என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அம்மன் கோவிலில் மாசி திருவிழாவில் அரிவாள் மீது நின்று பக்தர்கள் அருள்வாக்கு கூறினர்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூரில் கடம்பவன காமாட்சி அம்மன் கோவிலில்  நடந்த மாசி திருவிழாவில் பக்தர்கள் கரகம் சுமந்து சாமியாடி வந்து அரிவாள்மீது நின்று அருள்வாக்கு கூறினர். 

    இந்த கோவிலில் மாசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவில் குடிமக்கள் கோவிலில் இருந்து மாலையில்  பூஜைப் பெட்டிகளுடன்  அருகே உள்ள வைகை ஆற்றுக்கு புறப்பட்டனர். இரவு வைகை ஆற்றில் இருந்து கரகம் சுமந்து சாமி ஆடியபடி மேளதாளம், வாண வேடிக்கையுடன்  கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். 

    கோவிலுக்கு  அருகே சாமியாடிகள் அரிவாள் மீது நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினர். அதைத்தொடர்ந்து  காமாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று உள்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அதன்பின் மூலவர் காமாட்சி அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. 

    2ம் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் காலை சிவகணபதி கோவில் முன்பிருந்து காமாட்சி அம்மனுக்கு பால்குடங்கள் எடுத்து செய்களத்தூர் கிராமத்தை வலம் வந்து கோவிலுக்கு  வந்தடைந்தனர். அதன் பின்னர் மூலவர் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் உலக நன்மைக் காக  திருவிளக்கு பூஜை  வழிபாடும் நடந்தது.   

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுத்தலைவர் நாகு பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள நாகராஜன்,  அன்புக்குமார்,  யாழ்முருகன், முத்துப் பாண்டியன், திருஞானம், சரவணன், ராஜா, பழனியப்பன் மற்றும் கோவில்  பங்காளிகள் செய்திருந்தனர்.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே நல்லாங்குடி கிராமத்திலுள்ள வேம்புடைய அய்யனார், கருப்பர், காளியம்மன், அக்னி காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் நல்லாங்குடி, வெளிமுத்தி, இரவுசேரி, சாத்திக் கோட்டை, தளக்காவயல் மற்றும் நூற்றுக்கும் மேற் பட்ட கிராம மக்களுக்கு குல தெய்வமாக இருந்து வருகிறது. கோவிலில் வேம்புடைய அய்யனார், காளியம்மன், கருப்பருக்கு விமான கோபுரமும் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புதியதாக சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது.

    இந்த திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 12ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

    இதனை தொடர்ந்து இன்று காலை 4ம் கால யாகபூஜை, தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி தொடர்ந்து காலை 5மணியளவில் அக்னி காளியம்மன் ஆலயத்தில் கலசங்களுக்கு புனிதநீர் சிவாச்சாரியார்கள் ஊற்றினார்கள்.
    அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு யாக சாலையில் இருந்து மேள தாளத்துடன் சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களுடன் காலை 6மணிக்கு  புறப்பாடாகி 6.50மணியளவில் கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதியில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகமும் நடைபெற்று அனைவருக்கும் பிரசாதங்களும், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    திருப்புவனம் அருகே உள்ள முடிகண்டம் கிராமத்துக்கு புதிய பஸ்வசதியை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வழியாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து முடிகண்டம் கிராமத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்து வசதியை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

    பஸ்போக்குவரத்து இல்லாத கிராமபகுதிகள்  முழுவதற்கும் புதிய வழிதடத்தில் பஸ் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதன் மூலம் ஏராளமான கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பயனடைய வாய்ப்பு உள்ளது என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.  மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்-திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.



    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 16ந்தேதி மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாற்றுத் திறனுடைய குழந்தைக ளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு, மருத்துவ மதிப்பீட்டு முகாம் 12 ஒன்றியங்களிலும் வருகிற 16ந்தேதி முதல் முதல் 7ந்தேதி வரை நடைபெற உள்ளது.  

    இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கான கலந்தாலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. 

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், இணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் மருத்துவப்பணிகள்), மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், திட்ட ஒருங்கிணைப்பாளர், (முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்), சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி), உதவித் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இந்த  மருத்துவ முகாம்க ளின் வாயிலாக  பிறப்பு முதல் 18வயது வரையுள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகளை மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 2021&22ம் கல்வி யாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் முன்தொடக்கநிலை, தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவிகள் அனைவரையும் இந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    அதன்படி, அதிக எண்ணிக்கையிலான மாற்றுத்திறனுடய குழந்தைகள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இம்மருத்துவ முகாம்களை நடத்திட மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார் வையாளர்கள் (பொ), வட்டார ஒருங் கிணைப்பாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை பயிற் றுநர்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க அறி வுறுத்தப்பட்டுள்ளது.
     
    மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 12ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனுடைய மாணவ மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது.

    16ந்தேதி (புதன்கிழமை) திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாத்திமா நடுநிலைப்பள்ளி, பஸ்நிலையம் அருகிலும், 17&ந் தேதி (வியாழக்கிழமை) கல்லல் ஊராட்சி ஒன்றியம், அரசு பெண்கள் உயர்¢நிலைப்பள்ளியிலும், 18ந்தேதி (வெள்ளிக்கிழமை) சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், காரைக்குடி பி.ஆர்.என்.சி. நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், அனுமந்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,  தேதி (புதன்கிழமை) அன்று தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.

    24ந்தேதி (வியாழக்கிழமை) திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும்,  25ந் தேதி (வெள்ளிக்கிழமை) எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், வி.புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 29ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 30ந்தேதி (புதன்கிழமை) அன்று மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், ஓ.வி.சி. மேல்நிலைப்பள்ளி, பழைய பஸ்நிலையம் அருகிலும், 5ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், இளையான்குடி மேல்நிலைப்பள்ளியிலும், 6ந்தேதி (புதன்கிழமை) காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், 7ந்தேதி (வியாழக்கிழமை) சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளியிலும் காலை 9.30 மணி முதல் மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறுகிறது.

    தேவகோட்டை அருகே காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    தேவகோட்டை,

    தேவகோட்டை அருகே கோட்டூர் நயினார்வயல் கிராமத்தில் உள்ள மகா காளியம்மன், குதிரை மகா கருப்பர், பறவை சித்தர் பெத்தாயி அம்மாள் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருஷாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
     
    மாலை 7.00 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். குடும்பம் விருத்தி அடையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டி இளம் பெண்களும், மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். விழாவில் தேவகோட்டை சுற்றியுள்ள நயினார்வயல், கோட்டூர், பெரியாரை, அடசிவயல், கள்ளிக்குடி, சேண்டல்பிரி யன், வேலாயுதபட்டினம், வீரரை, நாச்சாங்குளம் மற்றும் 50&க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர் இறுதியாக சுமார் 600 க்கும் மேற் பட்டவர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. 

    சிறப்பு அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    பிடிபடும் பாம்புகளை வன பகுதியில் விட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து அடிக்கடி நல்ல பாம்பு, சாரை பாம்பு, மலைப்பாம்பு, என அனைத்து வகையான விஷ பாம்புகளும் ஊடுருவி வருகிறது இதனால் குடியிருப்புவாசிகளும் மற்றும் பொது மக்களும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

    இதுகுறித்து இந்தப்பகுதி மக்கள் கூறுகையில், தற்சமயம் கோடை காலம் என்பதால் உணவு தேவைக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும், பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவி வருவதோடு மட்டுமல்லாமல் அங்கு வளர்க்கும் பிராணிகளான கோழி, ஆடு முதலியவற்றை விழுங்கி விடுகிறது.

    சில சமயங்களில் வீட்டின் பின்புறங்களில் உள்ள தோட்டங்களில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக தங்கியும் விடுகிறது. பிடிபடும் பாம்புகளை தீயணைப்புத் துறையினர் அருகாமையிலுள்ள உள்ள காட்டுப் பகுதிக்குள் கொண்டுபோய் விடாமல் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள அடர்ந்த மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் கொண்டு போய்விடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த 2 வாரங்களில் 5-க்கும் மேற்பட்ட பாம்புகள் திருப்பத்தூர் நகர் பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பிடிபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    சிவகங்கை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவருமான சுமதி சாய்பிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:&
     -
    சிவகங்கை மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவை யில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக தேசிய சட்ட பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் நாளை (12&ந் தேதி) நடைபெற உள்ளது.

    இதில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை குறித்த வழக்குகள், தொழிலாளர் பிரச்சினை குறித்த வழக்குகள், சமரச குற்ற வழக்குகள் ஆகியவைகளில் தீர்வு காணலாம். 

    தேசிய மக்கள் நீதிமன் றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய இயலாது. அதுபோல் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு ஏற்கனவே செலுத்தியுள்ள நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள லாம்.

    இதனால் வழக்கு தரப்பி னர்கள் நீதிமன்றங்களுக்கு வருவதால் ஏற்படும் கால விரயம் மற்றும் பண செலவை தவிர்க்கலாம். நாளை நடைபெற உள்ள மக்கள் நீதிமன்றத்தில் சிவகங்கை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 16 ஆயிரத்து 581 வழக்குகளில் சமரச தீர்வு காணக்கூடிய 1,453 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

    இது தவிர நீதிமன்றத்தில் இல்லாத வழக்குகளையும் கொடுக்கலாம். இங்கு இரு தரப்பினரும் பேசி வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெரு 2-வது வீதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்தவர் ராமராக்கு என்ற செல்வி (வயது 65). சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவரது கணவர் தமிழரசன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றா£ல் இறந்தார். 

    இந்த நிலையில் ராமராக்கு மகன் ராஜாராமுடன் வசித்து வந்தார். ராஜாராமுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.  அது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. 

    இந்த வழக்கு தொடர்பாக ராஜாராம் தஞ்சாவூர் நீதிமன்றத்திற்கு காலை 7 மணிக்கு சென்றார். இவரது தாய் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். 

    ராஜாராம் தாயை போனில் காலை 11 மணிக்கு தொடர்பு கொண்டு பேசும்போது சமைத்துக் கொண்டி ருப்பதாக கூறியவர், மீண்டும் மதியம் ஒரு மணிக்கு மகன் ராஜாராம் தன் தாய்க்கு போன் செய்தார். அப்போது போன் அனைத்து வைக்கப் பட்டிருந்தது. 

    இதனையடுத்து அருகில் இருந்தவர்களை அழைத்து வீட்டில் சென்று பார்க்கச் சொன்னபோது பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறையில் மூதாட்டி ராமராக்கு மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். 

    பின்பு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்து பரிசோதனை செய்ததில் ராமராக்கு இறந்து விட்டதாக கூறினர். 

    இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மூதாட்டியின் மகன், மகளுக்கு தகவல் தெரிவித்தனர். மதுரையில் இருந்து இளைய மகள் பூவேணி சம்பவ இடத்திற்கு வந்தார்.  வாயில் ரத்த கசிவுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த தாயை பார்த்து கதறி அழுதார். 

    இதுகுறித்து திருப்பத்தூர்  டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.
     
    அப்போது  தனது தாயை யாரோ கொலை செய்துவிட்டனர் என கூறி அழுதபடி, இவரது மகள் தனது தாய் கழுத்தில் அணிந்திருந்த செயின், கையில் இருந்த வளையல் மற்றும் செல்போன் காணவில்லை என்றும், தெரிவித்ததை அடுத்து திருப்பத்தூர் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொலையா அல்லது வேறேதும் காரணமா?  என விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கடினமான கால கட்டத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக எச்.ராஜா கூறினார்.
    காரைக்குடி


    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சிக்கு வந்ததில்லை. அதை உடைத்து 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ளது.முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததால் முஸ்லிம் பெண்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு உள்ளது. ராகுல்காந்தி ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்லும்போது பல வகையான வேடங்களை போடுகிறார். அதனால் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.

    நாடு முழுவதும் பா.ஜ.க. அலை அடிக்கிறது. இதில் தமிழகம் மட்டும் தப்பித்துக் கொள்ள முடியாது.  ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள காங்கிரசிற்கு மக்கள் எச்சரிப்பதற்காக விழிப்புணர்வு மணி அடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 எக்ஸ்ட்ரா லக்கேஜ் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி. இவர்களை தூக்கி எறியாமல் காங்கிரசிற்கு இனிமேல் எதிர்காலம் கிடையாது. 

    காங்கிரசில் உள்ள 23 மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து காங்கிரசை எந்த மாதிரி கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்வார்கள் என்று நினைக்கின்றேன். 

    லவ் ஜிகாத் தமிழ் நாட்டில் நடந்துள்ளது. அதற்கு உதாரணம் மேலூர் சம்பவம் ஆகும். கடினமான காலகட்டத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. சாதாரண நாட்களில் தேர்தல் நடந்திருந்தால் எதிர்க்கட்சிகள் இருந்த இடமே தெரியாமல் போயிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கை அருகே டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளி மீட்கப்பட்டார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் அறிவரையின் பேரில் காரைக்குடி, ஆத்தங்குடி பகுதியில் குழந்தை தொழிலாளர் இருப்பதாக “சைல்டு லைன்” மூலம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில்  தொழிலாளர் உதவி ஆய்வாளர் கதிரவன்,  காவல் உதவி ஆய்வாளர் அல்போன்ஸ், கிராம நிர்வாக அலுவலர் அர்ச் சுனன்,  சைல்டு லைன் குழு உறுப்பினர் ஹரிகரன் ஆகியோர் காரைக்குடி, ஆத்தங்குடி பகுதியில் ஆய்வு செய்தனர்.

     அப்போது “டைல்ஸ்” நிறுவனத்தில் பணிபுரிந்த 13 வயதிற்குட்பட்ட சிறுவன் மீட்கப்பட்டான். இதை யடுத்து நிறுவன உரிமை யாளர் மீது குழந்தை தொழி லாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

     2021-ம் ஆண்டு முதல் கடந்தமாதம்  பிப்ரவரி வரையிலான காலத்தில் சிவகங்கை வட்டத்தில் சிவகங்கை மாவட்ட குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணி யில் அமர்த்திய 14 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது சிவகங்கை,காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    அவற்றில் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளியை பணியில் அமர்த்திய கடை நிறுவன உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் மாவட்டத்தில் மற்ற நீதிமன்றங்களில் 13 வழக்குகள் நடைபெற்று வருகிறது. மேலும்  14 வய திற்கு மேல் 18 வயதிற் குட்பட்ட வளரிளம் பருவத்தினரை  பணியில் அமர்த்திய 24 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது மாவட்ட குற்றவியல் நடுவர்- மாவட்ட கலெக்டரால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 4 கடை நிறுவன உரிமை யாளர்கள் மீது குற்றவியல் நடுவர் நீதின்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவது கண்ட றியப்பட்டால், கீழ்க்கண்ட இணையதள முகவரி, தொலைபேசி எண் மற்றும் கீழ்க்காணும் அலுவ லரிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். 

    1) Pencil Portal https://pencil.gov.in  2) தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவ லக பெருந் திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை. 04575-240521.

    3) Child Help line 1098  (இலவச தொலைபேசி எண்).
     
    மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) ராஜ்குமார் தெரிவித் துள்ளார்.
    அங்கன்வாடி மையம் அருகே இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா துவார் ஊராட்சியை சேர்ந்த பூலாம்பட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முற்றிலும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. 

    இதன் அருகாமையில் அங்கன்வாடி கட்டிடமும், குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளது. மேலும் இந்த தொட்டியின் அருகே உயர் அழுத்த மின் கம்பி களும் உள்ளன. 

    இது குறித்து அந்தப்பகுதி மக்கள் கூறியதாவது:&

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயனுக்காக புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.  ஆனால் பழைய நீர்த் தேக்கத் தொட்டியை அகற்றுவதற் கான எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    தற்போது அந்த குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 

    இதுகுறித்து பலமுறை  மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரி டமும் கோரிக்கை விடுத்தும் இன்றளவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும்  உயிர்பலி ஏற்படு வதற்குள் அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    கடைகளுக்கு சீரான வாடகையை வசூலிக்க கோரி வணிகர் சங்க பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மானாமதுரை

    மானாமதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல பொதுக்குழு கூட்டம் மதுரை மண்டலதலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.

    சிவகங்கை மாவட்ட தலைவர் பாலகுருசாமி வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா கால கட்டத்தில் வணிகர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். பல பெரிய வணிகர்கள் தங்கள் தொழிலை இழந்துள்ளனர். 

    ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு வணிகர்களின் சேவையை யாரும் மறக்க மாட்டார்கள். தற்போது ரஷ்யா&உக்ரைன் போரால் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏறும் அபாயம் உள்ளது. போரை காரணம் காட்டி மத்தியஅரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தகூடாது. வணிகர்களின் வாழ்வாதா ரத்தை அரசுகள் பாதுகாக்க வேண்டும் என்றார். 

    பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன், கூடுதல் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்திபேசினர். 

    வருகிற மே 5ந்தேதி திருச்சியில் நடைபெறும் 39வது வணிகர் தின மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வ தால் மதுரை மண்டலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்பது, உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒரே சீரான வாடகையை முறைப் படுத்தி அறிவித்து அதனடிப்படையில் வாடகை வசூலிக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வணிகர்களுக்கென என தனியாக மாதம் தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுக்குழுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக மானாமதுரை அண்ணா சிலையில் இருந்து மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நூற்றுக் கணக்கான வணிகர்கள் பேரணியாக நடந்து சென்றனர்.வழியில் ஆங்காங்கே வணிகர்சங்க கொடிகளை நிர்வாகிகள் ஏற்றிவைத்தனர். 

    கூட்டத்தில் நிர்வாகிகள் ஜெகதீசன், கோவிந்தராஜ், ஜீவானந்தம், வீரபத்திரன், அழகேசன், சாதிக்அலி, சைமன் அன்னராஜ், திருருகன், ஆல்பின் சகாயராஜ், பாண்டியன், லட்சுமணன், பாண்டியன், பெத்துராஜ், சந்திரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ×