என் மலர்
சிவகங்கை
- தேவகோட்டை பகுதியில் 22-ந்தேதி மின்தடை ஏற்படும்.
- மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது.
இதன் காரணமாக கண்ணங்குடி, கப்பலுார், சிறுவாச்சி, அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், மு.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.
- வைகை ஆற்றில் அதிக அளவில் வளரும் புற்களால் கால்நடைகள் வளர்ப்போர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
- தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார பகுதி கிராமங்கள் முழுவதும் பூர்வீக வைகை பாசனபகுதியாகும். தற்போது மானாமதுரை நகர் பகுதியில் உள்ள வைகைஆற்றில் சித்திரை திருவிழாவிற்காக தண்ணீர் திறந்து விட்டபோது ஆற்றில் தண்ணீர் சென்றது.
சில நாட்களுக்கு முன்பு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு நீர் செல்வதால் பாசன பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஆற்றில் தொடர் நீர்வரத்தால் ஆறு முழுவதும் புல்செடிகள் அதிக அளவில் வளர்ந்து மேய்ச்சல் பகுதியாக மாறி உள்ளது. ஆடு, மாடுகள் வளர்ப்பவர்கள் கால்நடைகளை காலை முதல் மாலை வரை மேயவிட்டு வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.
கொளுத்தும் வெயிலுக்கு மானாமதுரை வைகை ஆறு இயற்கை புல்வெளியாக பச்சை போர்வை விரித்தது போல் காண்போரின்கண்களுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளது. தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
- தற்போது அகல ரெயில் பாதை வந்தபின் பல மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மானாமதுரையில் நின்று செல்கிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே ஜங்சன் ரெயில் நிலைய ம்ஆகும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது மானாமதுரையில் இருந்து திருச்சி, சென்னை, நெல்லை, கேரள மாநிலம் கொல்லம்வரை ரெயில் வசதி இருந்தது.
புன்னியஸ்தலமாக உள்ள ராமேசுவரத்திற்க்கு மானாமதுரையில் இருந்து தான் ரெயில் வசதி உள்ளது. தற்போது அகல ரெயில் பாதை வந்தபின் பல மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மானாமதுரையில் நின்று செல்கிறது. ஆனால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பயணிகள் தென்மாவட்ட ஊர்களுக்கு செல்ல போதுமான ரெயில் வசதி இல்லை. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட பயணிகள் தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் திருச்சி சென்றால்தான் ரெயில் வசதிஉள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் தென்மாவட்டம் மற்றும் கேரளா செல்ல வேண்டுமானால் மதுரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது தென்மாவட்டங்களுக்கு செல்லும் சரக்கு ரெயில்கள் மதுரை செல்லாமல் மானாமதுரை வழியாக குறைவான பயண தூரத்தில் செல்கிறது. சென்னையில் இருந்து செங்கோட்டை வரை மானாமதுரை வழியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே எக்ஸ்பிரஸ் ரெயில் செல்கிறது. இந்த ெரயிலை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த ரெயில் சேவை 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் பயணிகள் கூட்ட நெரிசலுடன் செல்லும் நிலை உள்ளது. சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு இந்த ஒரு ரெயில்மட்டுமே உள்ளது. தினமும் இயக்கப்பட்டால் 4 மாவட்ட பயணிகள் பெரிதும் பயன் பெற வாய்ப்பு உள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை அந்தியோதயா சிறப்பு ரெயில் விடப்பட்டது. நல்ல வரவேற்பு பெற்ற அந்த ரெயில் எவ்வித முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதால் மானாமதுரை வழியாக செங்கோட்டை -சென்னை மார்க்கத்தில் தினசரி ரெயில் சேவை இல்லாமல் உள்ளது. நிறுத்தப்பட்ட அந்தியோதயா சிறப்பு ரெயிலை தாம்பரத்தில் இருந்து கொல்லம் வரை இயக்கவேண்டும். இதனால் 10 மாவட்ட மக்களுக்கும் பயன்உள்ளதாக இருக்கும்.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள் நடைபெற உள்ள மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வலியுறுத்த வேண்டும். சென்னை-செங்கோட்டை ெரயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
- 215 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றுகள் பெற்ற பின்புதான் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டுமென கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- பள்ளி வாகனங்களை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் இயக்கக்கூடாது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதா னத்தில் போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை
அலுவலர்களுடன் பள்ளி வாகனங்களில் கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சரியான முறையில் உள்ளதா? என்பது குறித்து போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வாகனத்தின் நிறம், பள்ளி பற்றிய விபரம், தொடர்பு எண்கள், பிரதிபலிப்பான் பட்டைகள், பிரேக் திறன், உருளைப்பட்டைகளின் நிலை, அவசரக்கதவின் நிலை, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, வாகனத்தின் இருக்கை நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், வாகன ஓட்டுநரின் இருக்கை, வாகனத்தின் உட்புறம், தரைப்பலகை, ஜன்னல்கள், சிவப்பு மற்றும் ெவள்ளை பிரதிபலிப்பான், நாடாக்கள், முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகள், தீயணைக்கும் கருவி மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் நிலை குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் குறைபாடுகள் கண்டறியப்படும் வாகனங்க ளில் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு சமர்ப்பித்து, சான்றுகள் பெற்ற பின்புதான் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். வாகன ஓட்டுநர்கள் வாகனத்தினை இயக்குவதற்கு முன்பு வாகனத்தினை பரிசோதனை செய்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும்.
வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது முழு கவனத்துடன் வாகனத்தை இயக்குவதோடு, அனு மதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் இயக்கக் கூடாது. வாகனம் இயக்கும் போது மது அருந்துதல், கைபேசியை உபயோகித்தல் உள்ளிட்ட செயல்முறைகள் இருத்தல் கூடாது. எதிரில் வாகனம் வரவில்லை என உறுதி செய்த பின்னரே, பிற வாகனத்தினை கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும். சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள சிவகங்கை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 7 வட்டாரங்களுக்குட்பட்ட 64 பள்ளிகளை ேசர்ந்த 175 பள்ளி வாகனங்கள் மற்றும் காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய 2 வட்டாரங்களுக்குட்பட்ட 45 பள்ளிகளை சோ;ந்த 140 பள்ளி வாகனங்கள் என மொத்தம் 109 பள்ளிகளை சேர்ந்த 315 பள்ளி வாகனங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன.
அதில் சிவகங்கை வட்டாரங்களை சேர்ந்த 110 வாகனங்களும், காரைக்குடி வட்டாரங்களைச் சேர்ந்த 105 வாகனங்களும் என மொத்தம் 215 வாக னங்களில் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் பராமரிப்பு பணியில் உள்ளதால் அந்த பணிகள் முடிவுற்ற பின், ஆய்விற்கு முறையாக உட்படுத்தப்பட்டு, பின்னர் சான்றுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளனர்.
- கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது.
காரைக்குடி
காரைக்குடியில் செயல்படும் மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் (சிக்ரி) 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 19 கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
முதற்கட்டமாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் கடத்தி, அதை திரவ நிலைக்கு மாற்றுவதற்கான ஆராய்ச்சியில் சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, ஷ்ரவந்தி, வாசுதேவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். தற்போது அதற்கான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தொழில் நுட்பம் கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது. சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி இந்த தொழில் நுட்பத்தை சுமிட்ஸ் நிறுவன இயக்குநர் ராஜ்மோகன் சத்தியதேவிடம் வழங்கினார். இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி கூறிய தாவது:-தற்போது தொழி ற்சாலைகளில் வெளியாகும் கார்பன்டை ஆக்சைடானது குளிர்விக்கப்பட்டு, மீண்டும் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தில் திரவ நிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவினங்கள் அதிகம் உள்ளது. அந்த செலவினத்தை 30 முதல் 40 சதவீதம் குறைக்கும் வகையில் எங்கள் விஞ்ஞானிகளின் தொழில் நுட்பம் அமைந்துள்ளது.
இதன்படி தொழிற்சாலைகளில் 70 டிகிரி வெப்பத்தில் வெளிவரும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் பயனுள்ள திரவ கார்பன்டை ஆக்சைடாக மாற்றி உருளைகளில் சேமித்து ஆற்றலாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் உலக வெப்ப மயமாதல் குறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்தியாவில் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடால் 40 சதவீதம் அளவிற்கு வெப்பம் ஏற்படுகிறது. அதனால், முதற்கட்டமாக இந்த தொழில் நுட்பத்தை கோவை சுமிட்ஸ் நிறுவனம் அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது மூத்த விஞ்ஞானி சத்யநாராயணன் உள்பட விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.
- மானாமதுரை வைகைஆற்றில் பாலம் அமைய உள்ள இடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ஆற்றில் மண்பரிசோதனை ஆய்வு நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவடடத்தில் வளர்ந்து வரும் பெரிய நகரம் மானாமதுரை ஆகும். தற்போது நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வைகைஆற்றில் புதிய பாலத்திற்கு அப்போதைய தி.மு.க. அரசில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் தா.கிருட்டிணன் அடிக்கல்நாட்டினார்.
அதன்பின் இந்த பாலம் திட்டம் கிடப்பில் போடப்பட்டு நிறைவேற்றபடாமல் இருந்தது. இந்த திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி பாலம் கட்ட நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று மானாமதுரையில் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழரசி எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.
அதன்படி கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என பேசினார்.அதைத்தொடர்ந்து மானாமதுரை வைகை ஆற்றில் மண்பரிசோதனை ஆய்வு நடைபெற்றது.
தற்போது மானாமதுரை வைகை ஆற்றில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கும் இடமான போலீஸ் நிலையம் எதிரே உள்ள வைகை ஆற்றில் தமிழரசி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், கவுன்சிலர் இந்துமதி மாவட்ட பிரதிநிதி சிப்காட் காளியப்பன் ஆகியோர் உடன்இருந்தனர்.
- இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண் எப்படி இறந்தார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியங்கா (வயது26) இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியங்கா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கியது.
இதுபற்றி பிரியங்காவின் தந்தை எஸ்வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக அவர் மர்மமான முறையில் இறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியங்கா எப்படி இறந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியங்கா திருமணமான 6 ஆண்டுகளில் இறந்து விட்டதால் இது தொடர்பாக தேவகோட்டை ஆர்.டி.ஓ. பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
- பஸ்களில் தொங்கி செல்லும் பயணிகளுக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆனால் மிகவும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் அதிக கூட்டநெரிசலுடன் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருந்து சிவகங்கைக்கு தினமும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசுஅலுவலர்கள், நோயாளிகள் என ஏராளமான பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மிகவும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் அதிக கூட்ட நெரிசலுடன் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. படிகளில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் தொற்றி கொண்டு செல்லும் நிலை உள்ளது.
இதேபோல் மானாமதுரை வழியாக திருச்சி வரை குறைந்த அளவில் பஸ்கள் இயக்கபடுவதால் மானா மதுரையில் ஏறும் பயணிகள் திருச்சி வரை நின்று செல்லும் நிலைஉள்ளது. திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக இரவு நேரத்தில் பரமக்குடி ராமேசுவரம் சென்ற அரசுபஸ்களும் நிறுத்த பட்டால் மானாமதுரை பயணிகள் திருச்சியில் இருந்து மதுரை வந்து சுற்றி வரும் நிலை உள்ளது.
எனவே மானாமதுரை சிவகங்கை இடையே கூடுதல் பஸ்களும் மானாமதுரை வழியாக திருச்சி க்கு கூடுதல் பஸ்களை இயக்கவும், மானாமதுரை வழியாக திருச்சியில் இருந்து ராமேசுவரம் பரமக்குடி செல்லும் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாக்காளர்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- ஏதேனும் விடுதல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) /பேரூராட்சிகளின் செயல் அலுவலரிடம்மனுவாக அளிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் (ெபாறுப்பு) மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 30.4.2022 வரை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலிப்பதவியிடங்களுக்கு (1ஊராட்சி மன்ற தலைவர், 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் 2 பேரூராட்சி வார்டு உறுப்பினர்) தற்செயல் நேரடித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கா னவார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் நேற்று (17-ந் தேதி) வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் விடுதல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) /பேரூராட்சிகளின் செயல் அலுவலரிடம் மனுவாக அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் 2நகல்களை அங்கீகரி க்கப்பட்ட அரசி யல் கட்சிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியஅலு வலகங்கள்/மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக வருகிற 20-ந் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்களை ஒரு பக்கத்திற்கு ரூ.5 கட்டணமாக செலுத்தி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் /வட்டார வளர்ச்சி அலுவலர் / பேரூராட்சி செயல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேவகோட்டை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த உசிலாவுடைய அய்யனார், கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனை பல கிராம மக்கள் தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அய்யனார் மற்றும் அம்மனுக்கு ராஜகோபுரங்கள் அமைத்து, அய்யனார், விநாயகர், காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பர், சின்னகருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் திருப்பணிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
அதன் பின்னர் புனித நீர் குடங்கள் எடுத்து மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி ஊராட்சியில் 277 புரவிகளுடன் நேர்த்திக்கடன் செலுத்தி கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
- இந்த புரவிகள் காட்டு வழியே சென்று அய்யனார் கோவில்களில் நேர்த்திக் கடனாக கருதப்படும் குழந்தைபேறு, தீராத வழக்குகள், நெடுநாள் நோய்கள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நேர்த்திக்கடன் நிறைவேறிய மகிழ்ச்சியில் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள சிறைமீட்ட அய்யனார் கோவில் மற்றும்,எஸ்.கோவில்பட்டியில் அருள்பாலிக்கும் செவிட்டு அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுயம்புவாக அருள்பாலிக்கும் இந்த ஐயனார் ஆலயம் தனக்கென்று கோபுரம் இல்லாமல் காட்டுப்பகுதியில் மரம் செடிகளுக்கு நடுவே அமைந்து இருப்பது சிறப்பாகும்.
கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் புரவி எடுப்பு விழா துவங்கியது. நேற்று 277 புரவிகள் கச்சேரி திடலில் வைத்து அலங்கரிக்கப்பட்டன. அதனுள் முகம் பார்க்கும் கண்ணாடி, பலூன், மாவிலை, தென்னங்குருத்து, போன்றவர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்ணமிகு புரவிகள் நேர்த்திக்கடன் பக்தர்களால் கொண்டு செல்லப்பட்டு புரவிப்பொட்டலில் வைக்கப்பட்டது.
புரவி பொட்டலில் சிறப்பு வழிபாடுகள் முடிந்ததை அடுத்து சிறை மீண்ட அய்யனார் ஆலயத்திற்கு ஒரு அரண்மனை புரவியும், செகுட்டையனார் ஆலயத்திற்கு ஒரு அரண்மனை புரவியும் என மொத்தமாக 277 பிறவிகள் புறப்பட்டன. சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்திருந்த இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தோளில் சுமந்து வந்த மண் குதிரைகள் பார்ப்பவர்களை பிரம்மாண்டத்தில் ஆழ்த்தியது.
இந்த புரவிகள் காட்டு வழியே சென்று அய்யனார் கோவில்களில் நேர்த்திக் கடனாக கருதப்படும் குழந்தைபேறு, தீராத வழக்குகள், நெடுநாள் நோய்கள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நேர்த்திக்கடன் நிறைவேறிய மகிழ்ச்சியில் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
- மானாமதுரை அருகே சட்ட விழிப்புணர்வு முகாமில் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உண்மையாக்க வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.
- மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மானாமதுரை அருகில் உள்ள ராஜகம்பீரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். கல்வி ஒன்று தான் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு துணை நிற்கும். ''இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்'' என்பதை மாணவர்கள் உண்மையாக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இந்த முகாமில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த், வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் வனராஜன், பள்ளி தாளாளர் சேவியர் சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர் செல்வன் ஆகியோரும் பேசினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வலர்களான நாகேந்திரன், காளிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.






