search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.பி.எஸ்.இ. தேர்வில் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
    X

    சி.பி.எஸ்.இ. தேர்வில் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

    • சி.பி.எஸ்.இ. தேர்வில் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
    • தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்தியன், பள்ளி கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் ராணிபோஜன், தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

    காரைக்குடி

    2021-– 22-ம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    இதில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 10-ம் வகுப்பில் ஸ்ரீஹரிரமணா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அபிசேகபிரியன் 482 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், ஸ்ரீரிஷப் கணிதத்தில் 100 மதிப்பெண் உள்பட 481 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும், சிவசவுந்தரி 480 4-ம் இடமும், விஷ்ணுஹரி 464, சந்திரமவுலி 464 5-ம் இடத்தையும் பெற்றனர்.

    12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவர் கிரண்செல்வக்குமார் 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். சந்தானகவுந்தரி (477) 2-ம் இடமும், நூகாஅப்துல்லா (470) 3-ம் இடமும், ஜோதிகா (468) 4-ம் இடமும், தர்ஷிணி 467 5-ம் இடமும் பெற்றனர். வணிகவியல் பாடப்பிரிவில் 99 மதிப்பெண்களும், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் 95-க்குமேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதாசத்தியன், பள்ளி கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் ராணிபோஜன், தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

    Next Story
    ×