search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karuppar Temple"

    • நெற்குப்பையில் சொக்கலிங்க கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சொக்காண்டான் பங்காளி வகையறாக்கள் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மேலநெற்குப்பை நவனிக் களம் பகுதியில் அமைந் துள்ள சொக்கலிங்கம் கருப் பர் பொன்னழகி அம்மன் ஆலய கோவில் வீடு 20 வருடங்களுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக 2 நாட் கள் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாக வேள்வியில் மூன்று கால பூஜையாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக் கிரக ஹோமம் போன்ற பல்வேறு ஹோமங்களோடு பூர்ணாகுதி தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி வைக்கப்பட்டதை தலையில் சுமந்தவாறு பக்தர்கள் கோவில் வீட்டை வலம் வந்தனர்.

    அதனை தொடர்ந்து கலச நீருடன் கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    பின்பு பரிகார தெய்வங்களுக்கும் அபிஷேக நிகழ்ச்சியும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சொக்காண்டான் பங்காளி வகையறாக்கள் செய்திருந்தனர். இவ்விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • திருமேனி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல்புதூர் கிராமத்தில் உள்ள திருமேனி கருப்பர் மின்னஞ்செட்டி காளியாத்தாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மூன்று நாட்கள் 4 கால பூஜைகள் நடந்தது. இதில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி மற்றும் தீப ஆராதனை நடந்தது. பின்னர் நமசிவாய சிவாச்சாரியார் குழுவினர் தலைமையில் யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி விமானத்தில் ஏறி சென்று கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேலச்சுவபுரி, தேனிப்பட்டி, கீழசேவல்பட்டி, ஓ.சிறுவயல், நாச்சியாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வைரவன் கோவில் பிள்ளையார்பட்டி வகுப்பு நகரத்தார்கள் மற்றும் விழா குழு நிர்வாகிகள் தலைவர் நாகப்பன், செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×