என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி
    X

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர்.
    • வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், தனது கணவருடன் வெளியூருக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது கணவர் மொபட் எடுத்து வருவதற்கு சென்றிருந்தபோது அந்த பெண் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டப்பட்டியைச் சேர்ந்த இளையராஜா (வயது 34) என்பதும், இவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×