search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருங்கற்கால இரும்பு ஆலை எச்சங்கள் கண்டுபிடிப்பு
    X

    நிலத்தின் மேற்பரப்பில் இரும்பு உருக்கு கழிவுகள் குவியலாக காணப்படுகிறது.

    பெருங்கற்கால இரும்பு ஆலை எச்சங்கள் கண்டுபிடிப்பு

    • மானாமதுரை அருகே பெருங்கற்கால இரும்பு ஆலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • உருக்கு கழி­வு­கள் அதி­கம் காணப்­படு­கின்றன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வலசை கிராமம் காட்டுப்பகுதியில் தென்னக வரலாற்று மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தருனேஷ்வரன் வரலாற்றுத் துறை பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனர். அப்போது இந்தப்பகுதியில் பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்தப்பகுதியில் ஏராள மான பெருங்கற்கால இரும்பு உருக்கு கழிவுகளும், சுமார் 4 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட துண்டு குழாய்களும் உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டன. இவை இரும்பு உலைகளை எரியூட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வையாகும்.

    ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்பு, உருக்கு கழிவுகள் ஆகியவையும் அதிகம் காணப்படுகின்றன. பழங்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் இரும்பு பொருள்களை தயாரிக்கும் தொழிற்கூடத்தை அமைத்திருக்க வேண்டும்.

    சுமார் 2,500 ஆண்டுக ளுக்கு முன்பு இங்கு இரும்பு காலத்தில் வாழ்ந்த ஆதிமனி தர்கள் வசித்திருக்கலாம். அவர்கள் இரும்பை உலையில் வைத்து தனியாக பிரித்து, அதன் மூலம் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், போன்ற பல பொருள்களை தயாரித்துள்ளதை அறிய முடிகிறது. இந்தப்பகுதியில் இரும்பு உருக்கு கழிவுகள் குவியலாக காணப்படுகிறது, பல துண்டு குழாய்களும் மேற்பரப்பில் கண்டறி யப்பட்டது.

    இந்தப்பகுதிகளில் பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்காலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளதை பார்க்கும்போது இங்கு காணப்படும் அதிகப் படியான செம்பூரான் கற்களே இதற்கு காரணம் எனலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×