என் மலர்
சிவகங்கை
- சிவகங்கையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
- ரூ. 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சிவகங்கை
சிவகங்கையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி பேசியதாவது:-
பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.அனைவருக்கும் வீடு, துாய்மை இந்தியா வீடுகளுக்கான கழிப்பறை, பொது கழிப்பறை, வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டம், அனைவருக்கும் கியாஸ் சிலிண்டர், இலவச வங்கி கணக்கு, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி, முத்ரா கடன் திட்டம் , மலிவு விலை மக்கள் மருந்தகங்கள், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, இலவச உணவு தானியம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மட்டும் 9.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சத்திய நாதன், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், மாவட்ட பார்வையாளர் சண்முகராஜா, மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ்குமார், சுகனேசுவரி, மாவட்ட செயலாளர் கந்த சாமி, சங்கரசுப்பிரமணியன், நகர தலைவர் உதயா, மண்டல தலைவர்கள் பில்லப்பன், மயில்சாமி, லோகுமுனியாண்டி, விவசாய அணி பொது செயலாளர் சரவணன், ஓ.பி.சி., அணி செயற்குழு உறுப்பினர் நாகேசுவரன், ஒன்றிய பொது செயலாளர் பரமசிவம் உள்பட நிர்வாகி கள் பங்கேற்றனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்
சிவகங்கை
திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாஷ் மற்றும் போலீசார் சைனாபுரம், டி.புதூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டி கடையில் விற்பனை செய்த சைனாபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (46), டி.புதூர் பகுதியை சேர்ந்த மெஹாராஜிபேகம் (38) ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெரிய கோட்டை புதைகுழி பகுதி அருகே பெரியகோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம், புயல் ராமன், நேதாஜி, செல்வம், அழகன் ஆகிய 5பேர் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.6½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.
- பொது மக்களிடம் இருந்து 345 மனுக்கள் பெறப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனா ளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து 345 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜீத் அறிவு றுத்தினார். தொடர்ந்து 14 பயனாளி களுக்கு ரூ6.50லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிக ளையும், அதன் பயன்களையும் கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கோட்டீஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
- தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெற செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இளையாத்தங்குடி உள்வட்டம் தெற்கு இளையாத்தங்குடி குரூப், விராமதி கிராமத்தில், நாளை 7-ந் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகராட்சி தலைவர் ெதாடங்கி வைத்தார்.
- இந்த கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.
மானாமதுரை
மானாமதுரையில் தமிழக அரசின் தூய்மை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சி அலுவலகம் அருகே வைகை ஆற்றங்கரையோரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகர் மன்றத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நகர் மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி கூறுகையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் நகரங்களில் தூய்மை இயக்கத்தின் சார்பில் மானாமதுரை நகராட்சியில் பல இடங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இக்கன்றுகள் நகராட்சி பணியாளர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என்றார்.
- சாகிர் உசேன் கல்லூரியில் புதிய முதல்வர் பதவியேற்றார்.
- முதல்வராக பணியாற்றிய அப்பாஸ் மந்திரி பணிஓய்வு பெற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய அப்பாஸ் மந்திரி பணிஓய்வு பெற்றார். இதையடுத்து வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லாஹ் கான் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் மற்றும் உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், உஸ்மான் அலி ஆகியோர் முன்னிலையில் ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன் புதிய முதல்வர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
கல்லூரி துணைமுதல்வர், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- அதிக மதிப்பெண் பெற்ற கிராமபுற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
- இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே குன்னங்கோட்டை, கீழப்பங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் குன்னங்கோட்டை கள்ளர் பேரவை அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
முதல் மதிப்பெண் எடுத்த காளீஸ்வரன் என்ற மாணவனுக்கும், 2-வது மதிப்பெண் பெற்ற திருவிளங்கை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவனுக்கும், மாலைகண்டனைச் சேர்ந்த தமிழரசனுக்கும், தேவபட்டு சசிகலா என்ற மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கபட்டது.
இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- சேர்மன் திவ்யா பிரபு, ஒன்றிய செயலாளர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் பேரூர்களில் அ.தி.மு.க. மகளிர் அணி, மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறைகளுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடந்தன. முகாமிற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு, நகரச் செயலாளர் இப்ராஹிம்சா, திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி, துணைச் செயலாளர் சின்னையா, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்களான சபா ராஜாமுகமது, ஆசிப் இக்பால், எம்ஜிஆர் மன்ற செயலாளர் முத்துகிருஷ்ணன், துணைச் செயலாளர் துலாவூர் பார்த்திபன், எஸ்.புதூர் சேர்மன் குமரன், ஒன்றிய செயலாளர் கருப்பையா, ராஜமாணிக்கம், துணைச் செயலாளர் கருப்பையா, சிங்கம்புணரி ஒன்றிய சேர்மன் திவ்யா பிரபு, ஒன்றிய செயலாளர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்பட்டது.
- நாச்சியார், சண்முகராஜா மற்றும் தனி யார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை நகரின் மத்தியில் 10 ஏக்கர் பரப்பில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு பிளாஸ்டிக், குப்பை கள் கொட்டப்பட்டு தண்ணீர் அசுத்தமானது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவியது.
இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெப்பக்கு ளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. இதனை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பாண்டீ ஸ்வரி தலைமையில் ஏராளமானோர் படகில் சென்று தெப்பக்குளத்தில் கிடந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.
இதில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதில் நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான், ஜெய காந்தன், காந்தி, ராமதாஸ், வீரகாளை, நாச்சியார், சண்முகராஜா மற்றும் தனி யார் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- ஒத்தவீடு கிளை செய லாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மணலூர் ஊராட்சி பூத் எண். 39, 40-ன் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணலூர் மணி மாறன் முன்னிலை வகித்தார்.
மானாமதுரை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், வருகிற நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெறவும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர், மகளிர் உறுப்பி னர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர் பான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகுமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவா, மணலூர் கிளை செயலாளர்கள் வீர மணி, அழகர், பிரபு, தயாளன், வெங்கட்ரமணி, மண லூர் ஒத்தவீடு கிளை செயலாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- எலக்ட்ரீசியன் மாயமானார்.
- இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே சின்னபெருமாள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன், எலக்ட்ரீ சியன். வேலைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியனின் தந்தை அழகர் கொடுத்த புகாரி ன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டசாமி வழக்கு ப்பதிவு செய்து வாலிபரை தேடி வருகிறார்.
- மினி மராத்தான் போட்டி நடந்தது.
- வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாம்பட்டி கிராமத்தில் பிரியாவிடை நயனார், பொன்னாவிடை செல்வி தீர்த்தவாரி மண்டகப்படி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு மாம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.
இந்த மினி மராத்தான் ஓட்டப்பந்தயம் மாம்பட்டி யில் தொடங்கி ஏரியூர் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று வர எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
போட்டியினை எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காளீஸ்வரி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர்.
ராஜபாளையத்தை சேர்ந்த மாரி பிரசாத் முதல் பரிசையும், ரெங்கராஜ் 2-வது பரிசையும், 3-வது பரிசை பெங்களூரு சுரேசும் பெற்றனர். மினி மராத்தான் போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங் களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை, வெற்றி கோப்பை, பாராட்டு சான்றி தழ், பதக்கங்கள் வழங்கி கவுரவப்படுத்தினர். அடுத்து வந்த 10 பேருக்கு ஊக்கத் தொகையாக பரிசு தொகை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்ற 70 வயது முதியவர் கலந்து கொண்டு எல்கையை அடைந்தார். அதோடு பெரம்பலூரை சேர்ந்த ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் மற்றும் தனது மகள் ஓடியபோது உற்சாகப்படுத்திய தாய் என பலருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக கிராமத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி களில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.






