என் மலர்
நீங்கள் தேடியது "The old man died. முதியவர் பலி"
- மணிப்பால் செல்லும் சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
சேலம்:
சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு டைட்டில் பார்க் எதிரில் மாமாங்கத்தில் இருந்து மணிப்பால் செல்லும் சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜாகிர் அம்மாபாளையம் கிராம நிர்வாக அதிகாரி சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியானவர் உடலை நீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அவர் மீது வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி அம்மன் பேக்கரி முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்து அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் பற்றி
விசாரணை நடத்தி வரு கிறார்கள். இறந்த முதியவர் பெயர் மற்றும் ஊர் முகவரி தெரியவில்லை. இதனால் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கருப்பூரை அடுத்த உள்ள டால்மியா போர்டு அருகே மொபட்டில் சென்றார்.
- அப்பொழுது அந்தவழியாக வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன.
கருப்பூர்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, பகுதி சேர்ந்தவர் ஆஞ்சநேயர் (வயது 73). இவர் கருப்பூரை அடுத்த உள்ள டால்மியா போர்டு அருகே மொபட்டில் சென்றார்.அப்பொழுது அந்தவழியாக வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் ஆஞ்சநேயர் தலை மீது லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்தில் துடிதுடித்து பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு முதயவர் சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அவர் மீது பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது.
சேலம்:
கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு முதயவர் சாலையை கடக்க முயன்றார்.
அரசு பஸ் மோதி பலி
அப்போது அவர் மீது பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
அப்போது ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முதியவரின் பாக்கெட்டில் இருந்த வங்கி கணக்கு புத்தகத்திலிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அடையாளம் தெரிந்தது
அப்போது பலியான முதியவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்த சபாபதி(வயது 70) என்பது தெரியவந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய சபாபதி எதற்காக சூளைமேடு பகுதிக்கு வந்தார்? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நல்லா கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் மீன்பிடித்தொழில் செய்து வந்தார்.
- மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த கணேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லா கவுண்டம்பா ளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். கணேசன் நேற்று பிலிக்கல்பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளை யம்-பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாணார்பாளையம் அருகே வேட்டு வங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கணேசன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த கணேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் படு காயம் அடைந்த கணேசனை யும் பின்னால் வந்து மோதி விபத்தை ஏற்படுத்திய வரையும் காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் கணேசன் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் மீது மோதி படுகாயம் அடைந்த சாணார்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவ ரது மகன் அபிமன்யு (23) வேலூர் அரசு மருத்துவ மனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று பெய்த மழையினால் பள்ளி மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே வர முடியாமல் 3 மணி நேரம் தவித்தனர்.
- ராஜேந்திரன் (70) என்பவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
சேலம்:
சேலத்தில் நேற்று மாலை 3 மணி நேரம் கன மழை கொட்டியது. சேலம் நெத்திமேடு காளியம்மன் கோவிலில் இருந்து பாரதி மருத்துவமனை செல்லும் வழியில் கல்குடோன் என்னும் இடத்தில் மழை நீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்தப் பகுதியில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. நேற்று பெய்த மழையினால் பள்ளி மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே வர முடியாமல் 3 மணி நேரம் தவித்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று அந்த பகுதியில் 8-க்கும் மேற்பட்டோர் இந்த தேங்கி நின்ற நீரிலே தவறி விழுந்தனர்.
அதில் பா. ஜ. க. இளைஞர் அணி முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரின் தந்தை ராஜேந்திரன் (70) என்பவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றி அறிந்த சேலம் மாநகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள்ஜேசிபி வரவைத்து அப்பகுதியில் உள்ள சாக்கடை தடுப்புச் சுவர்களை தற்காலிகமாக எடுத்து விட்டு நீர் செல்வதற்காக வழிவகை செய்தனர்.
ராஜவாய்க்காலாக இருது சாக்கடையாக மாறிய கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பெரும் உயிர் சேதங்களை தவிர்க்க வேண்டும் என பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






