என் மலர்tooltip icon

    சேலம்

    • மாதேஸ்வர மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் சாமி கோவில் மிகவும் புகழ் பெற்ற வழிபாட்டுதலங்களில் ஒன்றாகும்.
    • தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலம் மாதேஸ்வர மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் சாமி கோவில் மிகவும் புகழ் பெற்ற வழிபாட்டுதலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம் .

    தசரா , சிவன் ராத்திரி போன்ற முக்கியமான திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சென்று வருவார்கள். இந்த கோவிலில் புலியின் மீது மாதேஸ்வர சாமி அமர்ந்துள்ளது போல் ரூ 20 கோடி மதிப்பீட்டில் சாமி சிலை வடிவ மைக்கப்பட்டு ள்ளது. இது மட்டுமின்றி 250 கிலோ எடையுள்ள வெள்ளி ரதம் புதிதாக உருவாக்கப்பட்டு ள்ளது.

    இதை கர்நாடக முதல்-மந்திரி பசுவராஜ் பொம்மை இன்று திறந்து வைத்தார். இதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் மாதேஸ்வரன்மலைக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கபப்ட்டது.

    நிகழ்ச்சி யில் கர்நாடகா மந்திரிகள், அரசு அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

    • கிராமத்திற்கு அருகே உள்ள நார்த்தன்ஜேடு, குறிஞ்சிப்பாடி மலை கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசிக்கின்றனர்.
    • அரங்கம் கிராம மக்களும் இணைப்பு சாலை வேண்டும் போராடி வருகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது கொட்டச்சேடு மலைக் கிராமம். இந்த கிராமத்திற்கு அருகே உள்ள நார்த்தன்ஜேடு, குறிஞ்சிப்பாடி மலை கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசிக்கின்றனர்.

    25 ஆண்டுகளாக போராட்டம்

    இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், போக்கு வரத்திற்கு கொட்டச்சேடு காட்டு வழியை பயன்படுத்தி வந்தனர். இதனால் சாலை வசதி கேட்டு கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

    இதேபோல் கொட்டச்சேடு அருகே செந்திட்டு மற்றும் அரங்கம் கிராம மக்களும் இணைப்பு சாலை வேண்டும் போராடி வருகின்றனர். ஆனால் இணைப்பு சாலை அமைக்க இங்குள்ள சில எஸ்டேட் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இது தொடர்பாக நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    கலெக்டர் ஆய்வு

    இதை அறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மே கம் மற்றும் அதிகாரிகள், கொட்டச்சேடு மற்றும் நார்த்தன்ஜேடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டனர். உடனடியாக இணைப்புச் சாலை வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து, முதற்கட்டமாக கொட்டச்சே டில் இருந்து நார்த்தன்ஜேடு வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுத்தது. இதற்கு ஒரு தரப்பி னர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    போலீஸ் குவிப்பு

    இதையடுத்து நேற்று பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மண் சமப்படுத்தும் பணி தொடங்கியது. இந்த பணியை தடுக்க சிலர் முயற்சிக்கலாம் என தகவல் கிடைத்ததால், சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கென்னடி மற்றும் சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கொட்டச்சேடு பகுதியில் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    மலை கிராம மக்கள் மகிழ்ச்சி

    இதேபோல், செந்திட்டு மற்றும் அரங்கம் ஆகிய மலைவாழ் மக்களின் கோரிக்கைபடியும், அங்கு இணைப்புச் சாலை விரைவில் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இணைப்பு சாலை கேட்டு போராடி வந்த நார்த்தன்ஜேடு, குறிஞ்சிப்பாடி மலைவாழ் மக்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • ஏற்காடு வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • ஏற்காடு காந்தி பூங்கா பகுதியில் தொடங்கி கடைவீதி வழியாக சென்று ஏற்காடு பஸ் நிலையத்தில் பேரணி முடிவடைந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ஏற்காடு வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    ஏற்காடு காந்தி பூங்கா பகுதியில் தொடங்கி கடைவீதி வழியாக சென்று ஏற்காடு பஸ் நிலையத்தில் பேரணி முடிவடைந்தது. இதில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

    ஏற்காடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஹரிஅர்ச்சுனன் மற்றும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுடன் இணைந்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. 

    • மேட்டூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் மீன்கள் இனப்பெருக்க மையத்தில், மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப்படுகின்றன.

    மேட்டூர்:

    மேட்டூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் மீன்கள் இனப்பெருக்க மையத்தில், மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப்படுகின்றன.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, மேட்டூர் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணைக்கு நடப்பாண்டு 18.70 கோடி மீன் குஞ்சுகள், உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். அப்போது, மீன் குஞ்சுகளைக் கண்டறிந்து சேகரித்து வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. மீன்களை வளர்த்து அவற்றுக்கு ஊசி மூலம் ஹார்மோன் செலுத்தப்படுகிறது.

    4-வது நாளில் நுண்மீன் குஞ்சுகள் சேகரிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கு வளர்த்து விரலிகளாக விவசாயிகளுக்கும், ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. நுண் மீன்குஞ்சுகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மீன்வளத்துறைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் நுண் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. நடப்பு 2022-23-ஆண்டில் 18.70 கோடி நுண் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது, 18.72 கோடி நுண் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றனர்.

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாநில, மாவட்ட, வட்டார அளவில் கல்வி சாரா மன்ற செயல்பாடுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • சென்னையில் நடைபெற்ற பள்ளி சிறார் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், அபினேஷ் கண்ணா, ஷாலினி ஆகிய இருவரும் மாநில அளவில் முதலிடம் பெற்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாநில, மாவட்ட, வட்டார அளவில் கல்வி சாரா மன்ற செயல்பாடுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வெங்கரை பேரூராட்சித் தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.

    இதில் சென்னையில் நடைபெற்ற பள்ளி சிறார் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், அபினேஷ் கண்ணா, ஷாலினி ஆகிய இருவரும் மாநில அளவில் முதலிடம் பெற்றனர். இதேபோல் பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளியில் விடுமுறை எடுக்காமல் வருகை புரிந்த 11 மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. வினாடி - வினா போட்டி, கலைத் திருவிழா தனிநபர் நடனம் உள்ளிட்டவற்றில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் என 165 மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் முன்னாள் வெங்கரை பேரூராட்சித் தலைவர் நித்தியகுமாரி விஜயகுமார், வார்டு கவுன்சிலர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்ம சிங்கார வடிவேல் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை வெங்கரை டவுன் பஞ்சாயத்து சேர்மன் விஜி மற்றும் பள்ளி மேலாண்மை குழு செய்திருந்தனர்.

    • ஓமலூர் செல்லும் மெயின் ரோட்டில் தனியார் மேல்நிலை பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி, செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது.
    • சாலையின் இரு புறமும் சாலை விரிவாக்கம் செய்து புதிய நடைபாதையை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் மெயின் ரோட்டில் தனியார் மேல்நிலை பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரி, செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது.

    காலை, மாலை வேளையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் தாரமங்கலம் பேருந்து நிலையம் முதல் பள்ளி செல்லும் போதும், மாலையில் பேருந்து நிலையம் செல்லும் வரை சாலையின் இரு புறமும் சாலை விரிவாக்கம் செய்து புதிய நடைபாதையை நெடுஞ்சாலை துறையினர் அமைத்துள்ளனர். ஆனால் இந்த நடைபாதையை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் ஆட்டோக்கள், பொக்லைன் எந்திரங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    மேலும் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்தும் வந்துள்ளனர். சாலையில் பயத்துடன் கடந்து செல்லும் மாணவிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து இருப்பதாக கூறி சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பினர்.

    மனுவின்மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்ததின் பேரில் நேற்று சம்மந்தபட்ட இடத்திற்கு தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ், முரளிதரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், நெடுஞ்சாலை ஆய்வாளர் அருணாசலம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவிச்சந்திரன், ஓன்றியக்குழு தலைவர் சுமதிபாபு மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இந்த இடம் பாதசாரிகள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட இடம், இங்கு வாகனங்களை நிறுத்த கூடாது என்று கூறி நடைபாதையில் நிறுத்தி இருந்த ஆட்டோக்களை அப்புறபடுத்தினர்.

    மேலும் இந்த இடத்தில் மீறி வாகனங்களை நிதித்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

    • நிலாவில் நீர் வினியோகத்தின் பரந்த பகுதிக்கான வரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • மேற்பரப்பில் நீர் எவ்வாறு நகர்கிறது என்பது பற்றியும், தெளிவான, அடையாளம் காணக்கூடிய நிலாவின் அம்சங்களும் உள்ளது.

    நிலாவில் தண்ணீர் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. நிலாவில் தண்ணீர் இருந்தது என்பதை உறுதி செய்யும் விதமாக நிலாவிலேயே தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் அமெரிக்காவும், ஜெர்மனியும் இணைந்து இயக்கும் அகச்சிவப்பு வானியல் (சோபியா) விண் கலத்திற்கான ஸ்ட்ராடோஸ்பெரிக் அப்சர்வெட்டரியின் தரவு மூலம் நிலாவில் நீர் வினியோகத்தின் பரந்த பகுதிக்கான வரைப்படம் உருவாக் கப்பட்டுள்ளது. அதில் நிலாவின் மேற்பரப்பில் நீர் எவ்வாறு நகர்கிறது என்பது பற்றியும், தெளிவான, அடையாளம் காணக்கூடிய நிலாவின் அம்சங்களும் உள்ளது. குறிப்பாக ஆர்ட்டெமிஸ் பயணங்கள் சந்திரனில் தென் துருவத்தை இலக்காக கொண்டு நீண்ட இருப்பை உருவாக்குவதற்கும், நீண்ட கால பணிகளுக்கான ஆயத்த தலங்களை உருவாக்கு வதற்கும் இருக்கும்.

    • புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், தாமரைச்செல்வன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
    • அதிர்ச்சி அடைந்த பெண், சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தாமரைச்செல்வன் மீது புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தாமரைச்செல்வன். இவரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் புகார் கொடுக்க சென்றார்.

    அந்த பெண்ணிடம், தாமரைச்செல்வன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தாமரைச்செல்வன் மீது புகார் கொடுத்தார்.

    இதை அடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன்பேரில் விசாரணை நடத்தி நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதை அடுத்து தாமரைச்செல்வனை மாநகர போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாநகர போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடாமல் சங்கத்திற்கு பால் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    • பால் கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற சங்க உறுப்பினர்கள் கோரிக்கை முறையாக பால்வளத்துறை அமைச்சகம் மற்றும் ஆணையரகம் மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்படும்.

    சேலம்:

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்பாக சேலம் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்த்தில் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடாமல் சங்கத்திற்கு பால் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள 814 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் தடைபடாமல் இருக்க 28 பேர் கொண்ட சிறப்பு அலுவலர்களை நியமித்து உறுதி செய்யப்பட்டு அனைத்து சங்கங்களிலும் பால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவராக உள்ள ஆர்.ஆர்.ராஜேந்திரனின் சங்கமான வி.புதுபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஆவின் பொது மேலாளர் மற்றும் துணைப்பதிவாளர் (பால்வளம்) ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரியண்ணனிடம், பொதுமேலாளர் மற்றும் துணைப்பதிவாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாகல்பட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் கொள்முதல் செய்யப்பட்டது.

    பால் விற்பனை விலை மற்றும் பால் கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற சங்க உறுப்பினர்கள் கோரிக்கை முறையாக பால்வளத்துறை அமைச்சகம் மற்றும் ஆணையரகம் மூலமாக அரசுக்கு தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • நீர்வரத்தை காட்டிலும், தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.

    கடந்த ஒரு மாதமாக விநாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 1,300 கனஅடி வரை வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 905 கனஅடியாக சரிந்தது.

    இன்று காலை நிலவரப்படி, இது சற்று அதிகரித்து 947 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நீர்வரத்தை காட்டிலும், தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 103.38 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.32 அடியாக குறைந்தது.

    • சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது.
    • இன்று 2-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு 35 ரூபாயும், எருமைப்பாலுக்கு 44 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனை பசும்பாலுக்கு ரூ.42 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.52 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    மேலும் விலையை உயர்த்தாவிட்டால் பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர்.

    இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் நாசருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதை தொடர்ந்து நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 30 சதவீத விவசாயிகள் பாலை ஆவினுக்கு வழங்காமல் புறக்கணித்தனர்.

    இன்று 2-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பால் விநியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பால் விலையை அரசு உயர்த்தி தராவிட்டால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்தி பால் வினியோகத்தை முற்றிலும் நிறுத்த உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர்கள் குறைந்த அளவிலேயே ஆவினுக்கு இன்று பால் விநியோகம் செய்தனர். இதனால் பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    சேலம் பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் உள்ளூர் பொதுமக்களுக்கு இலவசமாக பாலை வழங்கி தங்களது போராட்டத்தை தங்களது இரண்டாவது நாள் போராட்டத்தை தொடங்கினர்.

    குறிப்பாக பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 260 பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள்தோறும் 2500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று போராட்டத்தின் காரணமாக 40 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 2-வது நாள் யாரும் பால் ஊற்றாமல் பால் எடுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஆவின் நிறுவனம் மூலம் செய்யப்பட்டு வரும் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுபற்றி பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவே இன்று இலவசமாக பால் வினியோகம் செய்தோம். அரசு எங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • 2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
    • இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் தொழிற்கல்வி, அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினர்.

    3 நாட்கள் விடுமுறை

    தொடர்ந்து நாளை (18-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (19-ந்தேதி), திங்கட்கிழமை (20-ந்தேதி) ஆகிய 3 நாட்கள் தேர்வு கிடையாது. தேர்வுக்கான பாடங்களை படிக்கும் விதமாக மாணவ- மாணவிகளுக்கு இந்த 3 நாட்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    ×