என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு
- 10 பெண்கள் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று சேலம் வந்தனர்
- புக்கிரவாரி செல்வதற்காக பெங்களூரு-காரைக்கால் ெரயிலில் ஏறினர்
சேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், தென் தொரசானூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 30). இவர் மற்றும் 10 பெண்கள் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக நேற்று சேலம் வந்திருந்தனர். சேலத்தில் மளிகை பொருட்கள் வாங்கிய பிறகு சேலம் மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து புக்கிரவாரி செல்வதற்காக பெங்களூரு-காரைக்கால் ெரயிலில் ஏறினர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மகேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி விட்டார். இதுகுறித்து அவர் சேலம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






