

சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிறுமருதூர் கண்மாய் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பொதுப்பணித்துறை சார்பில்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கண்மாயின் நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது கண்மாய் நிரம்பி மாறுகால் பாய்கிறது.
இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர். கண்மாய் நிரம்பியதால் இந்த ஆண்டு விவசாயம் நல்ல முறையில் நடக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.