search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன்அரிசி"

    • ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது
    • சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர்

    கன்னியாகுமரி :

    வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ் குமார் கொண்ட குழு சிராயன்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக ஆட்டோ ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த ஆட்டோவை நிறுத்து மாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்று விட்டது.

    தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பின்னர் ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் ஆட்டோவை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • திருமங்கலம் அருகே ரேசன்அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திருமங்கலத்தில் இருந்து அனுப்பானடிக்கு ரைஸ்மில்லுக்கு ஏற்றி சென்றது தெரிய வந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து அனுப்பானடிக்கு ரேசன்அரிசி மூடைகளில் கடத்தி செல்லப்படுவதாக கூடக்கோவில் மற்றும் பெருங்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. 2 காவல் நிலைய போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மதுரை விமானநிலையம் பின்புறம் திருமங்கலத்தில் இருந்து செல்லும் சாலையில் வந்த லோடு வேனை நிறுத்தி ஏட்டு லிங்கம் சோதனை நடத்தியதில் 50 கிலோ ரேசன்அரிசி இருந்தது. அது திருமங்கலத்தில் இருந்து அனுப்பானடிக்கு ரைஸ்மில்லுக்கு ஏற்றி சென்றது தெரிய வந்தது.

    வாகனத்தை ஓட்டிவந்த அனுப்பானடியை சேர்ந்த வேல்முருகன் (42), உதவியாளராக வேனில் வந்த ஐராவதநல்லூர் சோவியத் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து, மதுரை குடிமைபொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.

    குமாரபாளையத்தில் 50 மூட்டை ரேசன்அரிசியை ஆம்னி வேனில் கடத்தினர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.ஓ.என்.தியேட்டர் அருகே ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி வசந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதிக்கு அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒருவர், ரேசன் அரிசி மூட்டைகளை வாங்கி ஆம்னி வேனில் வைத்துக்கொண்டு இருந்தார்.

    அவரை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஈரோடு மாவட்டம் பவானி, குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தாமோதரன் (வயது 45), என்பது தெரியவந்தது. தாமோதரன் ஆம்னி வேனில் 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தார். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை, குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகள், ஆம்னி வேனை ஒப்படைத்தனர். இதையடுத்து தாமோதரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×