search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்
    X

    உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

    • உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
    • உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-தஞ்சாவூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07325) வருகிற 20-ந்தேதி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3, 10, 17, 24-ந்தேதி ஆகிய 5 நாட்கள் இரவு 8.25 மணிக்கு உப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூரை சென்றடையும்.

    மறுமார்க்கமாக தஞ்சாவூர்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

    இந்த ரெயில் இருமார்க்கமாகவும் ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, சிக்கபானவாரா, சர் எம்.விசுவேஸ்வரய்யா முனையம் பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திருச்சி போர்ட், திருச்சி சந்திப்பு, பூதலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×