சரக்கு வேன் மோதி கூலி தொழிலாளி பலி

சரக்கு வேன் மோதி கூலி தொழிலாளி பலியானர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
சரக்கு வேன் மோதி கூலி தொழிலாளி பலி
Published on

சேலம்:

சேலம் திருவாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65), கூலி தொழிலாளி.

இவரது மகன் வீடு பள்ளப்பட்டியில் உள்ளது. சம்பவத்தன்று, மகனை பார்ப்பதற்காக பழனிச்சாமி, பள்ளப்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் டிரைவர், பழனிச்சாமி மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். இதில் பின்னால் வந்த அரசு விரைவு பஸ் சரக்கு வேன் மீது மோதியதில், வேன் நிற்காமல் சென்று பழனிச்சாமி மீது மோதியது. இந்த விபத்தில் பழனிசாமி சம்பவ இடத்திலே பரிதாமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி போலீசார் பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com