என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே இன்று அதிகாலை அரசு பஸ் மோதி ராசிபுரம் முதியவர் பலி
    X

    விபத்தில் பலியான சபாபதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை படத்தில் காணலாம்.

    சேலம் அருகே இன்று அதிகாலை அரசு பஸ் மோதி ராசிபுரம் முதியவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசிய நெடுஞ்சாலையில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு முதயவர் சாலையை கடக்க முயன்றார்.
    • அப்போது அவர் மீது பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது.

    சேலம்:

    கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு பகுதியில் இன்று அதிகாலை ஒரு முதயவர் சாலையை கடக்க முயன்றார்.

    அரசு பஸ் மோதி பலி

    அப்போது அவர் மீது பவானியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    அப்போது ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் முதியவரின் பாக்கெட்டில் இருந்த வங்கி கணக்கு புத்தகத்திலிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

    அடையாளம் தெரிந்தது

    அப்போது பலியான முதியவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்த சபாபதி(வயது 70) என்பது தெரியவந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய சபாபதி எதற்காக சூளைமேடு பகுதிக்கு வந்தார்? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×