என் மலர்
சேலம்
- 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்படுகிறது.
- புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 என்ற வயது வந்தோருக்கான புதிய கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்படுகிறது. இதற்காக புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 என்ற வயது வந்தோருக்கான புதிய கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கடந்த நவம்பர் மாதம், டிசம்பர் மாதத்தில் மாநிலம் முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 21 கல்வி வட்டாரங்களிலும் 35,781 பேர் கண்ட றியப்பட்டனர். தொடர்ந்து இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தர தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்தவர்கள், பட்டதாரிகள் என சுமார் 1800-க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டனர். அந்தந்த வட்டாரங்களில் உள்ள ஆசிரிய பயிற்றுநர்கள், இவர்களை ஒருங்கிணைத்து இத்திட்டத்தினை செயல்படுத்தினர்.
இதனை தொடர்ந்து தேர்வு நேற்று 1970 மையங்க ளில் நடந்தது. அதில் 35 ஆயிரத்து 781 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு எழுதினர். விடைத்தாள் அந்தந்த வட்டார வளமைய அலுவல கத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை விடைத்தாள்களை திருத்தி ஏ, பி, சி- என மதிப்பெண் கிரேடு வழங்கப்படும். இதையடுத்து தேர்வர்களுக்கு அரசு சார்பில் அடிப்படை எழுத்தறிவு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்
- வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு கோவணத்துடன் மனு அளிக்க வந்தார்.
- வெள்ளாளகுண்டம் பகுதியில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது நிலத்தை சட்ட விரோதமாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு கோவணத்துடன் மனு அளிக்க வந்தார்.
அப்போது அவர் கூறிய தாவது, வெள்ளாளகுண்டம் பகுதியில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது நிலத்தை சட்ட விரோதமாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
நிலத்தில் பயிரிட்ட சோளப் பயிரை பொக்லைன் வைத்து அழித்தனர். மேலும் நிலத்தில் வளர்த்து வந்த 24 தேக்கு மரங்களையும் வேரு டன் பிடுங்கி சென்றனர்.
இதுகுறித்து நான் கேட்டதற்கு, என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதற்கு தி.மு.க பிரமுகர் தான் காரணம். அந்த நபர்கள் மீது நடவ டிக்கை எடுத்து, என் நிலத்தில் அமைக்கப் பட்டுள்ள கம்பி வேலியை அகற்ற வேண்டும்.
இல்லையென்றால் மாவட்ட கலெக்டர் அலுவல கம் முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றார். மேலும் இது தொடர்பான மனுவையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.
- சேலம் சென்டரல் சட்டக்கல்லூரியில் பேராசிரி யர் ஆர்.வி.தனபாலன் - தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.
- நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு மாநிலங்களை சார்ந்த 28 சட்டக்கல்லூரி மாணவ குழுக்கள் கலந்துகொண்டன.
சேலம்:
சேலம் சென்டரல் சட்டக்கல்லூரியில் பேராசிரி யர் ஆர்.வி.தனபாலன் - தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு மாநிலங்களை சார்ந்த 28 சட்டக்கல்லூரி மாணவ குழுக்கள் கலந்துகொண்டன. இப்போட்டிகளின் நடுவர்க ளாக பல்வேறு கல்லூரிகளை சார்ந்த பேராசிரியர்களும், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறி ஞர்களும், பார் கவுன்சில் உறுப்பினர்களும் அரசு வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
விழாவில் கல்லூரி உதவிப் பேராசிரியை சாந்தகு மாரி வரவேற்புரை ஆற்றி னார். அதனை தொடர்ந்து கல்லூரியின் தலைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் துணைத்த லைவருமான சரவணன் அறிமுக உரையாற்றினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தலைமை உரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் சிறப்புரையாற்றினார். விழாவில் நீதிபதி எ.டி.ஜெகதீஷ் சந்திரா நிறைவுரை ஆற்றினார்.
போட்டிகளில் முதல் பரிசை தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் சாமிநா தன், ஆதித்தியா மற்றும் கிருஷ்ணப்ரசாத் ஆகியோர் வென்றனர். 2-ம் பரிசை பெங்களூருவில் உள்ள யுனிவர்சிட்டி சட்ட கல்லூரி மாணவிகள் ஆசால் மென்சீஸ், ஹெப்சா, மற்றும் நவோதிதா ஆகியோர் வென்றனர்.
மேலும் மிகச்சிறந்த ஆய்வாளர் என்ற பரிசை சென்னை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் அரசு சட்ட கல்லூரியும், சென்னை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசென்ட் கல்லூரியும், பெற்றன. சிறந்த வாத திறமை மாணவருக்கான பரிசை சேலம் அரசு சட்ட கல்லூரியும், சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், சிறந்த வாத திறமை மாணவிக்கான பரிசை பெங்களூர், யுனிவர்சிட்டி சட்ட கல்லூரியும், கோவை அரசு சட்டக்கல்லூரியும் பெற்றன.
சிறந்த நன்னடத்தை அணிக்கான பரிசை தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக அணியும், பெங்களூர், யுனிவர்சிட்டி சட்ட கல்லூரி அணியும் பெற்றன. சிறந்த வழக்காவண தயாரிப்புக்கான பரிசை பெங்களூரு அலையன்ஸ் பல்கலைக்கழக அணியும், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக அணியும் பெற்றன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ குழுக்களுக்கு கேடயம் பரிசுகளை நீதிபதிகள் வழங்கினார்கள்.
கல்லூரியின் உதவி பேராசிரியர் அருண் ராம்நாத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை போட்டியின் ஒருங்கிணைப்பாளர் கல்லூரியின் உதவி பேராசிரியை சாந்தகுமாரி மற்றும் மாதிரி நீதிமன்ற போட்டிகளுக்கான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். கல்லூரியின் தலைமை நிர்வாகி மாணிக்கம், கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா, கல்லூரியின் டீன் டாக்டர் டி.என்.கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
- சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சதீஷ்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சதீஷ்கு மாரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீ சாரிடம் கூறுகையில், மெக்கானிக்கல் என்ஜினீ யரிங் படித்துள்ள நான் சேலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறியதால் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் ஓராண்டு ஆகியும் எந்த வட்டியும் வரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதனால் நான் மன உளைச்சலில் உள்ளேன். எனவே அந்த பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஏற்காடு அசம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்தார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்து விட்ட தால் அந்த துப்பாக்கியை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு அசம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்து விட்ட தால் அந்த துப்பாக்கியை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதை அடுத்து இன்று காலை பழனிவேல் மனைவி பார்வதி, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு காரில் துப்பாக்கியுடன் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீ சார் சோதனை செய்தனர்.
காருக்குள் துப்பாக்கி இருந்ததை அறிந்த போலீ சார் அதனை வெளியே எடுத்து சோதனை செய்த னர். தொடர்ந்து பார்வ தியிடம் விசாரித்தபோது அவர் துப்பாக்கியை ஒப்ப டைக்க வந்ததாக கூறினார்.
இதை அடுத்து துப்பாக்கி ஒப்படைக்கும் நடவடிக்கை யில் அவர் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு நிலவியது.
- அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் 1000-க்கும் மேல் உள்ளன. இப்பள்ளிகளில் ஏராள மான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
- மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் 1000-க்கும் மேல் உள்ளன. இப்பள்ளிகளில் ஏராள மான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஆண்டுதோறும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவர். அதன்படி நடப்பு ஆண்டுக்கான யுவிகா பயிற்சி மே மாதம் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க லாம்.
பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் தற்காலிக பட்டியல் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வெளியிடப்படும். பின்னர், தேர்ச்சி பெற்ற அந்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அதன்பின், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதிப்பட்டியல் ஏப்ரல் 20-ந்தேதி வெளியாகும். தேர்வாகும் மாணவர்க ளுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
- முதல் மனைவியை பிரிந்து மாதேஸ்வரன் வாழ்ந்து வந்தார்.
- மாதேஸ்வரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி மகாலட்சுமி.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் 4-வது வீதி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி மகாலட்சுமி.
முதல் மனைவியை பிரிந்து மாதேஸ்வரன் வாழ்ந்து வந்தார். டவுனில் உள்ள டைல்ஸ் கடையில் மாதேஸ்வரன் வேலைபார்த்தபோது உடன் வேலை செய்த ஷெகனாஷ் (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஏற்கனவே ஷெகனாஷ் திருமணம் ஆகி கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவரவே மாதேஸ்வரன், ஷெகனாஷை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மற்றும், குழந்தைகளை பிரிந்து அவர், ஷெகனாசுடன் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சேலம் டவுனில் வசித்து வரும் வேறு ஒரு வாலிபருடன் ஷெகனாஷூக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த மாதேஸ்வரன், தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும் ஷெகனாசுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கள்ளத் தொடர்பு நீடித்தது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் கணவன் -மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மாதேஸ்வரன் திடீரென ஷெகனாஷின் கழுத்தில் துண்டால் இறுக்கி அவரை துடிக்க துடிக்க கொலை செய்தார்.
ெஜயிலில் அடைப்பு
இந்த கொலை சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாதேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இதையடுத்து போலீசார், நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை மருத்துவ பரிசோ தனைக்கு உட்படுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று, நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி, அவரை சேலம் மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாதேஸ்வரனை ேபாலீசார் சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தனர்.
- கலெக்டர் அலுவலகம் அருகே கோவில் பூசாரிகள் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கோவில் பூசாரிகள் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் இந்து கோவில்களை இடிக்க கூடாது. முக்கால பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யாத்திரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
- கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது.
- மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது. மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், ஒருங்கிணைந்த சாலை உட்கட்மைப்பு மேம்பாட்டு திட்டத்தில் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது.
அந்த நிதியின் மூலம் அச்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் நிறைந்த இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்தும், பல்வேறு இடங்களில் பழுது நீக்கியும் சீரமைத்தனர்.இப்பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில், சாலையை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அவர், சாலையை அகலப்படுத்திய இடத்தை பார்வையிட்டு அதன் தரத்தையும், தளத்தின் அளவுகளையும் பார்வை யிட்டார்.
தொடர்ந்து, சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வது குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது, சேலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
- இளம்பிள்ளை அதன் சுற்று வட்டாரங்களில் தறி தொழில் பிரதானமாக உள்ளது.
- இளம்பிள்ளையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மொத்த ஜவுளி நிறுவனங்கள் உள்ளன.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அதன் சுற்று வட்டாரங்களில் தறி தொழில் பிரதானமாக உள்ளது. இளம்பிள்ளையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மொத்த ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியா கும் பல விதமான ஜவுளி ரகங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றன.
இங்கு 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,கள் செயல்படுகின்றன. தினமும் 20 க்கும் மேற்பட்ட லாரிகள் 100-க்கும் மேற்பட்ட சிறு சரக்கு வாக னங்கள் வந்து செல்கின்றன. மேலும் 100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி வாக னங்கள் வந்து செல்கின்றன. காய்கறி சந்தை செயல்படு வதால் தினந்தோ றும் இளம்பிள்ளையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது. குறிப்பாக பிரதி வெள்ளி மற்றும் பண்டிகை காலங்களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவ தால் மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமப்படு கின்றனர்.எனவே போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க இளம்பிள்ளை பகுதியை சுற்றி ரிங் ரோடு அமைக்கப்ப டுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து இளம்பிள்ளை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஓபுளிராஜன் கூறியதாவது:
இளம்பிள்ளயைில் தினமும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது.மேலும் 4 பள்ளிகள் செயல்படுவதால் காலை, மாலை நேரங்களில் மாண வர்கள் தவிக்கின்றனர்.சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும்.இளம்பிள்ளையை சுற்றி ரிங் ரோடு அமைத்தால் மேலும் தொழில் வளம் பெறுகும் இதற்கு அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீரனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ரித்தீஷ் (வயது 10). இவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
- இந்த நிலையில் சம்பவத்தன்று ரித்தீசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் அருகே உள்ள வீரனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ரித்தீஷ் (வயது 10). இவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரித்தீசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவனை மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரித்தீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர்.
மேலும் இது குறித்து ரித்தீஷ் தந்தை சரவணன், கருமலைகூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை வயிற்று வலியால் துடித்தார்.
- இதையடுத்து அவரை பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள், சிறுமியை பரிசோதித்து பார்த்தபோது, சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த உறவின ரான வேன் டிரைவர் குருநாதன் (வயது 49) என்பவர் ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும், கர்ப்பத்துக்கு அவர் தான் காரணம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையடுத்து பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து குருநாதனை நேற்று கைது செய்தனர்.






