search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The case against the teenager"

    • தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
    • இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, செலவடை, வென்னானப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல், பாப்பாத்தியின் மகன் தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார். இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தாமரைச்செல்வன் மற்றும் திருமணம் செய்து வைத்த பெரியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருவாக்கவுண்டனூர் பைாஸில் சிறுமிக்கு திருமணம் நடக்கிறது என ரகசிய தகவல் கிடைத்தது.
    • சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தி சூர்யா மீது குழந்தைகள் திருமண சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஞ்சாயத்து யூனியன் சமூக நல அலுவலராக பணியாற்றி வருபவர் சாந்தா (வயது 59). இவருக்கு நேற்று முன்தினம் திருவாக்கவுண்டனூர் பைாஸில் சிறுமிக்கு திருமணம் நடக்கிறது என ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சாந்தா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் காமராஜர் காலனியை சேர்ந்த ரவி மகன் சூர்யா (22) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.

    இது குறித்து சாந்தா கொடுத்த புகாரின்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தி சூர்யா மீது குழந்தைகள் திருமண சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

    • கூலிதொழிலாளி பாரத் (26) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • இந்த நிலையில் வளர்மதியை பாரத் திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி, நடுவலூரை சேர்ந்தவர் வளர்மதி (வயது 21). இவர் அேத பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டயப்படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், கெங்கவல்லியை சேர்ந்த கூலிதொழிலாளி பாரத் (26) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் குழந்தை இல்லாததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 9 மாதங்களாக கணவரை பிரிந்து, வளர்மதி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் வளர்மதியை பாரத் திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த வளர்மதி, கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது குறித்து அவர் அளித்தபுகாரின்பேரில் கெங்கவல்லி போலீசார், பாரத் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×