என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூனான்டியூர் கிராமத்தில் தரிசு நிலத் தொகுப்பில் மா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதை கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார். அருகில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தமிழ்செல்வி, உதவி இயக்குநர்கள் குமரவேல், ஸ்ரீயமுனா உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 38 தரிசு நிலத் தொகுப்புகள் விளை நிலங்களாக மாற்றம்
- மேச்சேரி வட்டம், கூனான்டியூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 12.5 ஏக்கர் தரிசு நில தொகுப்பில் மா ஒட்டு செடிகள் பயிரிடப்–பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது.
- கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 38 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு ரூ.67.62 லட்சம் மதிப்பீட்டில் 10 தொகுப்புகளில் திறந்தவெளி கிணறுகளும், 28 தொகுப்பு–களில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் மாவட்டம், மேச்சேரி வட்டாரத்தில் உள்ள கூனாண்டியூர், பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம் ஆகிய கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் குறித்து கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.
இதில் மேச்சேரி வட்டம், கூனான்டியூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 12.5 ஏக்கர் தரிசு நில தொகுப்பில் மா ஒட்டு செடிகள் பயிரிடப்–பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது. இத்தரிசு நிலத் தொகுப்பில் தோட்டக்கலைத் துறை மூலம் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்–பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் பொருத்தி மா ஒட்டு செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்க்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, பள்ளிப்–பட்டி, மல்லிகுந்தம் கிரா–மங்களில் கண்டறியப்பட்–டுள்ள தரிசு நிலத் தொகுப்பு களை ஆய்வு செய்து விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மீன் பண்ணை, கால்நடை பண்ணை போன்ற ஒருங்கி–ணைந்த பண்ணையத்திட்டம் அமைத்து விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் பெற வழிவகை செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் 2021 –2022-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 38 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு ரூ.67.62 லட்சம் மதிப்பீட்டில் 10 தொகுப்புகளில் திறந்தவெளி கிணறுகளும், 28 தொகுப்பு–களில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது 15 ஆழ்துளை கிணறு தொகுப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு பாசனத்திற்கு ஏற்றவாறு தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்–பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் வேளாண்மைத் துறைக்கென செயல்படுத்தப்–பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் விவசா–யிகள் அறிந்து பயன்பெறும் வகையில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, தோட்டக்–கலைத் துறை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர்கள் குமரவேல், ஸ்ரீயமுனா, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






