அமாவாசை, யுகாதியை முன்னிட்டு மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதையடுத்து அமாவாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அமாவாசை, யுகாதியை முன்னிட்டு மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சேலம்:

பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து அமா வாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை இயக்கப்ப டுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமாவாசை, யுகாதி தினத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் மாதேஸ்வரன் மலைக்கு செல்வார்கள்.

இதனால் பக்தர்களின் வசதிக்காக வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், தருமபுரியில் இருந்து மேச்சேரி மேட்டூர் வழியாகவும், சேலத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com