என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த 6-ந் தேதி நந்தினிக்கு பிறந்தநாள். தனது பிறந்த நாளை ஏற்காட்டில் கொண்டாடலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு லோகு மணி, ஏற்காடு செல்ல வேண்டாம், உள்ளூரிலேயே கொண்டா–டலாம் என கூறியுள்ளார்.
    • இதனால் மனம் உடைந்து காணப்பட்ட நந்தினி, தனது தாய் வீட்டில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குழந்தையுடன் சென்றார. அப்போது, தனது தந்தையிடம் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி, எலி பேஸ்ட்டை வாங்கிக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்ட முத்தம்பட்டி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் லோகு மணி (வயது 28). இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அமரகுந்தி அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த நந்தினி (வயது 25) என்பவரை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி நந்தினிக்கு பிறந்தநாள். தனது பிறந்த நாளை ஏற்காட்டில் கொண்டாடலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு லோகு மணி, ஏற்காடு செல்ல வேண்டாம், உள்ளூரிலேயே கொண்டா–டலாம் என கூறியுள்ளார்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட நந்தினி, தனது தாய் வீட்டில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குழந்தையுடன் சென்றார. அப்போது, தனது தந்தையிடம் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி, எலி பேஸ்ட்டை வாங்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி கணவருடன் வீட்டிற்கு வந்த நந்தினி, அந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனால் நந்தினிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை கணவர் லோகுமணி, சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    அங்கு டாக்டர்களிடம் எலி மருந்து சாப்பிட்ட விஷயத்தை கூறினார். அதை தொடர்ந்து நந்தினிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் சப் கலெக்டர் மற்றும் கொண்ட–லாம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலையில் குளிர், சூரிய உதயத்திற்கு பிறகு கடும் வெயில் என்று மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
    • இந்நிலையில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம், நாமக்கல்லில் கடந்த 2 நாட்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் முழுமையான கோடை காலமாக இருக்கும். ஆனால் நடப்பாண்டில் ஏப்ரல் துவங்கும் முன்பே, கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

    இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலையில் குளிர், சூரிய உதயத்திற்கு பிறகு கடும் வெயில் என்று மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    இந்நிலையில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 98 டிகிரி பதிவான நிலையில், நேற்று 100.6 டிகிரி வெயில் பதிவானது. அதே நேரத்தில் நாமக்கல்லில் நேற்று முன்தினம் 100.4 டிகிரி வெயில் பதிவான நிலையில், நேற்று 98.6 வெயில் பதிவானது.

    கடந்த 2 நாட்களில் 2 மாவட்டங்களிலும் வெயில் உச்சம் தொட்டுள்ளது. இந்த வெயிலால் வாகன ஓட்டிகள், தள்ளு வண்டி கடை உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் இளநீர், கூல்டிரிங் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வீடுகளில் புழுக்கம் அதிகமாக காணப்பட்டது. 

    • சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் தலைமை வகித்தார். இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, துாய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைப்பு அரசாணை எண்.139-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,373 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,223 கனஅடியாக சரிந்தது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 1,200 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,373 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,223 கனஅடியாக சரிந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 103.46 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 103.45 அடியாக குறைந்துள்ளது.

    • சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டு செல்வார்கள்.
    • அர்ச்சகர் ஒருவரும், அவருடைய பொறுப்பில் 10-க்கும் மேற்பட்ட பதிலி அர்ச்சகர்கள் பூஜை செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் நகரில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த கோவிலில் அர்ச்சகர் ஒருவரும், அவருடைய பொறுப்பில் 10-க்கும் மேற்பட்ட பதிலி அர்ச்சகர்கள் பூஜை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சுமார் 15 வயதுடைய சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர் நந்திகேஸ்வரர் சிலை அருகே வந்தபோது அர்ச்சகர் ஒருவர் கன்னத்தைக் கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்கு அருகில் இருந்த பெற்றோர்கள் சத்தம் போட்டனர். அப்போது, அங்கிருந்த திருக்கோவில் பாதுகாப்பு உதவி அலுவலர் ஒருவர், புகார் கொடுத்தால் உங்கள் பெண்ணுக்கு தான் அவமானம் நேரிடும் என்று மிரட்டி உள்ளதாக தெரிகிறது.

    இது சம்பந்தப்பட்ட வீடியோ வலைத்தளங்களில் பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    சேலம்:

    தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்றார். மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாநிலச் செயலாளர் வேலுநாயக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை, விவசாயகளின் தோட்டத்திற்கு வேளாண் பணிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பாளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது.
    • சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    காகாபாளையம்:

    சேலம் அருகே இடங்கண சாலையை அடுத்த சாத்தம்பா–ளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இது சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக ஜே.சி.பி. உதவியுடன் டிப்பர் லாரியில் பல லோடு மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள் இடங்கண சாலை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்ரும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    இதையடுத்து சாத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை சின்னம்பட்டி பிரதான சாலையில் உள்ள இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அங்கு சாமியானா பந்தல் அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.

    • சேலத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
    • விபத்தில் சிக்கிய 2 பேரில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

    இவரது மகன் நித்தியானந்தம் (வயது 20). இவர் சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில், அதே கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படிக்கும் ஓமலூர் அருகே உள்ள கோட்டை மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஹரிஷ் (20) என்பவரை அழைத்துக் கொண்டு அயோத்தியாப்பட்டணம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள், லாரியில் உரசி இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் நித்தியானந்தம் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியே வந்தவர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நித்தியானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிஷூம் காயமடைந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சரக்கு வேன் மோதி கூலி தொழிலாளி பலியானர்.
    • விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

    சேலம்:

    சேலம் திருவாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65), கூலி தொழிலாளி.

    இவரது மகன் வீடு பள்ளப்பட்டியில் உள்ளது. சம்பவத்தன்று, மகனை பார்ப்பதற்காக பழனிச்சாமி, பள்ளப்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் டிரைவர், பழனிச்சாமி மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். இதில் பின்னால் வந்த அரசு விரைவு பஸ் சரக்கு வேன் மீது மோதியதில், வேன் நிற்காமல் சென்று பழனிச்சாமி மீது மோதியது. இந்த விபத்தில் பழனிசாமி சம்பவ இடத்திலே பரிதாமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி போலீசார் பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.
    • தேர்வு துறையில்‌ வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின்‌ போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள்‌ மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.

    தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. 155 மையங்களில் 16 ஆயிரத்து 706 மாணவர்கள் 19,437 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 143 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

    இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சேலம் கோட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை முதலே மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தேர்வில் பங்கேற்றனர்.

    முன்னதாக தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர். தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கினர்.

    • 10 பெண்கள் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று சேலம் வந்தனர்
    • புக்கிரவாரி செல்வதற்காக பெங்களூரு-காரைக்கால் ெரயிலில் ஏறினர்

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், தென் தொரசானூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 30). இவர் மற்றும் 10 பெண்கள் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று சேலம் வந்திருந்தனர். சேலத்தில் மளிகை பொருட்கள் வாங்கிய பிறகு சேலம் மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து புக்கிரவாரி செல்வதற்காக பெங்களூரு-காரைக்கால் ெரயிலில் ஏறினர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மகேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி விட்டார். இதுகுறித்து அவர் சேலம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் ஒரே வளாகத்தில் வரும்படி கிராம ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு
    • புதிய ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கொங்குபட்டியில் தமிழக அரசு சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் ஒரே வளாகத்தில் வரும்படி கிராம ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ஏற்கனவே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்த இடத்தில் 2 அலுவலகங்களும் கட்ட போதுமான இட வசதி இல்லாததால், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்தக் குழுவினர் புதிய ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். கொங்குபட்டியில் இருந்து பெரியக்கொம்பானுர் செல்லும் வழியில் கோனையன் கரடு என்ற இடத்தில் கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், கொங்குபட்டி பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும், அதே இடத்தில் கட்ட வேண்டும் எனவும், இடம் பற்றாக்குறை என்றால் அப்பகுதியைச் சேர்ந்த தேன்மொழி மற்றும் சாரங்கபாணி ஆகியோர் தங்கள் நிலத்தை தானமாக தருவதாக தெரிவித்ததாக தெரிகிறது.

    மேலும் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பொதுமக்கள் சென்று வர போக்குவரத்து குறைவான கரடு பகுதி. பெண்கள் தனியாக அலுவலகம் சென்று வர முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். மேலும் கடந்த 9-ந் தேதி தாலுகா அலுவலகத்தில் குடியுரிமை ஒப்படைப்பு போராட்டமும் நடத்தினர்.

    உயர் மட்ட குழு ஆய்வு

    அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், மீண்டும் உயர் மட்ட குழு அமைத்து இடத்தை ஆய்வு செய்து குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய கட்டிடம் கட்டுவது எனமுடிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நேற்று ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தணிக்கை ராமஜெயம், காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ள இடம், பொதுமக்கள் தானமாக கொடுப்பதாக கூறிய இடம், தற்போது ஊராட்சி செயலக கட்டிடம் பணி நடைபெறும் இடம், அந்த இடங்களில் இருந்து மற்ற கிராமங்களுக்கு உள்ள தூரம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டு ஊராட்சி செயலக கட்டிடம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் அறிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×