என் மலர்
சேலம்
- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரை பெற்றோர் எதிப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
- மேஷாஸ்ரீயை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விறகு கட்டையால் தாக்கியுள்ளனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கோண கப்பாடி கிராமம், போத்த னூர் பகுதியை சேர்ந்தவர் மேஷா ஸ்ரீ (வயது 19). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரை பெற்றோர் எதிப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் அவரது தந்தை சேட்டு என்பவருக்கும் மூர்த்தி குடும்பத்தாருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி இரு தரப்பினருக்கும் இடையே தகராறூ ஏற்பட்டது. அப்போது மேஷாஸ்ரீயை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விறகு கட்டையால் தாக்கியுள்ள னர்.
இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பை சேர்ந்த சேட்டு, சித்ரா, சிவன், கவுரி, மணி, சுசி, வெங்கடேஷ், மகேஸ்வரி, கந்தசாமி, லட்சுமி ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- திருவாக்கவுண்டனூர் பைாஸில் சிறுமிக்கு திருமணம் நடக்கிறது என ரகசிய தகவல் கிடைத்தது.
- சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தி சூர்யா மீது குழந்தைகள் திருமண சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஞ்சாயத்து யூனியன் சமூக நல அலுவலராக பணியாற்றி வருபவர் சாந்தா (வயது 59). இவருக்கு நேற்று முன்தினம் திருவாக்கவுண்டனூர் பைாஸில் சிறுமிக்கு திருமணம் நடக்கிறது என ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சாந்தா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் காமராஜர் காலனியை சேர்ந்த ரவி மகன் சூர்யா (22) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து சாந்தா கொடுத்த புகாரின்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தி சூர்யா மீது குழந்தைகள் திருமண சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
- இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி சென்று வருகிறார்கள்.
- குறிப்பாக யுகாதி, தசரா, சிவராத்திரி போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.
மேட்டூர்:
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி சென்று வருகிறார்கள்.
குறிப்பாக யுகாதி, தசரா, சிவராத்திரி போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.
இங்கு வருகிற 22-ம் தேதி யுகாதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாதேஸ்வரன் சாமிக்கு தைலா அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் சேலம் மாவட்ட அய்யப்ப சேவா சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ மணிகண்டன் தலைமையில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
22-ந் தேதி யுகாதியன்று, காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை பெரிய தேரோட்டம் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே மாதேஸ்வர மலை கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
இதையொட்டி மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு செல்ல கர்நாடக மாநில சிறப்பு பஸ்களும், தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும், மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.
- பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர், கேக் வாங்க மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
- தனியார் மில் அருகே சென்றபோது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையோரம் விழுந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீராணம் அருகே பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சோலைகவுண்டர். இவரது மகன் முரளி (வயது 28). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று அவருக்கு பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர், கேக் வாங்க மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
வலசையூர் பகுதியில் உள்ள தனியார் மில் அருகே சென்றபோது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையோரம் விழுந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயம் அடைந்த முரளியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, முரளி பரிதாபமாக இறந்தார். இதனை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பிறந்த நாளிலேயே தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- பூசாரிப்பட்டி பாலம் அருகே பஸ் வந்தபோது காடையாம்பட்டி தாலுகா ேகானம்பட்டியை சேர்ந்த ராஜா குபேந்திரன் (35) என்பவர் குடிபோதையில் பஸ்சை மறித்தார்.
- இதனால் கண்டக்டர் செம்மலை, பஸ்சுக்கு வழிவிட்டு செல்லுமாறு அவரிடம் கூறினார்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா தின்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செம்மலை (வயது 51). அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று மதியம் 2.50 மணிக்கு அரசு பஸ்சில் ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். டிரைவர் கோவிந்தராஜ் பஸ்சை ஓட்டினார்.
பூசாரிப்பட்டி பாலம் அருகே பஸ் வந்தபோது காடையாம்பட்டி தாலுகா ேகானம்பட்டியை சேர்ந்த ராஜா குபேந்திரன் (35) என்பவர் குடிபோதையில் பஸ்சை மறித்தார். இதனால் கண்டக்டர் செம்மலை, பஸ்சுக்கு வழிவிட்டு செல்லுமாறு அவரிடம் கூறினார்.
ஆனால் ராஜா குபேந்திரன் கேட்கவில்லை. தொடர்ந்து கண்டக்டரிடம் அவர் வாய் தகராறில் ஈடுபட்டார். மேலும் பஸ் கண்டக்டர் செம்மலையை தாக்கினார். இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். டிரைவர் அவரை பிடிக்க முயன்றார்.
ஆனால் அங்கிருந்து ராஜா குபேந்திரன் தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த செம்மலை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார், விசாரணை நடத்தி ராஜா குபேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,098 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,260 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் நேற்று 103.27 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 103.23 அடியாக சரிந்துள்ளது.
- செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- மேம்பாலத்தின் கீழே தேங்கிய மழை நீரில் 60 வயது முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழே தேங்கிய மழை நீரில் 60 வயது முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் எப்படி இறந்தார்? அவரது பெயர்? உள்ளிட்டவை எதுவும் தெரியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.
- வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சேலம்:
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தற்போது கோடை காலத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வெயில் அதிகமாக உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடைபிடித்தபடி செல்கின்றனர்.
மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். இரவு நேரங்களில் இதமான காற்று வீசி வருகிறது. இருப்பினும் பகலில் நிலவும் வெப்பம் காரணமாக வீடுகளில் புழுக்கம் நிலவுகிறது. இதனால், பெரும்பாலானோர் இரவு வீட்டின் வெளியே வெகுநேரம் படுத்து தூங்குகின்றனர்.
திடீர் மழையால் மகிழ்ச்சி
இந்த நிலையில் மாவட்டத்தில் நிலவி வரும் வெப்ப சலனம் காரணமாக இன்று அதிகாலை கன பெய்தது. சுமார் 2 மணி நேரம் விட்டு விட்டு இந்த மழை பெய்தது.
சேலம் 4 ரோடு, 5 ரோடுஇ அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, ஏற்காடு அடிவாரம், அயோத்தியாப்பட்டணம், இரும்பாலை, கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் 54 மில்லி மீட்டர் மழை பதிவானது. மழையின்போது மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அதாவது விட்டு விட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. மழை முடிவடைந்ததும் மின் விநிேயாகம் சீரானது. இந்த திடீர் மழையால் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- காமராஜ்(வயது 40). இவரது மனைவி ஜோதி(37). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
- கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகரறு உண்டானது.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஐயன்திருமாளிகை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ்(வயது 40). இவரது மனைவி ஜோதி(37). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
காமராஜ் அலுமினியம் பிட்டிங் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் ஆனது. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகரறு உண்டானது.
இதில் மனம் உடைந்த ஜோதி சேலம் டவுன் முள்ளுவாடி கேட் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். தாய் வீட்டில் இருந்த ஜோதி இன்று காலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் சின்ன கொல்லப்பட்டி காந்தி தெரு பகுதி சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்தி.
- மாசி நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் சின்ன கொல்லப்பட்டி காந்தி தெரு பகுதி சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்தி (வயது 21). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் இவரது நண்பர் அழகாபுரம் திருமூலர் தெரு பகுதியைச் சேர்ந்த வேலு மகன் தினகரன்(27) என்பவருடன் சேலம் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
மாசி நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கார்த்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தினகரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் தினகரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த தகவலின் பெயரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த கார்த்தியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் நாகதேவி (வயது 47). இவருடைய கணவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
- இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
சேலம்:
சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் நாகதேவி (வயது 47). இவருடைய கணவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் நாகதேவிக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த நபர் வீட்டில் இருந்த குழவிக்கல்லை எடுத்து நாகதேவியை தாக்க முயன்றார். ஆனால் அவர் தப்பித்துவிட்டார். இருப்பினும் ஆத்திரத்தில் கத்தியால் நாகதேவியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.பாலம் அருகே மீராசாகிப் ஏரி 30 ஆண்டுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளது.
- இது, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாலம் மீராசாகிப் ஏரி 30 ஆண்டுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு போதிய மழை பொழிந்ததால் வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் இந்த ஏரியில் மட்டுமே மழைநீர், ஊற்றுநீர் நிறைந்து கோடைகாலம் தொங்கும் நிலையிலும் கடல்போல் காட்சியளிக்கிறது. இது, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஏரியை சுற்றிலும் உள்ள நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் தற்போது இந்த பகுதியில் விவசாய பணிகளை தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வீரபாண்டி ஒன்றியம் கஞ்சமலையில் பெய்யும் மழைநீர் வடிந்து 5 ஏரிக ளுக்கும், 3 குட்டைகளுக்கும் செல்லும்படி ஓடை கால்வாய் இணைப்பு உள்ளது. அவை புதர்மண்டி இருந்ததால், ஏரிகளுக்கு தண்ணீர் வராமல் இருந்தது. ஊரக வளர்ச்சித்துறை, வீரபாண்டி ஒன்றிய என்ஜினீயர்கள் தொடர் முயற்சியால், சீரகாபாடி, கடத்தூர், ராஜாபாளையம், சென்னகிரி ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் ஓடை கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்து அகலப்ப டுத்தும் பணி, 2 ஆண்டு களுக்கு முன் தொடங்கியது. கஞ்சமலையில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் ஓடை கால்வாய்கள், 3 மீட்டர் அகலம் இருந்ததை 6 மீட்டர் ஆக அதிகரித்து தேவையான இடங்களில் தண்ணீர் தேங்க பள்ளம் தோண்டி தடுப் பணைகளும் கட்டப்பட்டன. இதன் பலனாக எஸ்.பாலம் ஏரி 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.






