என் மலர்
சிவகங்கை
- புதிய மின்னணு குடும்ப அட்டை நேரில் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.
- மேற்படி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் பொது விநியோக திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதா ரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலமாக நேரில் வழங்கப்படுகிறது.
மேலும் நகல் குடும்ப அட்டைகள் கேட்டு ரூ.45 செலுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அஞ்சல்துறை வாயிலாக அவர்களது முகவரிக்கு நகல் அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்படி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருமேனி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல்புதூர் கிராமத்தில் உள்ள திருமேனி கருப்பர் மின்னஞ்செட்டி காளியாத்தாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மூன்று நாட்கள் 4 கால பூஜைகள் நடந்தது. இதில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி மற்றும் தீப ஆராதனை நடந்தது. பின்னர் நமசிவாய சிவாச்சாரியார் குழுவினர் தலைமையில் யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி விமானத்தில் ஏறி சென்று கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேலச்சுவபுரி, தேனிப்பட்டி, கீழசேவல்பட்டி, ஓ.சிறுவயல், நாச்சியாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வைரவன் கோவில் பிள்ளையார்பட்டி வகுப்பு நகரத்தார்கள் மற்றும் விழா குழு நிர்வாகிகள் தலைவர் நாகப்பன், செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.
- சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் இடத்தை ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.
- காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை களில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை போன்ற மருத்துவமனை களில் மட்டுமே டயாலிசிஸ் பிரிவு சிகிச்சைக்கான தனி பிரிவு உள்ளது.
ஆனால் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் டயாலிசிஸ் சிகிச்சை முறை செய்து கொள்ள வேண்டிய நோயாளிகள் மதுரை, சிவகங்கை போன்ற நகரங்க ளுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.
எனவே சிங்கம்புணரி பகுதியில் உள்ள டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளி களுக்காக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையில் டயாலிசிஸ் பிரிவு சிகிச்சை கொண்டுவர அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
அதன்அடிப்படையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்க ளவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் பொது நிதியின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ள மாநிலங்கள் அவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணி நடைபெற்றது.
முன்னதாக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் வரவேற்றார். மருத்துவ மனை வளாகத்தை ஆய்வு செய்த ப.சிதம்பரம் டயாலிசிஸ் சிகிச்சைக்கான புதிய கட்டிடம் கட்டப்படும் இடம் குறித்து தலைமை மருத்துவர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை செய்தார்.
ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, பேரூராட்சி கவுன்சிலரும் சிங்கம்புணரி நகர காங்கிரஸ் தலைவரு மான தாயுமானவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் காங்கி ரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
- கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது.
- கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெளியாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கருஞ்சி வலையபட்டி கிராமத்தில் கரந்தமலை கருப்பர், வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கிடா வெட்டு திருவிழா திருவிழா நடந்தது. முன்னதாக 2-ந் ேததி மது எடுப்பு விழா நடந்தது.
தொடர்ந்து மறுநாள் அருகருகே அமைந்துள்ள கருப்பருக்கும், வீரமாகாளிக்கும் பூ அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து வாளுக்கு வேலி வகையறா சார்பில் நேர்த்திக்கடனாக 9 கிடாய்கள் வெட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கறி விருந்து உபச்சார விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்றனர்.
இப்பகுதியில் பிறந்து திருமணம் முடித்துச் சென்ற பெண்கள் இங்கு வந்து சேவல், கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முடிவில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை வாளுக்கு வேலி வகையறா பங்காளிகள், மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
- உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.
எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசின் பயனுள்ள திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
- கலெக்டர் ஆஷா அஜீத் வலியுறுத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விவசாயி களுக்கு அரசின் திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ஆய்வின்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கி வருகிறது. வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மை கேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ் துளை கிணறு ஏற்படுத்துதல் மற்றும் காய்கறி, பழ விதைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்க ளின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கப்பட்டு வரு கிறது.
அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களை மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளில் வசிக்கும் விவசாய பெருங்குடி மக்க ளுக்கும் கிடைக்கப்பெற செய்யும் வகையில் துறை ரீதியாக சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட செயல்பாடுகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் உரிய களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகி றது. அதனை, விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு அத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று தங்களது வாழ்வாதா ரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியத்திற் குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மிகப்பெரிய ஊராட்சியாகும். இங்கு நடந்த தலைவர் பதவி தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப் பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி ஊராட்சி தலைவியாக தேவி மாங்குடி பொறுப் பேற்றார்.
இந்தநிலையில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றப்படவில்லை என அவ்வப்போது தர்ணா, ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன், பா.ஜனதா உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி, செயலாளர் துரைப்பாண்டி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து துணை தலைவர் பாண்டியராஜன் கூறுகையில், ஒரு சிலருக்கு வரி ரசீது வழங்குவதில் பாரபட்சம் நிலவுகிறது.மக்களின் அடிப்படை வசதி கள் உடனடியாக நிறை வேற்றப்பட வேண்டும் என்றார்.
தேவி மாங்குடி (தலைவர்) கூறுகையில், மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன.துணைத்தலைவர் மற்றும் ஒருசில உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றார்.
ஆர்ப்பாட்டம் நடத்திய வர்களிடம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, துணை தாசில்தார் சிவராமன், காவல் ஆய்வாளர் ரவீந்தி ரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சின்னடைக்கி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே செ.மணப்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான பிடாரி கருப்ப சுவாமி, சின்னடைக்கி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாகசாை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, பஞ்ச கவ்விய பூஜை, மகா கணபதி ஹோமம், உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
நேற்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- திருத்தளி நாதர் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனுறை திருத்தளிநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த
24-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், பிரியா விடை அம்மன், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்தனர்.
5-ம் திருநாளான்று திருத்தளிநாதருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ெதாடர்ந்து 9-ம் நாளில் தேரோட்டம் நடந்தது. முதல் தேரில் விநாயகரும், நடுத்தேரில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதரும், 3-வது தேரில் சிவகாமி அம்மனும் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் 10-ம் நாளான நேற்று இரவு கோவில் சீதளி குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். வான வேடிக்கை முழங்க தெப்பம் சீதளி குளத்தை வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.
- மதுக்கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை
தமிழகத்தில் தற்போது அரசு மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தேவ கோட்டை கோட்டாட்சியர் பால்துரை நகரில் உள்ள அரசு மதுபான கடைகளில் ஆய்வு செய்தார்.
மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? மதுபாட்டில் அரசு விலைப்பட்டியல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். மது கடைகளில் அரசு விலை பட்டியல் நுகர்வோருக்கு தெரியும் படி இருக்க வேண்டும் என்று பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
அனுமதி இல்லாத பார்கள் செயல்படுகிறா? டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் பணியில் உள்ளார்களா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
பார்கள் இல்லாத மது கடைகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், தரமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.
- கண்ணுடையநாயகி அம்மன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளினார்.
- இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளது. தென் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் முக்கியமான கோவிலாகும்.
இங்கு கடந்த மே மாதம் 24-ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்து டன் விழா தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய விழாவான வெள்ளி ரத புறப்பாடு நேற்று இரவு நடைபெற்றது.
வண்ண மலர்களாலும் வண்ணமின் விளக்கு களாலும் அலங்கரிக்கப் பட்டவெள்ளி தேரில் தேரோடும் வீதிகளில் கண்ணுடைய நாயகி அம்மன் பவனி வந்தார். விழாவில் தென் மாவட்டங்க ளில் இருந்தும் மலேசியா சிங்கப்பூர் மற்றும் வெளி நாடு நகரத்தார் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
இன்றுவெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உத்திரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, கண்காணிப் பாளர் ஜெயகணேசன், மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தார்கள்.
முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும், முடி இறக்கி தங்களது வேண்டு தலை நிறைவேற்றினார்கள்.
- தர்ம முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மானம்பாக்கி யில் தெற்கு எல்கையில் அமைந்துள்ள தர்ம முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி கோவில் அருகே யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன.
4-ம்கால பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதியானதும் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் புனித நீர் கடங்களை சுமந்து மேளதாளம் முழங்க கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.
அதன் பின்னர் தர்ம முனீஸ்வரர் மூலவர் விமானக்கோபுர கலசத்தின் மீதும் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்கள் மீதும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் நடத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கெண்டனர்.






