search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The farmer who came with Govanam"

    • வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு கோவணத்துடன் மனு அளிக்க வந்தார்.
    • வெள்ளாளகுண்டம் பகுதியில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது நிலத்தை சட்ட விரோதமாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு கோவணத்துடன் மனு அளிக்க வந்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது, வெள்ளாளகுண்டம் பகுதியில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது நிலத்தை சட்ட விரோதமாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    நிலத்தில் பயிரிட்ட சோளப் பயிரை பொக்லைன் வைத்து அழித்தனர். மேலும் நிலத்தில் வளர்த்து வந்த 24 தேக்கு மரங்களையும் வேரு டன் பிடுங்கி சென்றனர்.

    இதுகுறித்து நான் கேட்டதற்கு, என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதற்கு தி.மு.க பிரமுகர் தான் காரணம். அந்த நபர்கள் மீது நடவ டிக்கை எடுத்து, என் நிலத்தில் அமைக்கப் பட்டுள்ள கம்பி வேலியை அகற்ற வேண்டும்.

    இல்லையென்றால் மாவட்ட கலெக்டர் அலுவல கம் முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றார். மேலும் இது தொடர்பான மனுவையும் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார். 

    ×