என் மலர்
சேலம்
- பிரபு (வயது 42). மளிகை வியாபாரம் செய்து வரும் இவர், பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
- சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அதில் உள்ள பெட்டியை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த ரூ.5.17 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
வாழப்பாடி:
வாழப்பாடியை அடுத்த குறிச்சி ஊராட்சி கண்ணுக்காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 42). மளிகை வியாபாரம் செய்து வரும் இவர், பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று இவர் தனியார் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து, தனது இருசக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு, வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே ஒரு உணவகத்தில் சாப்பிடு வதற்காக சென்றார்.
தனது இரு சக்கர வாகனத்தை உணவகம் முன்பாக நிறுத்தியிருந்தார். சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அதில் உள்ள பெட்டியை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த ரூ.5.17 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
இதனால் பதறிப்போன வியாபாரி பிரபு, இதுகுறித்து வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் ரூ.5.17 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாழப்பாடியில் பட்டப்ப கலில் நகை வியாபாரியின் ரூ 5.17 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போன சம்பவம், இப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையம் அருகிலுள்ள உணவகங்களில், ஓரிரு தினங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என இன்ஸ்பெக்டர் உமா சங்கர் அறிவுறுத்தி உள்ளார்.
- ளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க வாழப்பாடி கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
- ஏலத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 485 விவசாயிகள், 2500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் ரூ.65 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
வாழப்பாடி:
சேலம் மாவட்ட வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க வாழப்பாடி கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 485 விவசாயிகள், 2500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு குவிண்டால் ஆர்.சி.எச். ரக பருத்தி தரத்திற்கேற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 8,040 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ.7,600 முதல் ரூ. 8,799 வரையும், கொட்டுப் பருத்தி ரூ. 4,399 முதல் ரூ. 5,999 வரையும் விலை போனது.
மொத்தம் ரூ.65 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. வியாபாரிகள் மற்றும் முகவர்கள் ஏலத்தில் பங்கேற்று விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்தனர்.
- கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.
- தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள், வானம் பார்த்த மானாவரி புஞ்செய் நிலங்களில் பருவமழையை பயன்படுத்தி, வறட்சியை தாங்கி வளர்ந்து மகசூல் கொடுக்கும் குறுகிய கால மானாவரி பயிரான மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை, ஆண்டு தோறும் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.
வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், வேப்பிலைப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் பகுதியில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.
தற்போது மக்காச்சோள கதிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாரானதால், கதிர்களை அறுவடை செய்து உதிர்த்து, உலர்த்தி பதப்படுத்தி சந்தைப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால், கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், தனியார் நிறுவனங்களின் முகவர்களும் விலையை கட்டுக்குள் வைத்துள்ளனர்.
தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது. ஓரிரு வாரங்களில் மக்காச்சோள அறுவடை முடிவுக்கு வரும் என்பதால், தற்போது மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் விவசாயிகள் உடனே விற்பனை செய்யாமல், வெய்யிலில் உலர வைத்து பதப்படுத்தி, மார்ச் மாத இறுதிக்குள் மக்காச்சோளம் விலை ரூ.2,500 வரை உயரும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொன்னாரம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
ஒரு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு, விதை கொள்முதல், ஏர் உழுதல், விதைத்தல், களைப்பறித்தல், உரமிடுதல், புழுக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், அறுவடை செய்தல், கதிரடித்து உலர்த்தி பதப்படுத்தல் ஆகியவவற்றுக்கு ஏறக்குறைய ரூ. 30 ஆயிரம் வரை செலவாகிறது. 25 மூட்டையே மகசூல் கிடைக்கிறது.
வாழப்பாடி பகுதி விவசாயிகள் ஒரே நேரத்தில் மக்காச்சோளத்தை அறுவடை செய்து விற்பனை செய்வதால், வியாபாரிகளும், முகவர்களும் விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால், 4 மாத உழைப்பிற்கு ரூ.20 ஆயிரம் கூட வருவாய் கிடைப்பதில்லை.
எனவே, அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை உடனே விற்பனை செய்யாமல் விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் விலை உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- டெல்டா மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது.
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 500 கன அடி தண்ணீர் கூடுதலாக விட முடிவு செய்தனர்.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 1200 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,373 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,223 கன அடியாக சரிந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களாக மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.
தற்போது கோடை காலம் தொடங்கியதை அடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை மாவட்டங்களில் வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது. குறிப்பாக சேலத்தில் சராசரி 98.96 டிகிரி செல்சியஸ் வெயிலும், நாமக்கல்லில் 96.8 டிகிரி செல்சியஸ் வெயிலும் பதிவாகிறது.
வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் குடிநீர் அருந்துகின்றனர். இதனால் டெல்டா மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 500 கன அடி தண்ணீர் கூடுதலாக விட முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 8.30 மணியில் இருந்து 1500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர் வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 103.45 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 103.44 அடியாக சரிந்தது.
- புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
- வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமின்றி தப்பினர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்.டி.பி.ஐ அமைப்பின் சேலம் மாவட்டத் தலைவர் சையது அலி, சேலம் கிளைத் தலைவர் காதர் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கோர்ட் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி பெரியசாமி தலைமையிலான போலீசார், கிச்சிபாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சையத் அலி வீடு மற்றும் சேலம் அம்மாபேட்டையில் உள்ள சேலம் கிளை தலைவர் காதர்உசேன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இன்று காலை தொடங்கிய சோதனை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- 2022-2023-ம் கல்வியாண்டு, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது.
- ஆப்சென்ட்-க்கு என்ன காரணம்? என்பது குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம், சேலம் மாவட்ட பள்ளிக்கல்வி முதன்மை அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சேலம்:
2022-2023-ம் கல்வியாண்டு, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித்தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுத நுழைசீட்டு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழ் மொழித்தேர்வில் 2,492 பேர் பங்கேற்வில்லை. இது கல்வி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே நேற்று நடந்த பிளஸ்-2 ஆங்கிலம் தேர்விலும் 2,418 பேர் பங்கேற்கவில்லை. சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 40 ஆயிரத்து 28 பேர் ஆங்கில தேர்வு எழுத வேண்டும். ஆனால், 37 ஆயிரத்து 402 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்துகொண்டு தேர்வை எழுதினர். இதனால் 2,418 பேர் ஆங்கில தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆப்சென்ட்-க்கு என்ன காரணம்? என்பது குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம், சேலம் மாவட்ட பள்ளிக்கல்வி முதன்மை அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயர் கல்வி அதிகாரிகள், எந்த எந்த பள்ளிகளில் ஆப்சென்ட் அதிகமாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கவில்லையா? எனவும், அதிக வெயில் காரணத்தால் தேர்வு எழுத வரவில்லையா? எனவும் பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படும். மேலும் அந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்க செய்ய போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்தும் வகுப்பு ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சமீப காலமாக இளம்வயதினரிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
- நவீன தொழில்நுட்பத்தில் சில தேவையற்ற பயன்பாடுகள் உள்ளன.
சேலம்:
சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை அழைத்துக்கொண்டு பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அரசு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின. பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன், சிறுமி வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது மாணவிக்கும், அந்த மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருமே 10-ம் வகுப்பு படிப்பதால் பாடம் தொடர்பான சந்தேகம் கேட்பதற்காக அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இதனால் பெற்றோர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களது பழக்கம் நாளடைவில் எல்லை மீறி போனது. 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அம்மாபேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மாணவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் கர்ப்பத்தை கலைப்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் பெற்றோர் மற்றும் டாக்டர்கள், குழந்தை நல அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 2 பேருக்கும் 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளதால் மாணவர் கைது செய்வது குறித்தும் குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 2 பேரின் எதிர்காலம் கருதியும், சிறுமியின் உடல்நிலை கருதியும் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறார்கள்.
சமீப காலமாக இளம்வயதினரிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் சில தேவையற்ற பயன்பாடுகள் உள்ளன. செல்போன் மூலம் சிலர் ஆபாச படங்கள் பார்ப்பது, ஆபாச இணையதளங்களில் மூழ்குவது, சாட்டிங், டேட்டிங் என இயல்புக்கு மாறான பழக்க வழங்கங்களில் ஈடுபடுகிறார்கள்.
இதன் விளைவாகவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். செல்போன் போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களை ஆக்கப்பூர்வ செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
மேலும் படிக்கும் குழந்தைகளில் செல்போன் பயன்பாடு, அவர்களின் அன்றாட நடைமுறை அனைத்தையும் பெற்றோர் கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
- சுந்தரேசன் வீட்டிலிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 65 கிராம் தங்க நகைகள், 48 கிராம் பிளாட்டினம் மற்றும் செல்போன் ஆகிய பொருட்கள் மாயமாகின.
- சுந்தரேசன் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
சேலம்:
சேலம் கோரிமேடு அருகே உள்ள அறிவியல் பூங்கா சாலையில் வசித்து வருபவர் சுந்தரேசன் ஜெயமணி (வயது 39). இவரது வீட்டில் கடந்த 4-ந் தேதி முதல் 8-ம் தேதி வரை எலக்ட்ரிக்கல் வேலை நடந்து வந்தது.
இந்த நிலையில் சுந்தரேசன் வீட்டிலிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 65 கிராம் தங்க நகைகள், 48 கிராம் பிளாட்டினம் மற்றும் செல்போன் ஆகிய பொருட்கள் மாயமாகின.
இதுகுறித்து சுந்தரேசன் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்ய வந்த பூபதி, தீபக், ஹரி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் இணைச் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.
- பெட்ரோல் பங்க் நிர்வாகம், மாநகராட்சிக்கு ரூ.1.87 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளது.
சேலம்:
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் இணைச் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பெட்ரோல் பங்க் நிர்வாகம், மாநகராட்சிக்கு ரூ.1.87 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளது. இந்த பணத்தை செலுத்தச் சொல்லி மாநகராட்சி அலுவலர்கள் பலமுறை அறிவிப்பு கடிதங்கள் அனுப்பியும் வரி பாக்கியை கட்டவில்லை.
இதையடுத்து இன்று காலை கொண்டலாம்பட்டி மண்டலம் உதவி வருவாய் அலுவலர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரன் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், பெட்ரோல் பங்கை பூட்டி சீல் வைத்தனர்.
வரி பாக்கி செலுத்தாததால் பெட்ரோல் பங்க் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகமாயின.
- அரசின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பின்பு படிப்படிப்படியாக கொரோனா கட்டுக்குள் வந்தது.
சேலம்:
3 ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. மார்ச் மாதத்தில் இருந்து பாதிப்பு அதிகமாகி 2020-21-ம் ஆண்டுகளில் உச்சத்தை தொட்டது. கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகமாயின. அரசின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பின்பு படிப்படிப்படியாக கொரோனா கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 3-ந்தேதி ஒருவருக்கு கொரோனா தொற்ரு உறுதி செய்யப்பட்டது.
பின்னர் 4-ந்தேதி 2 பேருக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவுக்கு 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், அவர்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள். கொரோனா பரவல் அதிகரிப்பால் சேலத்தில் சுகாதாரத்துறை யினர் மற்ரும் மருத்து வத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
சேலத்தில் தேதி வாரியாக கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு:-
மார்ச் 3-ந்தேதி ஒருவர், 4-ந்தேதி 2 பேர், 5-ந்தேதி ஒருவர், 6-ந்தேதி ஒருவர், 7-ந்தேதி 3 பேர், 8-ந்தேதி ஒருவர், 9-ந்தேதி 2 பேர், 10-ந்தேதி 4 பேர், 11-ந்தேதி 5 பேர், 12-ந்தேதி 3 பேர், 13-ந்தேதி 3 பேர், 14-ந்தேதி 7 பேர்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 61 பேர் கொரோனா பாதிக்கப்பட்டனர். 1 லட்சத்து 30 ஆயிரத்து 272 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 1764 பேர் இறந்தனர். தற்போது 25 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ரு வருகிறார்கள்.
- ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா.
- அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. இவர் மீது வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனிடையே ஆஞ்சநேயா தேன்கனிகோட்டை கோர்ட்டில் வருகிற 31-ந்தேதி விசாரணைக்காக ஆஜர் ஆகவேண்டும் என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
- தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ந்தேதி மாசிநாயக் கன்பட்டியில் நடைபெற்றது.
சேலம்:
தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ந்தேதி மாசிநாயக் கன்பட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்,மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து, தற்போது 2-ம் கட்டமாக சேலம் மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி காலை 10 மணிக்கு தலைவாசல், பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் "சமத்துவம் தமிழென்று சங்கே முழங்கு" என்ற தலைப்பில் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., "கவிதைப் பெண்கள்" என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.






