என் மலர்
சேலம்
- பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
- நடப்பாண்டில் அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்தனர்.
சேலம்:
மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில் அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து வழக்கத்தை விட அதிகமாக வெங்காயம் லோடு சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் சேலம் லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, ஆற்றோர காய்கறி, உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள், தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக அளவில் வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரி கள் கூறியதாவது:-
சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை பெரிய வெங்காயம் கடைகளில் விற்கப்படுகிறது. அதேபோல் முதல் ரகம் 3 கிலோ ரூ.100-க்கும், 2-ம் ரகம் 4 கிலோ ரூ.100-க்கும், 3 ரகம் 5 கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- விளையாட்டு மைதானத்திற்கு ரூ.8.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- வளர்ச்சி திட்டப் பணிகள் தரமாகவும் விரைந்து பணியை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
சங்ககிரி:
சங்ககிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி ஊராட்சி காஞ்சாம்புதூர் விளையாட்டு மைதானத்திற்கு ரூ.8.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அண்ணா நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 6.12 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 3.20 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலையும்,
வடுகப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.13.57 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி மற்றும் அண்ணா நகரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், ரூ.1.75 லட்சம் மதிப்பில் பைப் லைன் அமைக்கும் பணியையும், ரூ. 14,500 மதிப்பில் சமுதாய உறிஞ்சுழி அமைக்கும் பணி மற்றும் 5.60 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம்,
தட்டாப்பட்டியில் 5.25 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் உள்ளிட்ட ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது வளர்ச்சி திட்டப் பணிகள் தரமாகவும் விரைந்து பணியை முடிக்குமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சங்ககிரி பிடிஓ முத்து, ஆணையாளர் ராஜா, வடுகப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி துணைத்தலைவர் சதீஷ்குமார், ஒன்றிய உதவி பொறியாளர்கள் ஆனந்தயுவனேஷ், மேகலா, மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் சசிகலா, குமார், வடுகபட்டி ஊராட்சி மன்ற கிளார்க் தனபால், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு முதயவர் சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அவர் மீது பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது.
சேலம்:
கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு முதயவர் சாலையை கடக்க முயன்றார்.
அரசு பஸ் மோதி பலி
அப்போது அவர் மீது பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
அப்போது ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முதியவரின் பாக்கெட்டில் இருந்த வங்கி கணக்கு புத்தகத்திலிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அடையாளம் தெரிந்தது
அப்போது பலியான முதியவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்த சபாபதி(வயது 70) என்பது தெரியவந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய சபாபதி எதற்காக சூளைமேடு பகுதிக்கு வந்தார்? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் செக்கடிப்பட்டி அர்ஜுன தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். இவரது மகன் விஷ்வா (வயது 17).
நாகராஜன் குடும்பத்துடன் மும்பையில் வேலை செய்து வருகிறார். இதனால் விஷ்வா தனது தாத்தாவான கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார்.
பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவர் பிளஸ்-2 படித்து வந்தார். பெத்தநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள தனது அத்தை மணி வீட்டிலும் தங்கி அவ்வப்போது பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவரது அத்தை வீட்டில் அருகில் வசிக்கும் பெண்ணும் விஷ்வாவும் காதலித்து வந்துள்ளார்கள்.
இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண் விஷ்வாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் விஷ்வா செக்கடிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் சேலையில் தூக்கு போட்டுக்கொண்டார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பேளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஷ்வா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஷ்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேசாததால் விஷ்வா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர்.
- வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், தனது கணவருடன் வெளியூருக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது கணவர் மொபட் எடுத்து வருவதற்கு சென்றிருந்தபோது அந்த பெண் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டப்பட்டியைச் சேர்ந்த இளையராஜா (வயது 34) என்பதும், இவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- படுகொலை சம்பவம் தாதகாப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டிசஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் 4-வது வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மாதேஸ்வரன், சேலம் ஜவுளி கடை பஸ் நிறுத்தம் பகுதியில் தனியார் டைல்ஸ் கடையில் வேலை செய்தபோது, அங்கு உடன் வேலை செய்த ஷெகனாஷ் (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஏற்கனவே ஷெகனாஷ் திருமணம் ஆகி கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவரவே மாதேஸ்வரன், ஷெகனாஷை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மற்றும், குழந்தைகளை பிரிந்து அவர், ஷெகனாசுடன் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று மாதேஸ்வரன் திடீரென ஷெகனாஷின் கழுத்தில் துண்டால் இறுக்கி அவரை துடிக்க துடிக்க கொலை செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷெகனாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், 2-வது மனைவியை கொன்றது ஏன்? என்பது குறித்து அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:
திருமணம் ஆன பிறகு நானும், ஷெகனாசும் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தோம். சில மாதங்களுக்கு முன்பு ஷெகனாஷின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த நான், அவரை கண்காணித்து வந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் ஷெகனாஷூக்கு கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் நான், ஷெகனாஷை கண்டித்தேன். இருப்பினும் அவர் அந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக நேற்று எனக்கும் ஷெகனாசுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நான், துண்டால் ஷெகனாஷின் கழுத்தை சுற்றி இறுக்கினேன். இதில் வலியால் அலறி துடித்த ஷெகனாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இதையடுத்து நான் அங்கிருந்து சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வசித்து வரும் அவரது மகள் வீட்டிற்கு சென்று, உனது தாயை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தேன். இதனால் அவரது மகள் கதறி அழுதார். பின்னர் நான் அங்கிருந்து தப்பிச் சென்று இரவு அன்னதானப்பட்டி போலீசில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட மாதேஸ்வரனை ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படுகொலை சம்பவம் தாதகாப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது.
- தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது.
சேலம்:
மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில் அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து வழக்கத்தை விட அதிகமாக வெங்காயம் லோடு சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் சேலம் லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, ஆற்றோர காய்கறி, உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள், தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக அளவில் வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை பெரிய வெங்காயம் கடைகளில் விற்கப்படுகிறது. அதேபோல் முதல் ரகம் 3 கிலோ ரூ.100-க்கும், 2-ம் ரகம் 4 கிலோ ரூ.100-க்கும், 3 ரகம் 5 கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.
- கோடை காலம் தொடங்கி உள்ளதால், ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து உள்ளது.
- பூங்காவில் உள்ள முயல், மான், பாம்பு பண்ணை போன்றவற்றை சிறுவர்களும் பெரியவர்களும் கண்டுகளித்து மணமகிழ்ச்சி பெறுவார்கள்.
சேலம்:
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநிலம், மாவட்டங்களை சார்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
கோடை காலம் தொடங்கி உள்ளதால், ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
அதுபோல் இன்றும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்தனர். குறிப்பாக காதல் ஜோடிகள், புதுமண தம்பதிகள் ஏற்காட்டில் அதிக அளவில் காண முடிந்தது.
அவர்கள் ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், படகு இல்லத்தில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள், ஏற்காட்டில் பிரசித்தி பெற்ற காபி, அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கினர். இதனால் இங்குள்ள கார்டன்கள், கடைகளில் வியாபாரம் களை கட்டியது.
சுற்றுலாத்தலமான மேட்டூருக்கு மேட்டூர் அணையை ஒட்டி அமைந்துள்ள மேட்டூர் பூங்காவிற்கு அரசு விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். மேட்டூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பலர் காவிரி ஆற்றில் நீராடி பூங்கா அருகே அமைந்துள்ள அணைக்கட்டு முனியப்பன் சாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். ஒரு சிலர் ஆடு, கோழி ஆகியவற்றை முனியப்ப சாமிக்கு பலியிட்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.
அதனை அடுத்து தாங்கள் சமைத்த உணவினை சமைத்து பூங்காவிற்கு எடுத்துச் சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்வார்கள். சிறுவர் சிறுமிகள் ராட்டினம், சர்க்கிள், சீசா பலகைபோன்ற விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்வார்கள். பூங்காவில் உள்ள முயல், மான், பாம்பு பண்ணை போன்றவற்றை சிறுவர்களும் பெரியவர்களும் கண்டுகளித்து மணமகிழ்ச்சி பெறுவார்கள்.
இதன் அடிப்படையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையிலிருந்து மேட்டூர் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. காலையில் வரத் தொடங்கிய கூட்டம் படிப்படியாக அதிகரித்து மாலையில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.
- குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- நீர் வரத்தும் திறப்பும் சீராக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறையாமல் உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 251-வது நாளாக 100 அடிக்கும் கீழ் குறையாமல் தொடர்கிறது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டது. தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 120 அடியிலிருந்து படிப்படியாக குறைந்தது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கடந்த ஜனவரி 28-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. அப்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 103.87 அடியாக இருந்தது.
தற்போது குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நீர் வரத்தும் திறப்பும் சீராக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறையாமல் உள்ளது. இன்று 251-வது நாளாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் தொடர்கிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 103.27 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 1098 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் இதேநிலையில் தொடரும் பட்சத்தில் வரும் பாசன ஆண்டிற்கு குறிப்பிட்ட ஜூன் 12-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பெயர் பலகை இரும்பு கம்பத்தில் வைக்கப்பட்டிருந்து.
- பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடம் அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பெயர் பலகை இரும்பு கம்பத்தில் வைக்கப்பட்டிருந்து.
இதனை கால்வாய் பணிக்காக முன்னறிவிப்பின்றி அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
பெயர் பலகை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. உடனே பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
- நஞ்சப்பன் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த10 ஆடுகளை மர்ம விலங்குகள் கழுத்து வயிறு தொடை பகுதிகளில் கடித்தது. இதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
- இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் லட்சுமிபுரம் கணபதி நகர் பகுதியில் நஞ்சப்பன் என்பவர் ஆடு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த பகுதி நகர மலை அடிவாரம் ஒட்டி இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த நிலையில் நேற்று இரவு நஞ்சப்பன் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த10 ஆடுகளை மர்ம விலங்குகள் கழுத்து வயிறு தொடை பகுதிகளில் கடித்தது. இதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
காலையில் ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்த நஞ்சப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆடுகளை கடித்த விலங்கு என்ன? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம விலங்கு நடமாட்டத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- உண்ணாவிரத போராட்டத்துக்கு முன்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
சேலம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாநகரம் கோட்டை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ராபர்ட் கிங்ஸ்லி தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாராம் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு முன்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட செயலாளர் ரவி கூறும்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைய வேண்டும்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.






