என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அரசு பண்ணையில்18.72 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி
    X

    மீன் குஞ்சுகள் விடப்பட்ட காட்சி.

    மேட்டூர் அரசு பண்ணையில்18.72 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி

    • மேட்டூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் மீன்கள் இனப்பெருக்க மையத்தில், மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப்படுகின்றன.

    மேட்டூர்:

    மேட்டூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் மீன்கள் இனப்பெருக்க மையத்தில், மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப்படுகின்றன.

    இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, மேட்டூர் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணைக்கு நடப்பாண்டு 18.70 கோடி மீன் குஞ்சுகள், உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். அப்போது, மீன் குஞ்சுகளைக் கண்டறிந்து சேகரித்து வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. மீன்களை வளர்த்து அவற்றுக்கு ஊசி மூலம் ஹார்மோன் செலுத்தப்படுகிறது.

    4-வது நாளில் நுண்மீன் குஞ்சுகள் சேகரிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கு வளர்த்து விரலிகளாக விவசாயிகளுக்கும், ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளுக்கும் அனுப்பப்படுகின்றன. நுண் மீன்குஞ்சுகள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மீன்வளத்துறைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் நுண் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. நடப்பு 2022-23-ஆண்டில் 18.70 கோடி நுண் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது, 18.72 கோடி நுண் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றனர்.

    Next Story
    ×