search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "self help groups"

    • 7 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.44 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை குழுக்களுக்கு கடன்களை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சரகம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் 7 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.44 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை கலந்துகொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன்களை வழங்கினார். இதில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், பூதலூர் கூட்டுறவு சார்பதிவாளர்-கள அலுவலர் சந்தியாஸ்ரீ, சங்கத்தின் செயலாட்சியர் நிஜந்தன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் ஓம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • ”வாங்குவேர் விற்பனையாளர்” ஒருங்கி ணைப்பு கூட்டம் நடத்திட வேண்டும்.
    • தனிநபர் தொழில் முனைவோர்க ளாகவும், அன்றாடம் பொருள் உற்பத்தியாளர் களாகவும், சுய உதவிக்குழு உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியி ட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுய உதவிக்குழுக்களில் உற்பத்தி பொருட்களின் விற்பனையை மேம்படுத்து வதற்கும், சந்தைபடு த்திடவும், "வாங்குவேர் விற்பனையாளர்" ஒருங்கி ணைப்பு கூட்டம் நடத்திட வேண்டும். வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், சுய உதவிக்குழுவின் தனிப்பட்ட உற்பத்தியாளராகவும் இருக்கலாம் மற்றும் தனிநபர் தொழில் முனைவோர்க ளாகவும், அன்றாடம் பொருள் உற்பத்தியாளர் களாகவும், சுய உதவிக்குழு உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.

    விற்பனையாளர்கள் தங்கள் பெயர், உற்பத்தி பொருட்களின் விபரம் மற்றும் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை வாங்குபவர்களும் (வர்த்த கர்கள்) மாவட்டத்திலுள்ள மேலாண்மை அலகு, மகளிர் திட்ட அலுவலகத்தில் வருகிற 24.07.2023-க்குள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட கலெக்டர் வினீத் 3 குழுக்களுக்கு வங்கி கடன் ரூ.11 லட்சம் வழங்கினார்.
    • 14 புதிய குழுக்களுக்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.56. லட்சம் வழங்க பரிந்துரை செய்யப்ப்ட்டது.

    காங்கேயம் :

    காங்கேயம் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சுய உதவிக்குழுவிற்கு தர மதிப்பீடு செய்தலும் புதிய மகளிர் குழு அமைத்தல் நிகழ்ச்சியும் சிவன்மலையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வினீத் கலந்து கொண்டு 3 குழுக்களுக்கு வங்கி கடன் ரூ 11 லட்சம் வழங்கினார். 14 புதிய குழுக்களுக்கு தர மதிப்பீடு செய்யப்பட்டு ரூ 56. லட்சம் வழங்க பரிந்துரை செய்யப்ப்ட்டது. புதிய குழு தொடங்க விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இதில் ஊரக வாழ்வாதர இயக்க உதவித்திட்ட அலுவலர் ஜோசப், ரெத்தினராஜ், யூனியன் சேர்மன் மகேஸ் குமார், சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் துரைசாமி, கனரா வங்கியின் பொதுமேலாளர், மற்றும் வட்டார அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் காங்கேயம் சுய உதவிக்குழு வட்டார மேலாளர் சந்தா நன்றி கூறினார்.

    • தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் 942 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ரூ.61.47 கோடி மதிப்பில் வங்கி கடன்கள் 11775 உறுப்பினர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

    தேனி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற விழாவில் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி நேற்று தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் 942 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 11775 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.61.47 கோடி மதிப்பில் வங்கி கடன் உதவிகளையும் அதிக அளவில் கடன் வழங்கிய 2 வங்கிகளுக்கு மாவட்ட அளவிலான விருது மற்றும் சான்றிதழ்களையும், 6 வங்கிகளுக்கு கிளை அளவிலான வங்கியாளர் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 8473 உறுப்பினர்களுக்கு ரூ.52.02 கோடி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வங்கி பெருங்கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 39 குழுக்களை சேர்ந்த 468 உறுப்பினர்களுக்கு ரூ.1.65 கோடி, சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 118 குழுக்களை சேர்ந்த 1376 உறுப்பினர்களுக்கு ரூ.6.44 கோடி, சமுதாய முதலீட்டு நிதி திட்டத்தின்கீழ் 84 குழுக்களை சேர்ந்த 1008 உறுப்பினர்களுக்கு ரூ.1.25 கோடி, உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொடக்க நிதி திட்டத்தின்கீழ் ஒரு குழுவை சேர்ந்த 300 உறுப்பினர்களுக்கு கடன் உதவி உட்பட ரூ.61.47 கோடி மதிப்பில் வங்கி கடன்கள் 11775 உறுப்பினர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

    இதில் மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், தேனி-அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் திட்டத்தில் தொழில் தொடங்க சுயஉதவிக்குழுவினர், கூட்டுறவு சங்கங்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழில் வளம் பெருகு வதற்காக தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று,மத்திய அரசின் 60சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் 'பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் (PMFME)" ஆகும்.

    இந்த திட்டத்தின் கீழ் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், அரிசி ஆலை, இட்லி, தோசைக்கான மாவு தயாரித்தல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்கள் தயாரித்தல், செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரித்தல் மற்றும் சாம்பார் பொடி,இட்லிப்பொடி போன்ற மசால்வகை பொடிகள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும், குறுந்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்படுத்தல், தொழில்நுட்ப ஆலோசனைகள்,திறன் மேம்பாட்டுப் பயிற்சி,திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    தொழில் நடத்த தேவையான உரிமங்கள், தரச்சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்தத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

    இந்த திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர், ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு ள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர், கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம்.

    ரூ.1 கோடி வரையிலான உணவுப் பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறத்தகுதி பெற்றவை ஆகும். திட்டத் தொகையில் 10சதவீதம் முதலீட்டாளர் பங்காகவும், 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாகவும் வழங்கப்படும்.

    அரசு 35சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கும். சுய உதவிக்குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.

    தனியான தொழில் திட்ட ங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி மட்டு மன்றி, தொகுப்புக் குழுமங்க ளுக்குத் தேவையான பொதுக் கட்டமைப்பு வசதிகள், பொது வசதியாக்க மையங்கள் ஏற்படுத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    தற்பொழுது இந்த திட்டம் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. உணவுப்பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை நிறுவவும், விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் மேற்கொள்ள pmfme. mofpi. gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட தொழில் மையம்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,சிவகங்கை என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04575-240257, 8925533989 என்ற தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
    • கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.

    மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் பகுதியில் இன்று சுய உதவிக் குழுக்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    இதற்கு முன்பாக, ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நமீபியாவில் இருந்து இந்தியா வந்துள்ள எட்டு சிறுத்தைகள் நம் விருந்தினர்கள். அவர்களைக் கைதட்டி அன்புடன் வரவேற்குமாறு உங்கள் அனைவரையும், அனைத்து நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    என் பிறந்த நாளில், நான் என் அம்மாவிடம் சென்று, அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவது வழக்கமாக கொண்டிருந்தேன். இன்று என்னால் அவரிடம் செல்ல முடியவில்லை. ஆனால் பழங்குடியினர் பகுதிகளிலும் கிராமங்களிலும் கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.

    கடந்த நூற்றாண்டின் இந்தியாவிற்கும் இந்த நூற்றாண்டின் புதிய இந்தியாவிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் நமது பெண்களின் சக்தி பிரதிநிதித்துவமாக இருப்பது. இன்றைய புதிய இந்தியாவில் பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி பறக்கிறது.

    கடந்த 8 ஆண்டுகளில், சுய உதவிக் குழுக்களை மேம்படுத்துவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்துள்ளோம். இன்று நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர். இந்த பிரச்சாரத்தில் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒரு சகோதரியாவது இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

    கிராமப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்ளூர் தயாரிப்புகளை பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒடிசா மாநிலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #Patnaik #SelfHelpGroups
    பூரி:

    ஒடிசா மாநிலம் பூரி நகரில் இன்று ‘மிசன் சக்தி’ என்ற பெயரில் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த சுமார் 50 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் நவீன் பட்நாயக், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    வட்டியில்லா கடன் வழங்குவதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 70 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 3000 ரூபாய் நிதி உதவியையும் அவர் வழங்கினார். 

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ‘மேக் இன் ஒடிசா’ கருத்தரங்கில் பேசிய பட்நாயக், மாநிலத்தில் உள்ள 6 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #Patnaik #SelfHelpGroups
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு துறைகள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும் போது, 30 சதவிகிதம் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். #MehboobaMufti #SelfHelpGroups





    ஸ்ரீநகர் :

    காஷ்மீர் மாநிலத்தில் திறமை வாய்ந்த பட்டதாரிகள் மூலம் அவர்களின் திறமைக்கு ஏற்ப அம்மாநிலத்தின் பொறியியல், கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்புகளை தரம் உயர்த்தும் பணிகளுக்கு தேவையான பொருட்களை சுயமாக தயாரித்துக்கொடுப்பதற்காக சுய உதவிக்குழுக்கள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் இயங்கி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த சுய உதவிக்குழுக்களை சீரமைப்பது, தேவைக்கு ஏற்ப அவர்களை துறைவாரியாக ஒருங்கிணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த ஆலோசனையின் போது சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த தேவையான திருத்தங்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பான கருத்துக்களை அவர் கேட்டறிந்தார். ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் மெகபூபா முப்தி சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு அம்மாநில அரசுத்துறைகளில் 30 சதவிகிதம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    மேலும், இதுவரை சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை 60 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார். இதை செயல்படுத்த தேவைப்படும் நிதி குறித்த திட்ட வரைவை ஜம்மு காஷ்மீர் வங்கி அடுத்த 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். #MehboobaMufti #SelfHelpGroups
    ×