என் மலர்
சேலம்
- வாழப்பாடியில் உள்ள புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் தலைமையில், விவசாயிகள் கறவை மாடுகளுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசு இலவச காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பால் உற்பத்தி விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில், விவசாயிகள் கறவை மாடுகளுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ 5 உயர்த்தி கொடுக்க வேண்டும்.
அனைத்து கறவை மாடுகளுக்கும் அரசு இலவச காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பால் உற்பத்தி விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆவின் பொது மேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் ஆய்வாளரான விஜய் பாபு, பால் கூட்டுறவு பதிவாளர் செந்தில்குமார், துணை பொது மேலாளர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பால் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் பணிகளை பார்வையிட்டனர்.
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக மணிப்பூரில் பணியாற்றி வந்தார்.
- கடந்த மாதம் 6-ந் தேதி 40 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 32). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், மிலன் (7), நிதன் (5) என்ற மகன்களும் உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக மணிப்பூரில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி 40 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இன்றுடன்(வெள்ளிக்கிழமை) விடுமுறை முடிய உள்ள நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அலெக்ஸ் பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளது ெதரியவந்தது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் விசாரித்து வருகிறார்.
- சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
- சோதனையால் சேலம் மத்திய சிறை முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 150-க்கும் மேற்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர்களுடம் அடங்குவர். இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் கஞ்சா மற்றும் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன், சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காலை 6.30 மணிக்கு சிறைக்கு அதிரடியாக சென்றனர்.
பின்னர் அங்குள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அஙகுலமாக சோதனை செய்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள், செல்போன் சார்ஜர், செல்போனை குழி பறித்து மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் இரும்பு ஆணிகள் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அந்த பொருட்கள் எப்படி உள்ளே வந்தது. அதற்கு சிறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உடந்தையா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கேமிரா பதிவுகள் குறித்தும் பார்வையிட்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சோதனையால் சேலம் மத்திய சிறை முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது.
- ஆவின் நிறுவனத்தில் கையிருப்பு உள்ள பால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதால் இன்று பெரிய அளவில் பால் தட்டுப்பாடு இல்லை.
சேலம்:
பால் உற்பத்தியாளர்கள், தீவனங்கள் விலை உயர்ந்துள்ளதால் பால் விலையை உயர்த்தி தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தனியார் பால் விலையைவிட ஆவின் பால் கொள்முதல் விலை 10 ரூபாய் குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு 35 ரூபாயும், எருமை பாலுக்கு 44 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனை பசும்பாலுக்கு ரூ.42 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.52 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் விலையை உயர்த்தாவிட்டால் பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர்.
இதை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பால் வளத்துறை அமைச்சர் நாசர், பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் இன்று முதல் தொடரும் எனவும், ஆவினுக்கு பாலை அளிக்காமல் தனியாருக்கு அளிப்போம் என்றும் கூறினார்.
இதை அடுத்து இன்று தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 30 சதவீத விவசாயிகள் பாலை ஆவினுக்கு வழங்காமல் புறக்கணித்தனர். அவர்களை அதிகாரிகள் சந்தித்து சமாதானப்படுத்தி வருகிறார்கள்.
ஆவின் நிறுவனத்தில் கையிருப்பு உள்ள பால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதால் இன்று பெரிய அளவில் பால் தட்டுப்பாடு இல்லை. ஆனால் தொடர்ந்து பால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் பால் விநியோகம் முற்றிலும் பாதிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாழப்பாடியில் உள்ள புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கருப்புக் கொடி கட்டப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பால் விலையை அரசு உயர்த்தி தரவிட்டால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்தி பால் வினியோகத்தை முற்றிலும் நிறுத்த உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எனவே அரசு உடனடியாக அவர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர்கள் குறைந்த அளவிலேயே ஆவினுக்கு இன்று பால் விநியோகம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
- நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 103.44 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 103.38 அடியாக சரிந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 1200 கன அடியாக நீடிக்கிறது.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று விநாடிக்கு 1,223 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று குறைந்து விநாடிக்கு 905 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 103.44 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 103.38 அடியாக சரிந்தது.
- சேலம் பழைய பேருந்து நிலையத்தை மறு சீரமைக்கும் பணி ரூ,96.53 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
- இப்பணியினை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிசனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
சேலம்:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையத்தை மறு சீரமைக்கும் பணி ரூ,96.53 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணியினை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிசனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது தரை மட்டத்தளம், தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மேற்கூரைத் தளம் ஆகியவற்றின் மொத்த பரப்பளவு எவ்வளவு தினமும் வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை, இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறித்தும் வணிக உபயோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பரப்பளவு குறித்தும் கேட்டறிந்தனர்.
பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி, கடைகளின் எண்ணிக்கை, வணிக உபயோகம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், வளாகத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்தூக்கிகள் வசதி, நேரம் காப்பாளர் அறை, காவாலர் அறை, போன்ற பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.
திருமணி முத்தாற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலத்தின் நீளம், அதற்காக எத்தனை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. என்பது குறித்தும் பேருந்துகள் மேலே செல்லுவதற்கும், கீழே வருவதற்கும் பாலத்தின் அகலம் போதுமானதாக உள்ளதா என்பதையும், பாலத்தின் இருபுறமும் கைப்பிடி சுவர் அமைத்து பேருந்துகள் பாதுகாப்பாக சென்றுவரவும் , அடுக்குமாடி பேருந்து நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி பாலத்தில் செல்லுவதற்கு போதுமான நடைபாதை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது மாநகர பொறியாளர் ஜி.ரவி செயற்பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் உள்ளனர்.
- தமிழ் மொழித் தேர்வில் 2,492 பேர் பங்கேற்வில்லை. இது கல்வி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்–சியை ஏற்–ப–டுத்–தி–யது.
- இதனிடையே நேற்று நடந்த பிளஸ்-2 ஆங்–கி–லம் தேர்விலும் 2,418 பேர் பங்கேற்கவில்லை.
சேலம்:
2022-2023-ம் கல்வியாண்டு, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்க ளில் நடைபெறுகிறது.
இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுத நுழைசீட்டு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழ் மொழித் தேர்வில் 2,492 பேர் பங்கேற்வில்லை. இது கல்வி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே நேற்று நடந்த பிளஸ்-2 ஆங்கிலம் தேர்விலும் 2,418 பேர் பங்கேற்கவில்லை. சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 40 ஆயிரத்து 28 பேர் ஆங்கில தேர்வு எழுத வேண்டும். ஆனால், 37 ஆயிரத்து 402 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வை எழுதினர். இதனால் 2,418 பேர் ஆங்கில தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆப்சென்ட் -க்கு என்ன காரணம்? என்பது குறித்து, ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம், சேலம் மாவட்ட பள்ளிக்கல்வி முதன்மை அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயர் கல்வி அதிகாரிகள், எந்த எந்த பள்ளிகளில் ஆப்சென்ட் அதிகமாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க வில்லையா? எனவும், அதிக வெயில் காரணத்தால் தேர்வு எழுத வரவில்லையா? எனவும் பல்வேறு கோணங்க ளிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிப்ெபறும் பள்ளி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாண வர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படும். மேலும் அந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்க செய்ய போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதா? என்பது குறித்தும் வகுப்பு ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சேலம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
- வாடிக்கையாளர்கள் தபால் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை வருகிற 22-ந்தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் கிழக்கு கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் கிழக்கு கோட்ட அளவில் தபால் குறித்த குறை தீர்க்கும் கூட்டம், சேலம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. வாடிக்கையாளர்கள் தபால் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை வருகிற 22-ந்தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.
மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் என்றால், அனுப்பிய தேதி, முழு விலாசம், பதிவு அஞ்சல் எண், அலுவலக பெயர் அனைத்தும் இடம் பெற்று இருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது தபால் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால், கணக்கு எண், பாலிசி எண், வைப்புத்தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
- மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பெருமாள் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிவகுமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து சிவக்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிவகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட உடன், அவரை கைது செய்த போலீசாரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசு சட்டசபையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
- அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.
சேலம்:
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு சட்டசபையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல் அளிக்காத, ஆளுநரை கண்டித்து சேலத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் ஆளுநருக்கு சாம்பல் மற்றும் மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
இதற்காக சேலம் தலைமை தபால் நிலையத்திற்கு, மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் 6 பேர் வந்தனர். அவர்களை, அங்கு பாதுகாப்புக்கு நின்ற டவுன் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் தபால் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நங்கவள்ளி அருகே கந்துகா ரன் காடு பகுதியை சேர்ந்த வர் மாரியப்பன் (வயது 70). இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
- ஆடுகளை மேய்த்துவிட்டு அவரது வீட்டின் அருகே பட்டியில் அடைத்துவிட்டு காலை வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து குதறியதில் 13 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது.
மேட்டூர்:
மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே கந்துகா ரன் காடு பகுதியை சேர்ந்த வர் மாரியப்பன் (வயது 70). இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று வழக்கம் போல ஆடுகளை மேய்த்துவிட்டு அவரது வீட்டின் அருகே பட்டியில் அடைத்துவிட்டு காலை வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து குதறியதில் 13 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி மாரி யப்பன் உடனடியாக வனத்து றைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இறந்து போன ஆடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் எனவும், அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து இறந்து போன ஆடுகள் கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு செய்து அப்பகு தியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இதே போல் நேற்று முன்தினம் கொளத்தூர் அருகே தார்க்காடு பகுதியை சேர்ந்த விவசாயி குஞ்சப்பன் என்பவருக்கு சொந்தமான 10 வெள்ளாடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்தது. தொடர்ச்சியாக கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி பகுதிகளில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்து வரும் சம்பவம் விவசாயிகளி டையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது.
ஆடுகளை கடித்து கொல்லும் மர்ம விலங்கு எது? வெறி நாயா அல்லது சிறுத்தையா? என சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்தி பொது மக்களின் அச்சத்தை போக்கி கால்ந டைகளை காப்பற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
- வாழப்பாடி புனித மைக்கேல் பள்ளியில், துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி முன்னிலையில், சுற்றுபுறத் துாய்மை விழிப்பு ணர்வு பிரச்சாரம் மற்றும் மாணவர்களின் சைக்கிள் பேரணி, மினி மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.
- இதனைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடியில், தூய்மை பாரத திட்டத்தின் நகரங்க ளின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவியருக்கு, திடக்கழிவு மேலாண்மை, குப்பை தரம் பிரித்தல், சுற்றுப்புற துாய்மையின் முக்கியவத்தும் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பேரூராட்சி தலைவர் கவிதா சக்கரவர்த்தி, செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி மற்றும் மன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில், வாழப்பாடி புனித மைக்கேல் பள்ளியில், துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி முன்னிலையில், சுற்றுபுறத் துாய்மை விழிப்பு ணர்வு பிரச்சாரம் மற்றும் மாணவர்களின் சைக்கிள் பேரணி, மினி மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது. பள்ளி முதல்வர் ஆனக்ஸ் ராணி, தாளாளர் அந்தோணி யம்மாள் ஆகியோர் விழிப்பு ணர்வு முகாமிற்கான ஏற்பா டுகளை செய்திருந்தனர்.






