மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெற செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.
மக்கள் தொடர்பு முகாம்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இளையாத்தங்குடி உள்வட்டம் தெற்கு இளையாத்தங்குடி குரூப், விராமதி கிராமத்தில், நாளை 7-ந் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com