என் மலர்
நீங்கள் தேடியது "old man dead முதியவர் பிணம்"
- சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
- அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, பரமத்திவேலூர் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பழைய பை-பாஸ் சாலையில் உள்ள சினிமா தியேட்டர் அருகே, சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, பரமத்திவேலூர் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், போலீசார் அடையாளம் தெரியாத அந்த முதிய வரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து, இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து
கிடந்த முதியவர் கழுத்தில் ருத்திராட்ச மாலையும், காவி நிற உடையும் அணிந்திருந்தார்.
- 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
- இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
சேலம்:
சேலம் கோட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே நேற்று 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் முதியவரின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத் தனர். மேலும் இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- மேம்பாலத்தின் கீழே தேங்கிய மழை நீரில் 60 வயது முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழே தேங்கிய மழை நீரில் 60 வயது முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் எப்படி இறந்தார்? அவரது பெயர்? உள்ளிட்டவை எதுவும் தெரியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






