என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒரே வாரத்தில் 28 பேருக்கு பாதிப்புசேலத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
- கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகமாயின.
- அரசின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பின்பு படிப்படிப்படியாக கொரோனா கட்டுக்குள் வந்தது.
சேலம்:
3 ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. மார்ச் மாதத்தில் இருந்து பாதிப்பு அதிகமாகி 2020-21-ம் ஆண்டுகளில் உச்சத்தை தொட்டது. கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகமாயின. அரசின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பின்பு படிப்படிப்படியாக கொரோனா கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 3-ந்தேதி ஒருவருக்கு கொரோனா தொற்ரு உறுதி செய்யப்பட்டது.
பின்னர் 4-ந்தேதி 2 பேருக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவுக்கு 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், அவர்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள். கொரோனா பரவல் அதிகரிப்பால் சேலத்தில் சுகாதாரத்துறை யினர் மற்ரும் மருத்து வத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
சேலத்தில் தேதி வாரியாக கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு:-
மார்ச் 3-ந்தேதி ஒருவர், 4-ந்தேதி 2 பேர், 5-ந்தேதி ஒருவர், 6-ந்தேதி ஒருவர், 7-ந்தேதி 3 பேர், 8-ந்தேதி ஒருவர், 9-ந்தேதி 2 பேர், 10-ந்தேதி 4 பேர், 11-ந்தேதி 5 பேர், 12-ந்தேதி 3 பேர், 13-ந்தேதி 3 பேர், 14-ந்தேதி 7 பேர்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 61 பேர் கொரோனா பாதிக்கப்பட்டனர். 1 லட்சத்து 30 ஆயிரத்து 272 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 1764 பேர் இறந்தனர். தற்போது 25 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ரு வருகிறார்கள்.






