என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teachers sudden strike ஆசிரியர்கள் திடீர் போராட்டம்"

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • உண்ணாவிரத போராட்டத்துக்கு முன்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    சேலம்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாநகரம் கோட்டை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் ராபர்ட் கிங்ஸ்லி தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாராம் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்டத்துக்கு முன்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட செயலாளர் ரவி கூறும்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைய வேண்டும்.

    தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    ×