என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.32 அடியாக சரிவு
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- நீர்வரத்தை காட்டிலும், தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது.
கடந்த ஒரு மாதமாக விநாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 1,300 கனஅடி வரை வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 905 கனஅடியாக சரிந்தது.
இன்று காலை நிலவரப்படி, இது சற்று அதிகரித்து 947 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்வரத்தை காட்டிலும், தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 103.38 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.32 அடியாக குறைந்தது.
Next Story






