சிறுமியை திருமணம் செய்தவாலிபர் மீது வழக்கு

திருவாக்கவுண்டனூர் பைாஸில் சிறுமிக்கு திருமணம் நடக்கிறது என ரகசிய தகவல் கிடைத்தது. சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தி சூர்யா மீது குழந்தைகள் திருமண சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுமியை திருமணம் செய்தவாலிபர் மீது வழக்கு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஞ்சாயத்து யூனியன் சமூக நல அலுவலராக பணியாற்றி வருபவர் சாந்தா (வயது 59). இவருக்கு நேற்று முன்தினம் திருவாக்கவுண்டனூர் பைாஸில் சிறுமிக்கு திருமணம் நடக்கிறது என ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சாந்தா, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் காமராஜர் காலனியை சேர்ந்த ரவி மகன் சூர்யா (22) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து சாந்தா கொடுத்த புகாரின்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்தி சூர்யா மீது குழந்தைகள் திருமண சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com