search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டக்டர் மீது தாக்குதல்"

    • சாலையில் பஸ்சை நிறுத்தி போராட்டம்
    • பஸ்சின் படியில் தொங்கியபடி வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

    அரக்கோணம்:

    காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த தனியார் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி இளைஞர்கள் சிலர் வந்தனர். இதனால் பஸ் கண்டக்டர் சிவா (வயது 34) படியில் தொங்கியபடி வந்தவர்களை உள்ளே வருமாறு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரி கிறது. இதனிடையே பஸ் பள்ளூர் நிறுத்தம் வந்தபோது வாக் குவாதத்தில் ஈடுபட்டவர்கள் இறங்கி சென்றனர்., பின்னர் பஸ் தக்கோலம் கூட் ரோட்டிற்கு வந்த போது அடையாளம் தெரியாத 5 பேர் திடீரென பஸ் கண்டக்டரை தாக்கிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சாலையில் பஸ்சை நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீ சார் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • பஸ் நிறுத்துவது தொடர்பாக தகராறு
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பா ளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 57). இவர் ஆரணி முனியன்குடிசை அரசு பஸ் கண்டக்டராக உள்ளார்.

    கடந்த 16-ம்தேதி இரவு மேல்மட்டை விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (37) தனியார் பஸ் கன்டக்டர் என்பவர், பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் பூவாடை அம்மன் கோவில் மைதானத்தில் பஸ் நிறுத்துவது தொடர்பாக கோவிந்த சாமியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் கோவிந்தசாமியை தாக்கியுள்ளார். இது குறித்து கோவிந்தசாமி நேற்று கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூசாரிப்பட்டி பாலம் அருகே பஸ் வந்தபோது காடையாம்பட்டி தாலுகா ேகானம்பட்டியை சேர்ந்த ராஜா குபேந்திரன் (35) என்பவர் குடிபோதையில் பஸ்சை மறித்தார்.
    • இதனால் கண்டக்டர் செம்மலை, பஸ்சுக்கு வழிவிட்டு செல்லுமாறு அவரிடம் கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா தின்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செம்மலை (வயது 51). அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று மதியம் 2.50 மணிக்கு அரசு பஸ்சில் ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். டிரைவர் கோவிந்தராஜ் பஸ்சை ஓட்டினார்.

    பூசாரிப்பட்டி பாலம் அருகே பஸ் வந்தபோது காடையாம்பட்டி தாலுகா ேகானம்பட்டியை சேர்ந்த ராஜா குபேந்திரன் (35) என்பவர் குடிபோதையில் பஸ்சை மறித்தார். இதனால் கண்டக்டர் செம்மலை, பஸ்சுக்கு வழிவிட்டு செல்லுமாறு அவரிடம் கூறினார்.

    ஆனால் ராஜா குபேந்திரன் கேட்கவில்லை. தொடர்ந்து கண்டக்டரிடம் அவர் வாய் தகராறில் ஈடுபட்டார். மேலும் பஸ் கண்டக்டர் செம்மலையை தாக்கினார். இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். டிரைவர் அவரை பிடிக்க முயன்றார்.

    ஆனால் அங்கிருந்து ராஜா குபேந்திரன் தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த செம்மலை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார், விசாரணை நடத்தி ராஜா குபேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சில்லறை சம்பந்தமாக வாக்குவாதம்
    • போலீஸ் விசாரணை

    குடியாத்தம்:

    ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாந்தலிங்கம் (வயது 48) இவர் ஆம்பூர் பணிமனையில் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 30 -ந் தேதி குடியாத்தத்தில் இருந்து ஆம்பூருக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த வாலிபருக்கும், கண்டக்டருக்கும் சில்லறை கொடுப்பது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சாந்தலிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சாந்தலிங்கம் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    ×