என் மலர்
சிவகங்கை
- சிறு மருதூர் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
- இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிறுமருதூர் கண்மாய் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பொதுப்பணித்துறை சார்பில்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கண்மாயின் நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது கண்மாய் நிரம்பி மாறுகால் பாய்கிறது.
இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர். கண்மாய் நிரம்பியதால் இந்த ஆண்டு விவசாயம் நல்ல முறையில் நடக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- விலைவாசி உயர்வுக்கு காரணம் தி.மு.க. அரசு மீது செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.
- பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி தந்தார். ஆனால் இப்போ தைய தி.மு.க. அரசு விலை வாசியை உயர்த்தியது தான் சாதனையாக உள்ளது.
மு.க.ஸ்டாலின் தற்போது அவரது மகனுக்கு அமைச்சராக முடிசூட்டி யுள்ளார். பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர். இதற்கு காரணம் தி.மு.க. அரசு தான்.
இவ்வாறு அவர் பேசி னார்.
ஆர்ப்பாட்டத்தில்.ஒன்றிய செயலாளர் செல்வ மணி, நகரசெயலாளர் ராஜா மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராமநாதன், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய, மாவட்ட, நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ரூ.41 லட்சத்தில் எல்.இ.டி பல்புகள் பொருத்த பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இந்த கூட்டம் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. தலைவர் நஜூமுதீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இப்ராகீம், செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் வார்டுகளில் நிலவும் குறைகளை தெரிவித்து அவற்றை சரி செய்து தருமாறு கூறினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு செயல் அலுவலர் கோபிநாத் பதிலளித்தார்.
8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செய்யது ஜமீமா பேசுகையில், எனது வார்டில் தக்கட்டை தெருவில் பொதுநிதியில் போர்வெல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இன்னும் நடைபெறவில்லை.
கலிபா தெருவில் சிறியதாக உள்ள கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும். புதிய நூலக கட்டிடம், விளையாட்டு மைதானத்தை இளையான்கு டியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இளையான்குடி பேரூராட்சியில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் 40 வாட்ஸ் ஒளிரும் குழல் விளக்குகள் மற்றும் சோடியம் விளக்குகளை மின்சிக்கனத்தை கருத்தில் கொண்டு அவற்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ரூ41.53 லட்சம் மதிப்பீட்டில் அதிக ஒளிரும் 754 அடர்மின் விளக்குகள் (எல்.இ.டி) பொருத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
''உங்கள் தொகுதியில் முதல்வர்'' திட்டத்தில் இளையான்குடி பேரூரா ட்சியில் ஆதி திராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து சாலை, ரேசன் கட்டிடம், வடிகால்வாய்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், தெரு விளக்குகள், பொது மயானம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ7.95 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கலெக்டர் மூலம் அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- காரைக்குடியில் மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 5 விளக்கு எம்.ஜி.ஆர் சிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி
தி.மு.க. அரசின் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து காரைக்குடி நகர அ.தி.மு.க. சார்பில் 5 விளக்கு எம்.ஜி.ஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சேர்மனுமான கற்பகம் இளங்கோ, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் புலவர் பழனியப்பன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்ராதேவி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் சத்குரு தேவன், பிரகாஷ், குருபாலு, ராம்குமார், ராதா, கனகவள்ளி, நகர மகளிரணி செயலாளர் சுலோசனா, மாவட்ட பேரவை துணை செயலாளர் இயல் தாகூர், வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், விஜய், வழக்கறிஞர் அணி காளிதாஸ், சண்முகமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர். கவுன்சிலர் அமுதா நன்றி கூறினார்.
- நெற்குப்பையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பையில் தி.மு.க. பேரூர் சார்பில் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. நகர அவைத்தலைவர் முத்து தலைமை தாங்கினார்.
உள்கட்சி செயல்பாடு குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக நமது பகுதியில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பேரூராட்சி சேர்மன் புசலான் வேண்டுகோள் விடுத்தார். நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சிக் கொடியை நிறுவி அதற்கான செலவினங்களை தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட செயலாளரின் ஒப்புதலோடு வருகிற நாட்களில் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாளர் ராமன், மாவட்ட பிரதிநிதி நடராஜன், முன்னோடிகள் ராசு, சேவுகன், நாகு, பாபு, பாதர் வெள்ளை,12-வது வார்டு பிரதிநிதி சேவுகன்.
கவுன்சிலர் சின்னையா, வார்டு செயலாளர்கள் ரியாஸ் அஹமது, ராமு வெள்ளைச்சாமி, நகர துணை செயலாளர் போதும் பொண்ணு, நகர துணை இளைஞரணி வீரமணி, ஒன்றிய பிரதிநிதிகள் சாமிநாதன், பாண்டியன், மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன், நகர தொழில் நுட்ப அணி அமைப்பாளரும், 2-வது வார்டு கவுன்சிலருமான கண்ணன், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள், மகளிரணி, என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
- உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. பள்ளி மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
- இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 190 பள்ளி மாணவ- மாணவிகள் இதில் கலந்துகொண்டு தேவர் சிலை, ராஜீவ்காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சென்று அழகப்பா கல்வி குழும மைதானத்தில் சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சோழன் உலக சாதனை புத்தக தலைவர் சண்முகநாதன் வழஙகிய சாதனை பட்டயத்தை அழகப்பா கல்வி குழும மேலாளர் காசி விசுவநாதன் மாணவர்களுக்கு வழங்கினார். சிலம்பாட்டக்குழு தலைவர் முனியாண்டி நன்றி கூறினார்.
- மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. பள்ளி தாளாளர் பிச்சை தலைமை தாங்கினார். விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்றார். 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் படித்தவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். தலைமையாசிரியர் செல்வின் ஆசிர்வாதம், சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையார் விடுதி காப்பாளர் ராஜா, கூட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் காவேரி உள்ளிட்ட பலர் பேசினர். சி.எஸ்.ஐ. ஆலய சபைகுரு ஞான ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். இம்மானுவேல் நன்றி கூறினார்.
- சிவகங்கையில் மத்திய அரசின் போட்டி தேர்வுக்்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.
- மேற்கண்ட தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் கலெக்டர் அலுவலக மயில்கேட் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள SSC CuSL போட்டித் தேர்வுக்கான அறிவிப்பில் சுமார் 4 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ேதர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள். 4.1.2023 ஆகும். இந்த தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான வேலை நாடுநர்கள் மேற்கண்ட தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்திற்கு கல்விச்சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேரில் வரும் பட்சத்தில் மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பம் செய்து தரப்படும். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (14-ந் தேதி) முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த அலுவலகத்தின் வாயிலாக தொடங்கப்பட உள்ளது.
மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பம் செய்து இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்பும் வேலைநாடுநர்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. சீரான இடைவெளியில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பை குரூப்-2 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வரும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள tamlianducareerservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பெயரை கட்டணமில்லாமல் இலவசமாக பதிவு செய்து இந்த இணையதளத்தில் மத்திய-மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித் தேர்வு களுக்கான பாடக்குறிப்புகள், வினா-விடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
- ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம், தேவகோட்டை யூனியன், கண்ணங்குடி யூனியன், ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மற்றும் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றில் புற நோயாளிகள் பிரிவு, தாய்-சேய் நலப்பி ரிவு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமரிப்புப் பதிவேடு, தேவையான மருந்துகளின் எண்ணிக்கை மற்றும் ஊசிபோடும் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவ லகத்தின் செயல்பாடுகள், தேவகோட்டை யூனியன், வீரை ஊராட்சி, கைக்குடி நடுநிலைப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறைக்கூடம் மற்றும் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கண்ணங்குடி கிராமத்தில் ரூ.7.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும், கண்டியூர் ஊராட்சி, வலையன்வயல், கீழக்குடியிருப்பில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர்.
- ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் இந்த விமானத்தை வாங்கலாம்.
- இதே விமானம் வெளிநாட்டில் ரூ.40 முதல் 60 லட்சம் விலையாக இருக்கும்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எபினேசர்(வயது 29). இவர் தமிழ் வழி மூலம் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் விமான பைலட் என்ஜினீயரிங் படிப்பை அமெரிக்காவில் படித்து முடித்த நிலையில் தற்போது தனியார் விமான பைலட்டாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நடுத்தர குடும்பத்தினரும் சொந்தமாக விமானத்தை வாங்கும் வகையில் சிறிய வகை விமானத்தை கண்டுபிடித்து விரைவில் அதை சோதனை ஓட்டமாக காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் பயன்பாடியின்றி கிடக்கும் விமான ஓடுதளத்தில் இயக்க உள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர், எபினேசர் கூறியதாவது:-
கார் வாங்கும் நடுத்தர மக்கள் அதேவிலையில் குட்டி விமானத்தை வாங்கும் வகையில் தற்போது இந்த சிறிய இலகுரக விமானத்தை கண்டுபிடித்து உள்ளேன். இந்த விமானம் எடை குறைந்த அலுமினியத்தால் செய்யப்பட்டது. இதில் 3 வகையான டேங்க் பொருத்தப்பட்டு உள்ளது.
ஒன்றில் உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பயன்படுத்துவது, மற்றொரு டேங்கில் பாக்டீரியாவில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பயன்படுத்துவது, இறுதியாக உள்ள டேங்கில் இருந்து சாதாரண பெட்ரோலை பயன்படுத்தி இயக்குவது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஒருவர் அல்லது 2 பேர் அமர்ந்து பயணம் செய்யும் விமானங்களை கண்டுபிடித்துள்ளேன். இந்த விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஒரு மணி நேரத்திற்குள் 100 கிலோ மீட்டர் செல்லலாம். 314 சி.சி.யுடன் 34 குதிரை திறன் கொண்ட என்ஜின் உள்ளது. மேலும் என்ஜின் நின்றாலும் மீண்டும் பறக்கும் வகையில் தயார் செய்துள்ளேன். இந்த விமானத்தை இயக்க 100 மீட்டர் ஓடுதளம் போதுமானதாகும். முற்றிலும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதால் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் இந்த விமானத்தை வாங்கலாம். இதே விமானம் வெளிநாட்டில் ரூ.40 முதல் 60 லட்சம் விலையாக இருக்கும்.
இந்த இலகு ரக விமானத்தை காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் இரண்டாம் உலக போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த மத்திய அரசின் விமான போக்குவரத்து துறையிடமும், உச்சிப்புளியில் உள்ள இந்திய விமான படை தளத்திலும் அனுமதி பெற்றுள்ளேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விமான ஓடுதளத்தில் இந்த விமானத்தை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை குரங்குகள் கடித்தும் பறித்தும் சேதப்படுத்துகின்றன.
- குரங்குகளிடம் இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. தென்னை வளர்க்கும் விவசாயிகள் சிலர் பருவமழையை நம்பி மானாவாரியாகவும், மற்ற விவசாயிகள் கிணற்று பாசனத்திலும் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இங்கு மலைபகுதிகளும், வனப்பகுதிகளும் அதிகம் உள்ளதால் குரங்குகள் ஏராளமாக இருக்கிறது. அவை உணவு தேடி கிராம பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள வயல் மற்றும் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பழங்கள், தேங்காய் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகிறது.
பிரான்மலை வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் அணில்கள் இந்த தென்னை மரத்தை தேடி வந்து தென்னை மரத்தில் ஏறி அறுவடைக்கு தயாராக உள்ள இளநீர், தேங்காய்கள், குரும்பைகளை கடித்தும் பறித்தும் சேதப்படுத்தி, அதில் உள்ள தண்ணீரை குடித்தும் விடுகிறது.
இதனால் தென்னை விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், அவைகளிடம்இருந்து தேங்காய்களை பாதுகாப்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் முதலில் ஒரு சில மரங்களில் முள்வேலி அமைத்து பார்த்தனர். அதை குரங்குகள் லாவகமாக அகற்றிவிட்டு மேலே ஏறி சென்று தேங்காய்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் தற்போது வித்தியாசமாக புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, பாம்பு நெளிவது போன்ற ஓவியத்தை தனித்தனியாக ஒவ்வொரு தென்னை மரத்திலும் பெயிண்டு மூலம் வரைந்துள்ளனர். இந்த ஓவியத்தை காணும் குரங்குகள் மற்றும் அணில்கள் தென்னை மரத்தில் நிஜபாம்புதான் இருக்கிறது என நினைத்து பயந்துபோய் மரத்தில் ஏறாமல் அங்கிருந்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஒடுவன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வீரனன் கூறியதாவது:-
இந்த பகுதியில் குரங்குகள் அதிகமான அளவில் தொந்தரவு செய்து தேங்காய் விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குரங்குகள் தென்னை மரத்தின் மீது ஏறி குறும்பைகள், இளநீர் காய்கள் மற்றும் பூக்களை சேதப்படுத்துவதால் தென்னை மரத்தில் அதிக விளைச்சல் காண முடியவில்லை.
குரங்குகளுக்கு பாம்பு என்றால் பயம் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அதை மனதில் வைத்து எனக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்துள்ளேன். தென்னை மரங்களில் பாம்பு படம் வரைந்ததால் இந்த படத்தை பார்த்த குரங்குகள் நிஜ பாம்பு என்று பயந்து மரத்தில் ஏறுவதில்லை. இதனால் எனக்கு தென்னை விவசாயத்தில் சரியான மகசூல் கிடைத்து வருகிறது.
இளநீர் மற்றும் தேங்காய்களை பறித்து குரங்குகள் அட்டகாசம் செய்தால் பாம்பு ஓவியத்தை தென்னை மரத்தில் விவசாயிகள் அனைவரும் வரைந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவகங்கை மாவட்டத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது.
- சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சியில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் இருந்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சி காந்தி நகரில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அந்த பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் சரண்யா செந்தில்நாதனிடம் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். தற்போது காந்தி நகர் முதல் மற்றும் 2-வது வீதிகளில் சாக்கோட்டை யூனியன் தலைவர் நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமைதாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசன், துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, கவுன்சிலர்கள் செல்வி, செந்தில், கிளை செயலாளர்கள் ராமு, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.






