search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sub Inspector Suspended"

    • பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இளம்பெண் ஒருவருக்கும் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • இளம்பெண்ணை பஸ்சிலிருந்து தரதரவென கீழே இழுத்து தள்ளினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்திபேட்டை அருகே உள்ள முக்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று தனது மனைவியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ்சில் ஏறும்போது பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இளம்பெண் ஒருவருக்கும் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் பஸ்சை நிறுத்தினார். இளம்பெண்ணை பஸ்சிலிருந்து தரதரவென கீழே இழுத்து தள்ளினார்.

    இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முக்தியால்பேட்டை டி.எஸ்.பி. அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சப்-இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமாரை சஸ்பெண்டு செய்தனர்.

    • புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், தாமரைச்செல்வன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
    • அதிர்ச்சி அடைந்த பெண், சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தாமரைச்செல்வன் மீது புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தாமரைச்செல்வன். இவரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் புகார் கொடுக்க சென்றார்.

    அந்த பெண்ணிடம், தாமரைச்செல்வன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் தாமரைச்செல்வன் மீது புகார் கொடுத்தார்.

    இதை அடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன்பேரில் விசாரணை நடத்தி நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதை அடுத்து தாமரைச்செல்வனை மாநகர போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாநகர போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
    • ஜெயகுமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கம்பம் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த கம்பம் மெட்டு காலனி பகுதியை சேர்ந்த அமுதாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். ஜெயகுமாருக்கும், அமுதாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர் அமுதாவை தாக்கியதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பின்னர் அமுதா வழக்கை திரும்ப பெற்றதால் ஜெயக்குமார் மீண்டும் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அமுதாவுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் அமுதாவை அடித்து, உதைத்து கழுத்தை நெரித்து கொன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

    ×