என் மலர்
உள்ளூர் செய்திகள்

செயல்படாத உழவர்சந்தை
செயல்படாத உழவர்சந்தை
தேவகோட்டையில் செயல்படாத உழவர்சந்தையை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் கண்டதேவி சாலையில் வாரச்சந்தை அருகே உழவர்சந்தை உள்ளது. இங்கு அதிக அளவில் வியாபாரிகள் வராததால் செயல்படாமல் இருந்தது.
வாரச்சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக உழவர் சந்தை கட்டிடத்தை வார சந்தைக்கு வரும் வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் சில மாதங்களாக உழவர்சந்தை அதிகாரிகள் எங்களது பகுதிக்குள் வார சந்தையில் வியாபாரிகள் கடைகளை போடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் உழவர் சந்தை முன்புற வாசல் பகுதியை அடைத்து பின்பக்கமாக காம்பவுண்ட் சுவரை உடைத்து புதிதாக பாதை ஏற்படுத்தி அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வரும் வாரச்சந்தையில் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த உழவர் சந்தைக்கு நிர்வாக அலுவலர்கள் 2 பேர், காவலர்கள் 2 பேர் என 4 பணியாளர்கள் தற்போது வரை உழவர் சந்தையில் பணியாற்றி வருகின்றனர்.
உழவர் சந்தையில் வியாபாரிகள் ஒருவர்கூட வராதபட்சத்தில் பல ஆண்டுகளாக இந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இவர்கள் உழவர் சந்தை கட்டிடங்களை பாதுகாப்பதற்காக மட்டுமே இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
வியாபாரிகளே இல்லாத உழவர்சந்தைக்கு பணியாளர்கள் உள்ளது அரசுக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இதே போல் மாவட்டங்களில் உள்ள உழவர் சந்தைகளை அதிகாரிகள் கண்காணிக்குமாறு சமூக ஆர்வலர் ராமலிங்கம் கேட்டுக்கொண்டார்.
Next Story






