என் மலர்
சேலம்
- மேச்சேரி வட்டம், கூனான்டியூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 12.5 ஏக்கர் தரிசு நில தொகுப்பில் மா ஒட்டு செடிகள் பயிரிடப்–பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது.
- கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 38 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு ரூ.67.62 லட்சம் மதிப்பீட்டில் 10 தொகுப்புகளில் திறந்தவெளி கிணறுகளும், 28 தொகுப்பு–களில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் மாவட்டம், மேச்சேரி வட்டாரத்தில் உள்ள கூனாண்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம் ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் குறித்து கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
இதில் மேச்சேரி வட்டம், கூனான்டியூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 12.5 ஏக்கர் தரிசு நில தொகுப்பில் மா ஒட்டு செடிகள் பயிரிடப்–பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது. இத்தரிசு நிலத் தொகுப்பில் தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்–பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் பொருத்தி மா ஒட்டு செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்க்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, பள்ளிப்–பட்டி, மல்லிகுந்தம் கிரா–மங்களில் கண்டறியப்பட்–டுள்ள தரிசு நிலத் தொகுப்பு களை ஆய்வு செய்து விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மீன் பண்ணை, கால்நடை பண்ணை போன்ற ஒருங்கி–ணைந்த பண்ணையத்திட்டம் அமைத்து விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் பெற வழிவகை செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் 2021 –2022-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 38 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு ரூ.67.62 லட்சம் மதிப்பீட்டில் 10 தொகுப்புகளில் திறந்தவெளி கிணறுகளும், 28 தொகுப்பு–களில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது 15 ஆழ்துளை கிணறு தொகுப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு பாசனத்திற்கு ஏற்றவாறு தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்–பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் வேளாண்மைத் துறைக்கென செயல்படுத்தப்–பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் விவசா–யிகள் அறிந்து பயன்பெறும் வகையில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, தோட்டக்–கலைத் துறை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர்கள் குமரவேல், ஸ்ரீயமுனா, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- நேற்று மாலை வீட்டில் பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த இந்த கெமிக்கலை, இவரது 2 வயது மகன் மித்திக் குளிர்பானம் என நினைத்து குடித்து விட்டான்.
- இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். இந்த விசைத்தறியில் நெய்யப்படும் துணிகளில் ஏற்படும் கரைகளை துடைப்பதற்காக ரசாயனம் பயன்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த இந்த கெமிக்கலை, இவரது 2 வயது மகன் மித்திக் குளிர்பானம் என நினைத்து குடித்து விட்டான்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மித்திக், இரவு 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மூத்த தமிழறி–ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்ப–டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவ–டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மூத்த தமிழறி–ஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்ப–டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதியாக 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவ–டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாலுகா அலு–வலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றிய–மைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்–படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்திலோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
மேலும், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்–பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என்று மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பவானி தெரிவித்துள்ளார்.
- சேலம் ஏற்காடு நெடுஞ்சாலை குமாரசாமிப்பட்டி பகுதியில் மரம் வெட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.
- வெட்டப்பட்ட மர கிளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் ஏற்காடு நெடுஞ்சாலை குமாரசாமிப்பட்டி பகுதியில் இன்று காலை வின்சென்ட் பகுதியை சேர்ந்த அழகு ராஜன் என்பவர் தனது வேலை ஆட்களை வைத்து எந்திரங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அனுமதி பெற்று தான் இந்த மரங்களை வெட்டுகிறீர்களா? என்று கேட்டதற்கு இதை சொல்வதற்கு நீங்கள் யார் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அழகு ராஜன், மரம் வெட்டும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு புறப்பட்டுச் செல்ல முயன்றார். அப்போது அங்கு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்து அழகு ராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அரசு அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அழகு ராஜன் மீது மரம் வெட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். வெட்டப்பட்ட மர கிளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
- கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 22-ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
இதில், உலக தண்ணீர் தின கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் பணிகள் நடக்கின்றன.
மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சித்திட்டம் , தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன்(குடிநீர்) இயக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும், ஊராட்சிகளில் தற்போது நடைபெறும் அனைத்து பணிகள், கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்சனைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும்.
- அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி யில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால் அது அகற்றிவிட்டு புதியதாக கட்டுவதற்காக சுமார் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிட்டு என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். மேலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டுவின் தந்தை முத்து என்பவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த போது அரசு ராணுவ வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் என கூறப்படுகிறது. அரசு ஆவ ணங்களில் இது புறம்போக்கு நிலம் என உள்ளது.
மேலும் அதே பகுதியில் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டிக் குடியிருந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் புதிய கட்டி டம் கட்டுவதால் இவர்கள் குடியிருக்கும் இடம் இல்லாமல் இருப்பதாகவும் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள மீதமுள்ள நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் அல்லது வேறு இடத்தில் பட்டா வழங்கிவிட்டு தற்போது கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கட்டிட பணியை தடுத்து ஜெ.சி.பி. எந்திரத்தை திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீடு இழப்பவர்களுக்கு புதிய இடத்தில் அரசு பட்டா வழங்க வேண்டும் என்றார். இதனால் காமலாபுரம் பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.
- செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
- போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
சேலம் சரகத்தில் கடந்த மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 49 பேர், அதிகபாரம் ஏற்றி வந்த 9 டிரைவர்கள், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 19 டிரைவர்கள், சிக்னலை மீறிய 57 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 45 பேர் உள்ளிட்ட 216 பேரின் லைசென்சை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.
அதன்படி போதையில் வாகனம் ஓட்டிய 216 பேரின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
- இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலும், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் வகையிலும் சாயப்பட்டறைகள் இயங்கு வதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம் தலை மையில் உதவி என்ஜினீ யர்கள் ஜாரி கொண்டலாம்பட்டி, சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, நெய்கா ரப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் ஆய்வு செய்தனர்.
அதில், சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
- வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- இதையடுத்து அமாவாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சேலம்:
பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து அமா வாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை இயக்கப்ப டுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமாவாசை, யுகாதி தினத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் மாதேஸ்வரன் மலைக்கு செல்வார்கள்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், தருமபுரியில் இருந்து மேச்சேரி மேட்டூர் வழியாகவும், சேலத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என்றார்.
- ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி குடி போதையில் தகராறு செய்தார்.
- இதுபற்றி கோகிலா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த மாதையன் மனைவி கோகிலா (வயது 33). இவர் வேலைக்கு சென்றுவிட்டு தாரமங்க லத்தில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அதே பேருந்தில் வந்த மேட்டு மாறனுர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (22) குடி போதையில் கோகி லாவிடம் தகராறு செய்தார். இதனால் பேருந்து நடத்து னர் சுரேசை மேட்டுமாரனுர் பகுதியில் கீழே இறக்கி விட்டு சென்றுள்ளார். இத னால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அடுத்த நாள் கோகி லாவிடம் சென்று தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி கோகிலா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
- டேனிஷ்பேட்டை ராஜமன்னார் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புதுடெல்லியை சேர்ந்த சுதா என்பவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
- நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகநாதன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை ராஜமன்னார் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36). இவர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புதுடெல்லியை சேர்ந்த சுதா என்பவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
இவர்களுக்கு சுதர்சன் (13), தியா (9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சுதர்சன் மற்றும் தியா ஆகிய 2 பேரும், புதுடெல்லியில் உள்ள சுதாவின் பெற்றோருடன் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகநாதன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய மனைவி மற்றும் பெற்றோர் லோகநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நேற்று தீவட்டிப்பட்டி போலீசில் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், லோகநாதன் உடலை கைப்பற்றி போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
- உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.
சேலம்:
கர்நாடக மாநிலம் உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-தஞ்சாவூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07325) வருகிற 20-ந்தேதி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3, 10, 17, 24-ந்தேதி ஆகிய 5 நாட்கள் இரவு 8.25 மணிக்கு உப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூரை சென்றடையும்.
மறுமார்க்கமாக தஞ்சாவூர்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.
இந்த ரெயில் இருமார்க்கமாகவும் ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, சிக்கபானவாரா, சர் எம்.விசுவேஸ்வரய்யா முனையம் பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திருச்சி போர்ட், திருச்சி சந்திப்பு, பூதலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.






