ெதாகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு

ெதாகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ெதாகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு
Published on

காரைக்குடி

காரைக்குடி நகராட்சி முத்துக்கருப்பன்-விசாலாட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கழிப்பறை கட்டுவதற்கு ரூ.10 லட்சமும், கலையரங்கம் அமைப்பதற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் அதனை சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ராம்குமார், மனோ கரன், ராதா பாண்டியராஜன், அஞ்சலிதேவி, ரத்தினம், அமுதா, காங்கிரஸ் நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com