என் மலர்
சிவகங்கை
- ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான இலவச பயிற்சி முகாம் 5 நாட்கள் நடக்கிறது.
- பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறு, குறு, நடுத்தர தொழிலில் நிறுவனங்களின் வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் பற்றி 5 நாட்கள் மேலாண்மை மேம்பாட்டு திட்டம் குறித்து சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டியில் இயங்கி கொண்டிருக்கும் நறுமண பூங்கா ( ஸ்பீசிஸ் பார்க்) அலுவலகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருக்கிறது.
தொழில் முனைவோ ருக்கான சான்றிதழ் (உத்யம்) பெற்றுள்ளவர்கள் மற்றும் ஏற்றுமதி தொழிலில் விருப்பமுடைய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்வில் இலவசமாக பங்கேற்று பயனடையலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்ய விரும்புப வர்கள் புகைப்படம், தொழில் முனைவோருக்கான சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் எண்:11, கோ.புதூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கிக் கொண்டிருக்கும் MSME-DFO மதுரை கிளையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிந்து கொள்ளலாம். முதலில் வரும் 25 பேருக்கே முன்னுரிமை வழங்க ப்படும்.
இந்த 5 நாட்களில் ஏற்றுமதி, இறக்குமதி வழி முறைகள், ஆவண தேவைகள், ஏற்றுமதி மேம்பாட்டிற்காக கிடைக்கும் பல்வேறு அரசு சலுகைகள் பற்றிய தகவல் மற்றும் அதைப் பெறுவதற்கு தேவையான வழிமுறைகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு அதிகாரி களுடன் ஆலோசனை, பேக்கேஜிங் ரூ லேபிளிங் சிக்கல்கள், சர்வதேச தரத்தின் தயாரிப்புக்களை எவ்வாறு உருவாக்குவது? ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான சட்டஉதவிகள் போன்றவை குறித்து விளக்கமாக பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்ப வர்களுக்கு வங்கிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி சிவகங்கை மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்க ளை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும். பயிற்சியில் கலந்து கொள்ப வர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
நேரில் வர இயலாதவர்கள் மேற்கண்ட ஆணை விவரங்களை கைபேசி வாட்ஸ் அப் வழியாக உதவி இயக்குநர் MSME-DFO மதுரை, 98420 35441 எணணிற்கு தொடர்பு கொண்டு நிகழ்விற்கு பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.
- மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
- அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற சங்க சார்பில் மாநில மகளிர் மாநாடு பற்றிய ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் தியாகராஜன் நீலகண்டர் தலைமை யில் நடந்தது. மாவட்ட தலைவர் கணேஷ் பால்பாண்டி வரவேற்றார்.
அரசு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை ரூ10ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பு களில் 5 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மண்பாண்ட தொழில் செய்ய களிமண் எண் எடுக்க தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், குமார், அசோக் உள்படபலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
- சொத்துவரி, மின்கட்டணம், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரண மான தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் நடை பெறும் பாலியல் வன்முறை காவல்நிலைய மரணங்கள், போதை பொருட்கள் விற்பனை, மக்களை வஞ்சிக்கும் சொத்துவரி, மின்கட்டணம், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரண மான தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், அவை தலைவர் நாகராஜன் நகர் செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள். குண சேகரன், நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்டிபன், கோபி, சேவியர், ஸிதர், பாரதி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மேலும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
- உடற்கல்வி இயக்குநர் ரகு வருடாந்திர விளையாட்டு அறிக்கை வாசித்தார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. உதவி பேராசிரியர் விஷ்ணுபிரியா வரவேற்று பேசினார். கல்லூரி நிறுவனர் சேது குமணன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.
இதில் சென்னை காவல்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் (ஐ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் தலைவரும், அர்ஜூனா விருது பெற்றவருமான முகமது ரியாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
ராமகிருஷ்ணன் (ஐ.பி.எஸ்.) பேசுகையில், தமிழ்நாட்டின் இரு முக்கிய நிர்வாக பதவிகளான காவல்துறை தலைவர் மற்றும் தலைமை செயலாளர் பதவிகளை வகித்துவரும் இருவருமே விவசாய கல்வி கற்றவர்கள் தான். மாணவர்கள் எதற்காகவும் கவலைப்படக் கூடாது.இந்த உலகம் திறமை வாய்ந்தவர்களுக்காக காத்திருக்கிறது. இந்த கல்லூரி எதிர்காலத்தில் ஒரு பல்கலைக்கழகமாக வளர வாழ்த்துகிறேன் என்றார்.
உடற்கல்வி இயக்குநர் ரகு வருடாந்திர விளையாட்டு அறிக்கை வாசித்தார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் கருணாநிதி, இயக்குனர் கோபால், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுத்துறை செயலாளர் கவிதாஞ்சலி நன்றி கூறினார்.
- இடபிரச்சினையில் தகராறு செய்த 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் சமயதுரை- ராமுவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள மாரநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சமயத்துரை மற்றும் பிச்சைமுத்து. இருவரும் உறவினர்கள். அதே ஊரைச் சேர்ந்த ராமு வீடு கட்டுவதற்காக சமயத்துரையின் வீட்டின் பின்புறம் பில்லர் போடுவதற்காக குழி தோண்டினர்.
அப்போது சமயத்துரைக்கும் ராமுவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பாசேத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக மீண்டும் சமயதுரை- ராமுவுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமு மற்றும் உறவினர்கள் பிச்சைமுத்து, துரைப்பாண்டி, குமார், இளையராஜா, கிருஷ்ணன் ஆகிய 6 பேர் சேர்ந்து சமயத்துரையை கத்தி மற்றும் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாசேத்தி போலீசார் மேற்கண்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெற்குப்பை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
- குழந்விதைகள் விழிப்புணர்வோடு வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பாதுகாப்பு நல அலுவலர் பேசினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மகாலட்சுமி இந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தன்மையோடு இருப்பது குறித்தும், விழிப்புணர்வோடு வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பேசினார்.
செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், தலைமை ஆசிரியர் மலர்விழி, ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மகளிர் சுயநிதி குழுக்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
- ஆடி கார்த்திகை ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது.
- பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டியில் தண்டாயுதபாணி கோவிலில் 2-ம் ஆண்டு ஆடி கார்த்திகை ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. முன்னதாக 2 நாட்கள் நான்கு கால பூஜையுடன் தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மலர் அலங்காரத்தில் வண்ண வண்ண விளக்கு ஒளியில் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியருக்கு அரோகரா கோஷம் முழங்க ஊஞ்சல் உற்சவ வைபோக விழா நடந்தது. விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து ஊஞ்சல் உற்சவ விழாவை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனிவாசன், சிவகாமி ஆச்சி குடும்பத்தினர் செய்திருந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் ஊஞ்சல் உற்சவம் தேவகோட்டை, கண்டவராயன்பட்டி ஆகிய இரு ஊர்களில் மட்டும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிங்கம்புணரி பேரூராட்சி சார்பில் நீர் நிலைகள், கரைப்பகுதி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
- சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வு பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்நிலை கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல், நீர் நிலைகளை சுத்தப்படுத்துதல் பணி நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தொடங்கியது.
சிவகங்கை மாவட்ட கலெக்டரின் அறிவுரைக்கு ஏற்ப சிங்கம்புணரி வண்ணான் குண்டு, வெட்டியான் குண்டு பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தலைமை தாங்கினார். துணை சேர்மன் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நீர்நிலை பகுதிகளை கரையோரங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு மரங்கள் நடப்பட்டன. அதை தொடர்ந்து சிங்கம்புணரி சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் திருமாறன், அப்துல்லா, ஷாஜகான், ஜெயக்குமார், மணி சேகரன் மற்றும் பொதுமக்களும், பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர்களும் சேவுக அரிமா சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர். செயல் அலுவலர் ஜான் முகமது நன்றி கூறினார்.
- பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
- கட்சி தொண்டர்கள் தென்மாபட்டி கிராமத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தென்மாபட்டியில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினரும் ஜி.ஜே. அறக்கட்டளை நிறுவனருமான பொறியாளர் ஜெயபால், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நாகராஜன், மார்த்தாண்டன், திருப்பத்தூர் சகாதேவன், சேது.சிவராமன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சொக்கலிங்கம், மாநில ஓபிசி அணி செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள், கிளை தலைவர்கள், கட்சி தொண்டர்கள் தென்மாபட்டி கிராமத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய தலைவர் தங்கபாண்டி நன்றி கூறினார்.
- சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுககேசர் 190-வது குருபூஜை விழா நடந்தது.
- இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுககேசர் ஜீவ சமாதி உள்ளது. நல்லாகுளம் வடகரையில் அமைந்துள்ள அவருடைய ஜீவ சமாதி பீடத்தில் சித்தர் சிவந்தி லிங்க சுவாமி ஏகமயார் வம்சாவளியினர் பரம்பரை பூசாரிகள் மற்றும் சித்தர் வாரிசுதாரர்கள்
190-வது குருபூஜை விழாவை நேற்று நடத்தினர்.இதையொட்டி சித்தர் முத்துவடுகேசர் சிலைக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்த சித்தர் முத்துவடுககேசருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குருபூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் சிறப்பாக அன்னதானம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அன்னதானத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருபூஜை ஏற்பாடுகளை பரம்பரை பூசாரிகள் செய்திருந்தனர்.
- காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக 44 மணி நேரம் நடந்த சதுரங்க போட்டி நடந்தது.
- இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக தொடர்ந்து 44 மணி நேரம் சதுரங்கப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
தமிழக அரசின் சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது. சதுரங்கப் போட்டிகளுக்கு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஆர்வம், விருப்பம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
காரைக்குடியில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியில் மாவட்ட சதுரங்கக்கழகம், பள்ளி நிர்வாகம் மற்றும் பிரெய்ன் பாக்ஸ் ஆகியவை இணைந்து கடந்த 22-ந் தேதி மாலை 6.45 மணி முதல் நேற்று (24-ந் தேதி) மாலை 2.45 மணி வரை 44 மணி நேரம் இடைவெளி இல்லாமல் சதுரங்கப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் 50 இருக்கைகள் அமைத்து 1 சுற்றிற்கு 100 சதுரங்கப் போட்டி வீரர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 1,437 வீரர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வயது குறியீடு அளவு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறந்த நிலை போட்டியாக அறிவிக்கப்பட்டதால், சதுரங்கப்போட்டி வீரர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த சதுரங்கப்போட்டி சோழன் உலகச்சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்ப ட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சோழன் நிறுவனர் நிமலன் நீலமேகம், ஒருங்கிணைப்பாளர்கள் சேது முத்துக்குமரன், மகேஷ்மணிமாறன், செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி தாளாளர்கள் செல்லப்பன், சத்யன், வட்டாட்சியர் மாணிக்கவாசகம், சிவகங்கை மாவட்ட சதுரங்கக்கழக செயலாளர் கண்ணன், தலைவர் கருப்பையா, பொருளாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூரில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
- மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு உரிமையியல் (சிவில்) வழக்குகள் ஏராளமாக தாக்கலாகி வந்தது.
சிவில் வழக்குகளை தனியாக விசாரிக்க நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகளின் விசாரணை தாமதமாவதாக பொதுமக்களும் வக்கீல்களும் கூறி வந்தனா். எனவே உரிமையியல் வழக்குகளை விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசுக்கு வக்கீல் சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, திருப்பத்தூரில் தனி நீதிபதியுடன் உரிமையியல் நீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டது.
இதனையடுத்து திருப்பத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் மேல் தளத்தில் புதிய உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்தாஜ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் சங்கத் தலைவர் கணேசன், ரவி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கணேசன் வரவேற்றார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜி.சுதாகர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, இளையான்குடி குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், அரசு வழக்கறிஞர்கள், திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.






