குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தர்ப்பணம்

குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். இங்குள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம்.
குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தர்ப்பணம்
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

இன்று காலை 6 மணி முதல் கோவிலுக்குள் திரண்ட பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதில் பங்கேற்றவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தர்ப்பண பொருட்கள் எள், பூ, வாழைப்பழம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள அன்னபூரணி அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இங்குள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். அதன்படி ஏராளமான பக்தர்கள் இன்று வழிபட்டனர். மதுரை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com