என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மின்னணு"

    • புதிய மின்னணு குடும்ப அட்டை நேரில் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.
    • மேற்படி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் பொது விநியோக திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதா ரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலமாக நேரில் வழங்கப்படுகிறது.

    மேலும் நகல் குடும்ப அட்டைகள் கேட்டு ரூ.45 செலுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அஞ்சல்துறை வாயிலாக அவர்களது முகவரிக்கு நகல் அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்படி சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×