என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sealing of stock"

    • கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் இணைச் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • பெட்ரோல் பங்க் நிர்வாகம், மாநகராட்சிக்கு ரூ.1.87 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் இணைச் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பெட்ரோல் பங்க் நிர்வாகம், மாநகராட்சிக்கு ரூ.1.87 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளது. இந்த பணத்தை செலுத்தச் சொல்லி மாநகராட்சி அலுவலர்கள் பலமுறை அறிவிப்பு கடிதங்கள் அனுப்பியும் வரி பாக்கியை கட்டவில்லை.

    இதையடுத்து இன்று காலை கொண்டலாம்பட்டி மண்டலம் உதவி வருவாய் அலுவலர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரன் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், பெட்ரோல் பங்கை பூட்டி சீல் வைத்தனர்.

    வரி பாக்கி செலுத்தாததால் பெட்ரோல் பங்க் பூட்டி சீல் வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×