search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டச்சேடு - நார்த்தன்ஜேடு இணைப்பு சாலை பணி தொடக்கம்
    X

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை பணி நடைபெற்ற காட்சி.

    கொட்டச்சேடு - நார்த்தன்ஜேடு இணைப்பு சாலை பணி தொடக்கம்

    • கிராமத்திற்கு அருகே உள்ள நார்த்தன்ஜேடு, குறிஞ்சிப்பாடி மலை கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசிக்கின்றனர்.
    • அரங்கம் கிராம மக்களும் இணைப்பு சாலை வேண்டும் போராடி வருகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ளது கொட்டச்சேடு மலைக் கிராமம். இந்த கிராமத்திற்கு அருகே உள்ள நார்த்தன்ஜேடு, குறிஞ்சிப்பாடி மலை கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசிக்கின்றனர்.

    25 ஆண்டுகளாக போராட்டம்

    இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், போக்கு வரத்திற்கு கொட்டச்சேடு காட்டு வழியை பயன்படுத்தி வந்தனர். இதனால் சாலை வசதி கேட்டு கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

    இதேபோல் கொட்டச்சேடு அருகே செந்திட்டு மற்றும் அரங்கம் கிராம மக்களும் இணைப்பு சாலை வேண்டும் போராடி வருகின்றனர். ஆனால் இணைப்பு சாலை அமைக்க இங்குள்ள சில எஸ்டேட் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இது தொடர்பாக நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    கலெக்டர் ஆய்வு

    இதை அறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மே கம் மற்றும் அதிகாரிகள், கொட்டச்சேடு மற்றும் நார்த்தன்ஜேடு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டனர். உடனடியாக இணைப்புச் சாலை வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து, முதற்கட்டமாக கொட்டச்சே டில் இருந்து நார்த்தன்ஜேடு வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுத்தது. இதற்கு ஒரு தரப்பி னர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    போலீஸ் குவிப்பு

    இதையடுத்து நேற்று பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மண் சமப்படுத்தும் பணி தொடங்கியது. இந்த பணியை தடுக்க சிலர் முயற்சிக்கலாம் என தகவல் கிடைத்ததால், சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கென்னடி மற்றும் சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கொட்டச்சேடு பகுதியில் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    மலை கிராம மக்கள் மகிழ்ச்சி

    இதேபோல், செந்திட்டு மற்றும் அரங்கம் ஆகிய மலைவாழ் மக்களின் கோரிக்கைபடியும், அங்கு இணைப்புச் சாலை விரைவில் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இணைப்பு சாலை கேட்டு போராடி வந்த நார்த்தன்ஜேடு, குறிஞ்சிப்பாடி மலைவாழ் மக்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×