டிய 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோபாலா. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அனுப்பாண்டி, அழகு பாண்டி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேரும் மனோபாலாவின் கடைக்கு சென்று மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மனோபாலாவுடன் தகராறில் ஈடுபட்டதோடு அரிவாளால் அவரை வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந் அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின்பேரில் மனோபாலாவை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்தது. இ
- தனை கலெக்டர் கேக் வெட்டி கொண்டாடினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 702 மாணவர்க ளும், 9 ஆயிரத்து 30 மாணவி களும் என மொத்தம் 17 ஆயிரத்து 732 பேர் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 390 மாணவர்களும், 8 ஆயிரத்து 904 மாணவிகளும் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து 97.53 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
அதேபோல் அரசு பள்ளி களில் 3 ஆயிரத்து 493 மாணவர்களும், 4 ஆயிரத்து 105 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 311 மாணவர்களும், 4 ஆயிரத்து 12 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அரசு பள்ளி அளவில் மாநில அளவில் 96.38 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் கலெக்டர் மதுசூ தன்ரெட்டி தலைமையில் கல்வி அலுவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
- சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த ஆட்டோ டிரைவரின் மகளுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
- மாணவி இலக்கியா 593 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார்.
மானாமதுரை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநிலஅளவில் 2-வது இடத்தை பெற்றது. இது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவடட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் ஆகியோர் கூறியதாவது:-
தமிழக அளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 278 பள்ளிகளில் 17 ஆயிரத்து 732 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 294 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.53 சதவீத தேர்ச்சி ஆகும்.
2017-2018-ம் ஆண்டு 98.50 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றது. 138 அரசுப் பள்ளிகளில் 68 பள்ளிகள் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 58 பள்ளிகளில் 21 பள்ளிகளும், மெட்ரிக் சுயநிதி பள்ளிகளில் 82 பள்ளிகளில் 57பள்ளிகளும், 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மொத்தமுள்ள 278 பள்ளிகளில் 146 பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் ஆட்டோ தொழிலாளி விஜயகுமார்-ஜெகதா தம்பதியரின் மகளான மானாமதுரை அரசு மகளிர் பள்ளி மாணவி இலக்கியா 593 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார்.
இந்த பள்ளியில் 277 மாணவிகளில் 272 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.53 சதவீத தேர்ச்சி ஆகும். இந்த பள்ளியின் முதல் மாணவி இலக்கியா 8-ம் வகுப்பில் மத்திய அரசின் டேலன்ட் எக்ஸாம் தேர்ச்சி பெற்று மாதம் தோறும் ரூ.1000-ம் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார். மாணவி இலக்கி யாவை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பாராட்டி னார்.
- விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே பெருமானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோரமாக நின்று கொண்டிருந்த மற்றொரு வாகனம் மீது பிரபு மோதி விட்டார். இதில் மாரியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுபற்றிய புகாரின்பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 60). இவர் அதே பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோது விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அருள்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுபற்றிய புகாரின்பேரில் சிவகங்கை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருந்தாளுநர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
- நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை தொடங்கப்பட்டு 11 ஆண்டுகளாகிறது. இங்கு வெளி நோயாளிகள் பிரிவு, 300 படுக்கையறைகள், அவசர சிகிச்சை பிரிவு, தாய்-சேய் நல பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் உள் நோயாளிகளாக ஆயிரத்தி ற்கும் மேற்பட்டோரும், வெளி நோயாளிகளாக 1200க்கும் மேற்பட்டோரும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள புதுக்கோட்டை, ராமநாத புரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்குள்ள வெளிநோயாளிகள் பிரிவில் மருந்து, மாத்திரைகள் வழங்க ஒரு இடம் மட்டுமே உள்ளது. அதிலும் 5 பேரும் மட்டுமே மருந்தாளுநராக பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு 14 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில் 5 பேர் மட்டும் பணிபுரிவதால் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






