என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற அணிக்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பரிசுகளை வழங்கினார்.
ஏரியூர் அணி சாம்பியன்
சிவகங்கையில் நடந்த கபடி போட்டியில் ஏரியூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கபடிகழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டி காரைக்குடி அமரா வதிபுதூர் ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டன.
இதில் முதல் பரிசை ஏரியூர் வலையபட்டி அணியும், 2ம் பரிசை குமார பட்டி அணியும், 3ம் பரிசை காரைக்குடி அணியும், 4ம் பரிசை ராஜராஜன் பொறியியல் கல்லூரியும் பெற்றன.
முடிவில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளையும் நினைவு பரிசுகளையும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா வழங்கினார்.
இந்த போட்டியில் பங்கேற்ற வீரர்களில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு வருகிற 18-ந்தேதி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் நடைபெற உள்ள மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் சிவகங்கை மாவட்ட அணிக்காக ஆட உள்ளனர்.
Next Story






